Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
2022 தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமான உடைகளில் வந்து கலக்கிய பிரபலங்கள்!
2022 ஆம் ஆண்டின் தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கு அற்புதமான உடைகளை அணிந்து வந்த பிரபலங்களின் ஃபோட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 67 ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருதுவிழா அக்டோபர் 09 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்த கொண்டனர். இதில் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

67 ஆவது பிலிம்பேர் விருது விழாவிற்கு வருகைத் தந்த பல பிரபலங்களும், இந்த சிவப்பு கம்பளத்தில் வரும் போது கண்களைக் கவரும் அட்டகாசமான உடைகளில் வந்திருந்தனர். கீழே 2022 ஆம் ஆண்டின் தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கு அற்புதமான உடைகளை அணிந்து வந்த பிரபலங்களின் ஃபோட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அபர்ணா பாலமுரளி
'சூரரைப் போற்று' நடிகையான அபர்ணா பாலமுரளி 67 ஆவது பிலிம்பேர் விருது விழாவிற்கு கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் காதுகளில் ஆபரணங்கள் எதுவும் அணியாமல், கழுத்தை ஒட்டியவாறான நகையை அணிந்து, சிம்பிளாக வந்திருந்தார்.

பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மின்னும் உடையை அணிந்து பிலிம்பேர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். இந்த உடைக்கு இவர் ஆபரணங்கள் எதுவும் அணியாமல், கொண்டை போட்டு வந்திருந்தார்.

பிரியாமணி
நடிகை பிரியாமணி பிலிம்பேர் விருது விழாவிற்கு பிங்க் நிற புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு எம்பிராய்டரி செய்யப்பட்ட ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்தது, அவரை இன்னும் கவர்ச்சிகரமாக வெளிக்காட்டியது.

தபு
நடிகை தபு அவர்களும் தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அவர் டிசைனர் அமித் அகர்வால் வடிவமைத்த பிங்க் நிற புடவையை அணிந்து வந்திருந்தார்.

சானியா அய்யப்பன்
மலையாள நடிகையான சானியா அய்யப்பன் 67 ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது ஹால்டர் நெக் கொண்ட அழகான கருப்பு மற்றும் வெள்ளை நிற கவுனை அணிந்து தேவதைப் போன்று காணப்பட்டார்.

சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி எந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போது பாரம்பரிய உடையான புடவையை அணிந்து வருவார். அதேப் போன்று தான் இந்த தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கும் கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற புடவை அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

சூர்யா-ஜோதிகா
'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதைப் பெற நடிகர் சூர்யா தனது மனைவியான நடிகை ஜோதிகாவுடன் வந்திருந்தார். இதில் சூர்யா கருப்பு நிற கோர்ட்-சூட் அணிந்து வந்திருந்தார். அதற்கு மேட்ச்சாக ஜோதிகா பலவண்ண வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற உடையை அணிந்து வந்திருந்தார்.

மாதவன்
நடிகர் மாதவன் 67 ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கு ஆலிவ் பச்சை நிற குர்தா அணிந்து, எப்போதும் போது அழகான கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
