Latest Updates
-
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்!
Skin Care Tips: முகத்தை ஜொலிக்க வைக்கும் காஸ்ட்லியான ஹைட்ரா ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா?
HydraFacial: இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு, வேலைப்பளு மற்றும் மனஅழுத்தத்தின் காரணமாக ஆண் பெண் இருபாலருக்கும் சிறு வயதிலியேயே முதுமை தோற்றம் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.
அவற்றை அவசரமாக சரி செய்து கொள்ளும் பொருட்டு அவர்கள் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். அங்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில ஃபேஷியல்களை செய்து கொள்கின்றனர்.

அதிலும் பிரபலமான மற்றும் காஸ்ட்லியான ஹைட்ரா ஃபேஷியலை வீட்டிலே செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அழகுக்கலை நிபுணர் மீனா வீட்டிலேயே இந்த காஸ்டலியான ஃபேஷியலை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று பகிர்ந்துள்ளார். ஹைட்ரா ஃபேஷியலை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டீமிங்
தண்ணீர் சிறிதளவு
செய்முறை:
ஸ்டீமிங் நமக்கு புதிதான ஒன்றல்ல. சளி என்றாலே நம் தலையில் கொட்டி வீட்டில் அம்மா நம்மை ஆவி பிடிக்க வைப்பார்கள். அது தான் ஸ்டீமிங். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை மிதமாக கொதிக்க வைத்து, ஆவி பிடித்து கொள்ளுங்கள்.
கிளென்சிங்
தேவையான பொருட்கள்:
பால் - 2 ஸ்பூன்
கிளிசரின் - 2 ஸ்பூன்
பஞ்சு - சிறிதளவு
செய்முறை:
உங்கள் ஃபேஸ் வாஷ் அல்லது சோப்பை கொண்டு நன்றாக முகத்தை கழுவி சுத்தமான துண்டை கொண்டு ஒற்றி எடுக்கவும். சிறிது நேரத்திற்கு முன்பு முகத்தை கழுவி இருந்தாலும், பேஷியலை செய்ய ஆரம்பிக்கும் போது முகத்தை கழுவி விட்டு துவங்கவும். பின் பச்சை பாலை எடுத்து கிளிசரினில் கலந்து, பஞ்சை அந்த கலவையில் நனைத்து நன்றாக அழுத்தி துடைக்கவும். மூக்கின் ஓரங்களிலும், கண்களை சுற்றியும், மற்றும் கருமை சேர்ந்திருக்கும் இடங்களிலும் நன்றாக அழுத்தி துடைத்து கொள்ளவும். முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த சரும செல்களை நீக்குவதில் பால் முக்கிய பங்காற்றுகிறது.
எக்ஸ்ஃபோலியேஷன்
தேவையான பொருட்கள்:
கடலை மாவு அல்லது மசூர் பருப்பு பொடி - 2 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் சருமம் உடையவர்கள் கடலை மாவையும், கடலை மாவு ஒத்துக் கொள்ளாத சருமத்தை உடையவர்கள் மசூர் பருப்பு பொடியையும் எடுத்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். பின் இந்த கலவையை கருமை அடர்ந்த பகுதி, மூக்கின் ஓரம் மற்றும் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் நன்கு தேய்க்கவும். இதை உலர விட வேண்டிய அவசியமில்லை. நன்கு தேய்த்தும் முகத்தை ஈர துணியால் நன்கு துடைத்து விடவும். இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி முக பொலிவை கொடுக்கும்.
மசாஜ்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் சாறு அல்லது பீட்ரூட் பொடி - 2 ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்
கிளிசரின் - 1 ஸ்பூன்
செய்முறை:
நன்றாக துருவி அரைத்து வடிகட்டிய பீட்ரூட் சாறு அல்லது பீட்ரூட் சாறு எடுக்க நேரம் இல்லாதவர்கள் பீட்ரூட் பொடியை எடுத்து கொள்ளவும். பின் மேலே சொன்ன பொருட்களை நன்றாக கலந்து, முகத்தில் 15-20 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து ஈர துண்டால் துடைத்து விடவும். மசாஜ் செய்வது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இந்த கலவையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஹைட்ராலிக் ஆசிட் உங்கள் முகத்தை பிரகாசமாக்குகிறது.
பேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்:
முல்தானி மட்டி (அ) ரோஜா இதழ் பொடி (அ) ரோஜா இதழ்கள் - 2 ஸ்பூன்
கிளிசரின் - 1 ஸ்பூன்
செய்முறை:
முல்தானி மட்டி அல்லது ரோஜா பொடி அல்லது அரைத்த ரோஜா இதழ் விழுதுடன் ஒரு ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் நன்கு பூசி உலர விடவும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். பின் சிறிதளவு ரோஸ் வாட்டர் அல்லது பாதம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை முகத்தில் தடவவும். இந்த ஃபேஷியல் உங்கள் சருமத்திற்கு புதுப்பொலிவையும், மென்மையான தோற்றத்தையும் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications

