Latest Updates
-
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம்
இணையத்தில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பாவனாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோசூட்!
தீபாவளி பண்டிகைக்கு பாவனா ஒரு அழகிய ஃபோட்டோசூட் எடுத்து, அதை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோசூட்டிற்கு பாவனா அம்சமாக லெமன்-க்ரீன் பட்டுப்புடவையை அணிந்திருந்தார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை பாவனா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சொல்லப்போனால் புன்னகையால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர் பாவனா. திருமணத்திற்கு பின் இவரை தமிழ் திரைப்படங்களில் காணமுடியாவிட்டாலும், சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு பாவனா ஒரு அழகிய ஃபோட்டோசூட் எடுத்து, அதை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோசூட்டிற்கு பாவனா அம்சமாக லெமன்-க்ரீன் பட்டுப்புடவையை அணிந்திருந்தார். இந்த பட்டுப்புடவைக்கு இவர் மேற்கொண்டிருந்த ஸ்டைல் இவரை இன்னும் அழகாக காட்டியது. கீழே நடிகை பாவனாவின் தீபாவளி ஃபோட்டோசூட்டின் போது எடுத்த ஃபோட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

லெமன் க்ரீன் பட்டுப்புடவை
இது தான் தீபாவளி ஃபோட்டோசூட்டின் போது பாவனா அணிந்திருந்த லெமன் க்ரீன் பட்டுப்புடவை. இந்த புடவைக்கு பாவனா முழங்கை அளவு ஸ்லீவ் கொண்ட கோல்டன் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த ஜாக்கெட் அணிந்திருந்தார். முக்கியமாக இந்த புடவையை இவர் அணிந்திருந்த விதம் அவருக்கு அழகிய தோற்றத்தைக் கொடுத்தது.

பாவனா மேக்கப்
பால் போன்ற நிறம் கொண்ட பாவனா கண்களின் அழகை கூட்டிக் காட்டும் வகையில், காஜல் போட்டு, கன்னங்களுக்கு லேசாக பிங்க் பிளஷ் அடித்து, உதட்டிற்கு வெளிரிய பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு, நெற்றியில் புடவைக்கு பொருத்தமான கோல்டன் நிற பொட்டு வைத்திருந்தது, இவரை இன்னும் அட்டகாசமாக காட்டியது.

ஹேர் ஸ்டைல்
பட்டுப்புடவைக்கு பாவனா மிகவும் அழகாக கொண்டை போட்டிருந்தது, இன்னும் சூப்பராக இருந்தது. அதிலும் கொண்டையைச் சுற்றி மல்லிகைப் பூ வைத்திருந்தது, ஒரு முழுமையைக் கொடுத்தது.

ஆபரணங்கள்
தற்போது புடவைக்கு ஆபரணங்கள் அணியாமல் இருப்பது ஃபேஷனாகிவிட்டது. அதற்கேற்ப பாவனாவும், இந்த பட்டுப் புடவைக்கு கழுத்தில் தாலியைத் தவிர ஆபரணங்கள் அதிகம் அணியாமல், காதுகளில் மட்டும் பெரிய கோல்டன் காதணியை அணிந்திருந்தார். இது சிம்பிள் லுக்கைக் கொடுத்தது.

அழகிய புன்னகை
பாவனாவிற்கு அழகே அந்த புன்னகையும், அழகிய கண்களும் தான். அதை நிரூபிக்கும் வகையில் எடுத்த போட்டோ தான் இது. உங்களுக்கு பாவனாவின் இந்த லுக் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications
