Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது நல்லதா? கெட்டதா? ஆய்வுகள் சொல்வது என்ன?
Hair Care Tips: தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது பாரம்பரியமாக நமது கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இது பொதுவாகவே உலகெங்கிலும் இருக்க கூடிய கலாச்சாரமும் கூட. நமது பரபரப்பான மற்றும் நவீன வாழ்க்கை முறையில் தலைக்கு தினசரி எண்ணெய் வைத்து கொள்வது கௌரவ குறைச்சலாகவும் சுயமரியாதைக்கு இழுக்காகவும் பார்க்கப்படுகிறது.
அதனால் எப்போதாவது தான் சிலர் தலைமுடிக்கு எண்ணெய் வைக்கிறார்கள். ஆனால் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதை நீங்கள் நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா? ஊட்டச்சத்து குறைபாடால் உடையக் கூடிய முனைகள் மற்றும் உச்சந்தலையில் அதிக அளவில் முடி உதிர்வு என நீங்க யோசிக்க முடியாத அளவிற்கு மோசமானதாக இருக்கும்.

அறிவியல் காரணம்
முடிக்கு எண்ணெய் தடவுவது பாதுகாப்பை கொடுப்பதோடு அதனை மென்மையாக்கும் தன்மையையும் கொண்டிருக்கிறது. இது முடியின் மேற்பரப்பில் ஒரு தடையை உருவாக்கி பாதுகாக்க உதவுவதோடு ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இதில் இருக்கும் மென்மை தன்மையை ஏற்படுத்தும் பண்பு இடைவெளியை நிரப்புவதால், முடியானது மென்மையாகவும் நெகிழ்வாகவும் இருப்பது போல தோன்றும். ஓரளவிற்கு எண்ணெய் மயிர்கால்கள் மற்றும் முடியின் தண்டு பகுதியில் ஊடுருவுவதால், சிறந்த கண்டிஷனர் ஆக செயல்பட்டு முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தலைக்கு தேவையான ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.
எண்ணெயின் பயன்
தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சியை குறைப்பதோடு முடி உதிர்வையும் தடுக்கிறது. இது நமது முடிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கி மயிர்கால்களை வலுப்படுத்துகிறது. மேலும், எண்ணெய் சுற்றுச்சூழலால் முடிக்கு ஏற்படும் சேதத்தில் இருந்தும் பாதுகாப்பளிக்கிறது. தொடர்ந்து தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பது ஆரோக்கியமான மற்றும் வலுவான முடியை பெற உதவுகிறது. இதனால் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் குறையும்.
பளபளப்பு இழப்பு மற்றும் வறட்சி அதிகரிப்பு
குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது எண்ணெய் தடவாமல் இருந்தால், தலைமுடி ஈரப்பதத்தை இழந்து வறட்சியாக காணப்படும். இதனால் அதிகளவில் முடி உடையவும் உதிரவும் துவங்கிவிடும். தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் பாதுகாப்பு இயற்கையாக ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. இதனால் நமது முடி ஆரோக்கியமாகவும் நமது மனதிற்கு நிறைவாகவும் தோற்றமளிக்கும். ஆனால் எண்ணெய் தடவாமல் தவிர்ப்பது முடியில் இயற்கையாக இருக்கும் பளபளப்பை குறைக்கும். எண்ணெய் முடியின் மேற்பரப்பை மென்மையாக்குவதால் ஒளியை சிறப்பாக பிரதிபலித்து தலைமுடியின் இயற்கை பளபளப்பை பாதுகாக்கிறது.
பிரச்சினைகள் மற்றும் பலவீனமான முடி
எண்ணெய் மயிர்கால்கள் மற்றும் தண்டுப்பகுதிக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த ஊட்டசத்துக்கள் இல்லாமல் மயிர்கால்கள் பலவீனமாகி முடியின் அடர்த்தி குறைந்து மெலிதல் மற்றும் நுனியில் ஏற்படும் பிளவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் முடியின் வளர்ச்சியை குறைத்து தலையின் தோல் பகுதியிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறைந்தது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு எண்ணெய் வைப்பது வறட்சி, உதிர்தல் மற்றும் பொடுகு போன்றவற்றை தடுக்கிறது. தலையில் வறட்சி ஏற்பட்டால் அது முடியின் வளர்ச்சியை குறைப்பது அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
எண்ணெயின் நன்மைகள்
எண்ணெய் தடவுவது முடியின் மேற்புறத்தை மென்மையாக்குவதால், சிக்காகும் வாய்ப்பு குறைவு. அதனால் முடி உடைவது குறையும். முடி ஒன்றோடு ஒன்று அதிகமாக சிக்காமல் இருப்பதால் முடி உதிர்வும் குறைவாக இருக்கும். இது புற ஊதா கதிர்கள், கடுமையான வானிலை மற்றும் மாசுபாடு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு ஆளாகும்போது, உங்க தலைமுடியின் பாதுகாப்பு அடுக்காக எண்ணெய் செயல்பட்டு, அதனால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.



Click it and Unblock the Notifications
