Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க..
கர்ப்ப காலத்தில் பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
பெண்களின் உச்சகட்ட அந்தஸ்தை பெற்று தரக்கூடிய தாய்மை என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறலாம். அப்படி தாய்மை அடைந்த பெண்கள் தங்களுடைய கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும் ? எதை செய்ய வேண்டும்? என்பதில் எண்ணற்ற சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.
மேலும் கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்களுக்கு கேட்க முடியாத அளவு சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக உள்ளாடைகளில் பிராவை அணிகலமா? அல்லது வேண்டாமா? என்று நிறைய பேருக்கு சந்தேகங்கள் எழுகிறது.

இந்த சந்தேகத்தை நீங்கள் தீர்த்து கொள்ள இந்த கட்டுரையை நீங்கள் படிப்பதின் மூலம் தெளிவாக உங்கள் சந்தேகத்திற்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பெண்கள் உள்ளாடைகளை கர்ப்ப காலத்தில் இறுக்கமாக அணிவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அப்படி நீங்கள் இறுக்கமாக உள்ளாடைகளை அணிவதின் மூலம் உங்களுக்கு பிரசவத்திற்கு பிறகு சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தளர்வான உள்ளாடைகள் மற்றும் பிராவை நீங்கள் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும் என கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
மேலும் இந்த சமயத்தில் நீங்கள் தளர்வாக அணியும் உள்ளாடைகளின் மூலம் உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்தவிதமான உடல் நிலை பிரச்சனையும் ஏற்படாது. அதுவே டைட்டாக அணியும்போது சில பிரச்சனைகள் உண்மையாக ஏற்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இதற்கு காரணம் நீங்கள் அணியக்கூடிய உள்ளாடைகள் இறுக்கமாக இருப்பதால் அது உங்கள் மார்பகங்களில் பால் உற்பத்தியை தடுக்க ஒரு காரணியாக இருக்கும், என்பதால் பெரும்பாலான பெண்கள் அதை அணிய தயங்குகிறார்கள். எனவே இந்த பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள நீங்கள் தளர்வான பிரா அணிந்தால் போதுமானதாகும்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பகங்கள் இயல்பு நிலையிலிருந்து விரிவடையும் தன்மை ஏற்படும். அவை அவ்வாறு விரிவடைய ஏற்றவாறு பிரா இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மார்பகங்களை விரிவடைய கூடிய நிலையை நீங்கள் அணியும் டைட்டான பிரா விரிவடைய விடாமல் தடையை ஏற்படுத்தும்.
அது போலவே உள் பாவாடைகளை கர்ப்பிணிப் பெண்கள் கட்டும் போது தளர்வாக கட்டுதல் சிறப்பாக இருக்கும். இது உங்கள் கர்ப்பப்பை எளிதில் விரிவடைவதற்கு உதவி செய்யும். எனவே நீங்கள் கர்ப்ப காலத்தில் உள்ளாடைகள் மற்றும் பிரா அணிவதால் எந்த தவறும் இல்லை. எனினும் அணியக்கூடிய உள்ளாடைகள் டைட்டாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் கர்ப்ப காலத்தின் போது உள்ளாடைகள் அணிவதால் எந்த தவறும் இல்லை. ஆனால் அந்த உள்ளாடையானது பருத்தியில் ஆன ஆடையாகவும், தளர்வான ஆடையாகவும் இருப்பது மிகவும் அவசியம்.
நீங்கள் உடுத்தும் உள்ளாடை மற்றும் பிராவை தினமும் சுத்தமாக துவைத்து போடுவது மிகவும் அவசியம் .ஏனெனில் கர்ப்ப காலத்தில் தொற்றுகள் எளிதில் பரவுவதோடு, மட்டுமல்லாமல் எளிதில் தாக்கும் தன்மையும் கொண்டு இருப்பதால் தன் சுகாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனவே மேற்கூறிய கருத்துக்களை உங்கள் மனதில் வைத்து கொண்டு நீங்கள் கர்ப்பமாக இருக்கக்கூடிய சமயத்தில் தேர்ந்தெடுக்கக் கூடிய உள்ளாடைகள் மற்றும் பிரா சற்று லூசாக அணிந்து கொள்வதால் எந்தவிதமான பாதிப்புகளும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏற்படாது.



Click it and Unblock the Notifications

