Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்க முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க...!
பெண்கள் அனைவருக்கும் தங்களின் முடி அழகாகவும், அடர்த்தியாகவும், , மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.. ஆனால் தற்போது உள்ள மாசுபாடு காரணமாகவும் தவறான உணவுப்பழக்கம் காரணமாகவும், பல பெண்கள் உலர்ந்த மற்றும் உயிரற்ற கூந்தலால் சிரமப்படுகிறார்கள்.
கூந்தலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற பலவிதமான ஹேர் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகும், முடி வளரவில்லை என்று பெண்கள் ஆதங்கப்படுகின்றனர்.. முடி மீது விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர அவர்களுக்கு நல்ல மற்றும் சரியான பராமரிப்பு தேவை. அதற்கு என்ன செய்யணும் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

மாட்கெட்களில் கிடைக்கும் ரசாயன பொருட்களைப் பயன்படுத்தாமல் உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் நல்ல அடர்த்தியாகவும் மாற்றலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கறிவேப்பிலை, வெந்தயம், தயிர் சேர்த்து ஹேர் மாஸ்க் செய்யவும்... இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்கள்..
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
வெந்தய விதைகள் - 2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
செய்யும் முறை
1. முதலில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.. அடுத்த நாள், ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தய விதைகளை புதிய கறிவேப்பிலையுடன் சேர்த்து கலக்க வேண்டும்..
2. வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை விழுதுடன் தயிர் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட்-ஐ தயாரிக்க வேண்டும்.. இப்போது இந்த கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும்.
3. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த சில நிமிடங்களுக்கு உங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
4. உங்கள் தலைமுடியில் ஹேர் மாஸ்க்கை 1 மணி நேரம் விடவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை நன்கு அலசவும்.. தேவைப்பட்டால் ஷாம்புவும் போட்டு அலச வேண்டும்..
ஹேர் மாஸ்க்கின் நன்மைகள்
1. கறிவேப்பிலை மற்றும் வெந்தய விதைகளில் புரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இந்த கலவையை உச்சந்தலையில் தடவினால் முடி வலுவடைந்து, உடைவது நின்றுவிடும்.. இதனால் முடி உதிர்தல் பிரச்சனை குறையும்..
2. கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில் வெந்தய விதைகள் அவற்றின் உயர் புரத பண்புகளை கொண்டுள்ளன.. இது இது முடியை நன்கு ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
3. தயிர் உங்கள் உச்சந்தலையில் இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. இது முடியை ஈரப்பதமாக்குகிறது மற்றும் மென்மையாக்குகிறது. இது முடி உதிர்வை குறைத்து பொலிவை அதிகரிக்க உதவுகிறது.
4. வெந்தய விதைகளில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பொடுகை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உச்சந்தலையை சாஃப்டாக மாற்றுகிறது..
5. இந்த ஹேர் மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தினால் முடிகளுக்கு நன்கு உச்சந்தலையில் ஊட்டமளிக்கும்.. இது முடியை வலிமையாக்கும்..



Click it and Unblock the Notifications