கஜோலுடன் தனுஷ் செம்ம ஹேப்பி அண்ணாச்சி!

Posted By:
Subscribe to Boldsky

வி.ஐ.பி பாகம் ஒன்றின் வெற்றியை தொடர்ந்து, தனது சொந்த கதை, வசனத்தில், சௌந்தர்யா ரஜினிகாந்தின் திரைக்கதை, இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்திருக்கும் படம் வி.ஐ.பி - 2.

இம்முறை நடிகை கஜோல் கைகோர்த்துள்ளார். எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கும் இந்த படத்தை முழுவீச்சில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.

போகும் இடமெல்லாம் மீடியா கண்களில் கச்சிதமாக ஈர்ப்பு பெற்று வருகிறார் நடிகை காஜோல். கடந்த சில தினங்களாக மும்பையில் இந்தி பதிப்பிற்காக பிரமோஷன் வேலைகள் செல்கின்றனர்.

அதிலும் கிளாஸ் லுக்கில் தனுஷும், ஸ்டைலிஷ் லுக்கில் கஜோலும் கலந்துக் கொண்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கஜோல்!

சிவப்பு நிற லாங் கவுன் உடையில், சாண்டல் நிற ஃப்ளவர் பிரிண்டட் உடையில் கஜோல். உடைக்கு ஏற்ப சிவப்பு நிற லிப்ஸ்டிக் இட்டிருந்தார். இறகுகளால் ஆன நீல நிற காதணியும் அணிந்திருந்தார்.

தனுஷ் அன்ட் கோ!

தனுஷ் பிரவுன் நிற சூட்டிலும், கஜோல் கருப்பு நிற உடையிலும், சௌந்தர்யா ரஜினிகாந்த் பிரவுன் நிற லாங் டிரஸ்-லும் வந்திருந்தனர்.

இவர்கள் பேட்டிக்காக காத்திருந்த போது எடுத்த படங்கள்.

ப்ரமோஷன்

கிரே நிற சூட்டில் தனுஷ் மற்றும் பிங்க் நிற உடையில் கஜோல் வி.ஐ.பி-2 ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது. உடன் பிரவுன் நிற உடையில் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

ஏர்போர்ட்

கேசுவல் ப்ளூ ஜீன்ஸ் மற்றும் ஒயிட் ஷர்ட்டில் தனுஷ். ப்ரமோஷன் நிகழ்வில் கலந்து கொள்ள ஏர்போர்ட்-ல் இருந்து வெளியேறும் போது. உடன் கிரே நிற டீ-ஷர்ட் மற்றும் கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து இயக்குனர் சௌந்தர்யா.

ரகுவரன் - வசுந்திரா

ஹீரோ ரகுவரன் மற்றும் வில்லி வசுந்திரா ஒன்றாக ப்ரமோஷன் நிகழ்வில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த போது. இம்முறை இந்தியிலும் நேரடியாக போட்டிக்கு இறங்கியிருக்கும் வி.ஐ.பி.-க்கு முழு பலமாக இருக்கப் போவது கஜோல். நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழுக்கு வந்திருக்கும் கஜோல் இனி தொடர்ந்து இங்கே நடிப்பாரா என்பதை இப்படத்தின் வெற்றி தான் தீர்மானிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dhanush, Kajol and Soundarya Rajnikanth in VIP-2 Promotions!

Dhanush, Kajol and Soundarya Rajnikanth in VIP-2 Promotions!