Latest Updates
-
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க..
2021 பில்போர்டு இசை விருது விழாவிற்கு படுகவர்ச்சியான உடையில் வந்து கலக்கிய பிரபலங்கள்!
2021 பில்போர்டு இசை விருது விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் பல கண்கவர் மற்றும் கவர்ச்சிகரமான உடைகளில் வந்து பில்போர்டு இசை விருது விழாவை அழகாக்கினார்கள்.
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸின் மைக்ரோசாஃப்ட் தியேட்டரில் பில்போர்டு மியூசிக் விருது விழா நடைபெற்றது. இந்த இசை விருது விழாவிற்கு ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு வந்த நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் அட்டகாசமான மற்றும் வித்தியாசமான உடைகளில் வந்து கலக்கினார்கள்.

அதில் நடிகை பிரியங்கா சோப்ரா ஒட்டுமொத்த உடலும் தெரியுமாறான ஒரு ட்ரான்ஸ்பரண்ட் ஷீர் உடையை அணிந்து, தனது கணவருடன் ஜோடியாக வந்திருந்தார். இதுப்போன்று ஏராளமான பிரபலங்கள் பல கண்கவர் மற்றும் கவர்ச்சிகரமான உடைகளில் வந்து பில்போர்டு இசை விருது விழாவை அழகாக்கினார்கள். கீழே பில்போர்டு இசை விருது விழாவிற்கு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கேப்ரியல் யூனியன்
நடிகை கேப்ரியல் யூனியன் அழகான மிகவும் லோ நெக் கொண்ட வெள்ளை நிற கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த கவுனிற்கு கேப்ரியல் மேற்கொண்டு வந்த க்யூட்டான ஹேர் ஸ்டைல், அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.

டோஜா கேட்
பாடகியான டோஜா கேட் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களைக் கொண்ட பிரமாண்டமான ஸ்லீவ் கொண்ட டாப்ஸ் மற்றும் பேண்ட் அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் ஒரு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது.

பிங்க்
பாப் பாடகியான பிங்க் அடர் பிங்க் நிற V-நெக் கொண்ட கவர்ச்சிகரமான கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த விருது விழாவிற்கு பிங்க் தனது இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தார்.

சவீட்டி
சவீட்டி சிவப்பு கம்பளத்திற்கு வரும் போது பீச் நிற பல சுருக்கங்களைக் கொண்ட ஜியாம்பட்டிஸ்டா வள்ளி கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த கவுன் ஒரு ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

SZA
SZA மிகவும் கவர்ச்சிகரமான கட்அவுட் மோனோட் உடையை அணிந்து வந்திருந்தார். பில்போர்டு இசை விருது விழாவிற்கு வந்தவர்களிலேயே படுகவர்ச்சிகரமான உடையை அணிந்து வந்தவர் என்றால், அது இவராகவே இருக்கக்கூடும்.

கரோல் ஜி
இசையமைப்பாளரான கரோல் ஜி, பில்போர்டு இசை விருது விழாவிற்கு மின்னும் வெளிரிய நீற நிற ட்ரான்ஸ்பரண்ட் கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உண்மையிலேயே மிகவும் அட்டகாசமாக இருந்தது எனலாம்.

மெஷின் கன் கெல்லி மற்றும் மேகன் ஃபாக்ஸ்
பில்போர்டு இசை விருது விழாவிற்கு வந்திருந்த ஜோடிகளிலேயே மெஷின் கன் கெல்லி (MGK) மற்றும் மேகன் ஜோடி மிகவும் ரொமான்டிக்கான ஜோடி என்றே கூறலாம். அதுவும் மேகன் ஃபாக்ஸ் அணிந்து வந்த கருப்பு நிற கட்அவுட் உடை மற்றும் ஷீர் ஸ்கர்ட் வேற லெவலில் இருந்தது.

கெஹ்லானி
கெஹ்லானி அடர் சிவப்பு நிற பஃப் ஸ்லீவ்ஸ் மற்றும் கட்அவுட் ரெட் சீக்வின் பஸ்டியர் டாப் கொண்ட டோனி வார்டு கவுன் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
