Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
குழந்தைக்கு சீக்கிரமாகவே முடி நரைப்பதை எப்படி தடுக்கலாம்? இதோ சில வீட்டு வைத்தியங்கள்..!
White Hair Remedies In Tamil: வயதான பிறகு முடி நரைப்பது சாதாரணமான விஷயம் என்றால் கூட சில குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே முடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. முடிகளில் போதுமான மெலனின் நிறமி இல்லாததால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
உச்சந்தலையில் உள்ள முடி செல்கள் வயதாகும் போது அதன் மெலனின் நிறமிகள் குறைந்து போவதால் முடி நரைக்க ஆரம்பிக்கிறது. சிலருக்கு முன்கூட்டியே நரைமுடி வருவதற்கு மோசமான வாழ்க்கை முறை காரணமாக அமைகிறது. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் இளம் வயதிலேயே நரைமுடி வரலாம். வைட்டமின் பற்றாக்குறையாலும் சிலருக்கு நரைமுடி பிரச்சினைகள் வரக்கூடும்.

குறிப்பாக வைட்டமின் பி12, வைட்டமின் டி மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் குறைவால் நரைமுடி பிரச்சினை வருகிறது. மேலும் தைராய்டு பிரச்சினைகள், இரத்த சோகை மற்றும் ஆக்ஸினேற்ற அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் முடி நரைப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே முடி நரைப்பதை தடுக்க வழிமுறைகள்:
கறிவேப்பிலை
கறிவேப்பிலைக்கு முடியை கரு கருவென வளர வைக்கும் பண்புகள் உள்ளன. ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை எடுத்து அதை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் தேவைக்கேற்ப தேங்காயெண்ணெயை எடுத்து ஒரு கனமான கடாயில் இட்டு சூடுபடுத்துங்கள்.
பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை அதில் இட்டு நன்றாக பொரியும் வரை காய்ச்ச வேண்டும். அதிலுள்ள நீர்ச்சத்துக்கள் நீங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த எண்ணெயை மட்டும் வடிகட்டி தலையில் தேய்த்து வாருங்கள். முடி கருப்பு நிறத்தில் அடர்த்தியாக வளரும்.
யோகார்ட் மற்றும் ஈஸ்ட்
தினமும் ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன் தயிர் கலந்து உங்கள் குழந்தைகள் குடித்து வர நரைமுடி பிரச்சினை சரியாகி விடும். இந்த தயிர் ஈஸ்ட் கலவை உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்க உதவுகிறது.
நெல்லிக்காய்
முன்கூட்டிய ஏற்படும் நரைமுடி பிரச்சினையை தடுக்க நெல்லிக்காய் சிறந்த ஒன்றாகும். நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வையுங்கள். பிறகு இந்த நெல்லிக்காய் எண்ணெயை உங்கள் குழந்தைகளுக்கு தேய்த்து வரலாம். அதே மாதிரி ஒரு நாள் இரவு முழுவதும் நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வையுங்கள். பிறகு அந்த தண்ணீரைக் கொண்டு கூந்தலை அலசி வாருங்கள். கூந்தல் அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளரும்.
நெல்லிக்காய் மற்றும் பாதாம் எண்ணெய்
நெல்லிக்காய் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து வாருங்கள். இரவு முழுவதும் இந்த எண்ணெயை ஊற வையுங்கள். இந்த எண்ணெயை உங்கள் குழந்தையின் தலைமுடிக்கு தேய்த்து வர நரைமுடி நீங்கும். இந்த எண்ணெய் முடியை வலுப்படுத்தவும், முடி அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
பசும்பால் வெண்ணெய்
பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெயில் இருந்து குழந்தையின் உச்சந்தலையை மசாஜ் செய்து வரலாம். வாரம் இருமுறை செய்து வரலாம். இது முன்கூட்டியே முடி நரைப்பதை போக்க உதவுகிறது. உங்கள் குழந்தை கடுமையான நரைமுடியால் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
குழந்தைகளுக்கு நரைமுடி பிரச்சினை ஏற்படக் காரணங்கள்
பரம்பரை
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நரைமுடி பிரச்சினை ஏற்படுவதற்கு பரம்பரை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. உங்கள் பரம்பரையில் யாருக்காவது இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் குழந்தையும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
பொடுகு
பொடுகுத் தொல்லை இருப்பவர்களுக்கு நரைமுடி பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால் நரைமுடி தோன்றும். எனவே முதலில் உங்கள் பொடுகு பிரச்சினைக்கு சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
நோய்கள் மற்றும் கோளாறுகள்
ட்யூபரஸ் ஸ்களீரோசிஸ் மற்றும் விட்டிலிகோய் போன்ற சில கோளாறுகள் முடிகளில் நிறமி இழப்பைத் தூண்டுகிறது. இந்த பிரச்சினைகளால் முடி நரைப்பதோடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வலிப்புத் தாக்கங்கள், கட்டிகள் போன்ற பல்வேறு அறிகுறிகள் தோன்றுகின்றன.
தைராய்டு பிரச்சினைகள்
தைராய்டு பிரச்சினைகளும் நரைமுடி பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இரத்தத்தில் அதிகளவு தைராய்டு காணப்பட்டால் குழந்தைகளுக்கு நரைமுடி பிரச்சினை உண்டாக வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications