Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
வாரம் 3 முறை.. இந்த எண்ணெயை நைட்-ல தலையில் தடவி மசாஜ் செஞ்சு தூங்குங்க.. தலைமுடி வேகமா வளரும்...
Hair Oils For Hair Growth In Tamil: ஒருவரது அழகை தலைமுடி மேம்படுத்திக் காட்டும். இப்படிப்பட்ட தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க எண்ணெய் பெரிதும் உதவி புரியும் என்பதை அனைவரும் அறிவோம். அதனால் தான் நம் பாட்டிமார்களும், தாய்மார்களும் தினமும் தலைக்கு எண்ணெய் தடவ சொல்வார்கள். அதோடு வாரம் ஒருமுறை எண்ணெய் குளியலை எடுக்க வைப்பார்கள்.
ஆனால் தற்போது இப்படி தலைக்கு எண்ணெய் தடவுவது குறைந்துவிட்டது. இதனால் தலைமுடிக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்காமல் தலைமுடியின் வளர்ச்சி குறைவாக உள்ளது. உங்களுக்கும் தலைமுடி வளர்வதில்லையா? அப்படியானால் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க எண்ணெய் தடவுங்கள். அதுவும் இரவு தூங்கும் முன் எண்ணெய் மசாஜ் செய்து தூங்கினால், தலைமுடி இன்னும் வேகமாக வளரும் என்பது தெரியுமா?

சரி, எந்த எண்ணெயை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். கீழே தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எண்ணெய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணெய்களை வாரத்திற்கு 3 முறை தலையில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
1. தேங்காய் எண்ணெய்
பல நூற்றாண்டுகளாக தலைமுடியைப் பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வரும் எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய். இந்த எண்ணெய் தலைமுடிக்குள் ஊடுருவி, புரோட்டீன் இழப்பை தடுக்கிறது மற்றும் முடி உடைவதைக் குறைக்கிறது. அதோடு இந்த எண்ணெய் பொடுகை எடுத்துப் போராடவும் உதவுகிறது. இந்த தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
2. விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயில் ரிசினோலியிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரண்டும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டவும், முடியின் வேர்கால்களை வலுப்படுத்தவும், முடி மெலிவதைத் தடுக்கவும் உதவுகின்றன. இந்த விளக்கெண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
3. நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காய் எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இது தலைமுடியை வலுப்படுத்தவும், நரைமுடியைத் தடுக்கவும், முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இந்த நெல்லிக்காய் எண்ணெயை இரவு தூங்கும் முன் தலையில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி அடிக்கடி தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
4. ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த ஆலிவ் ஆயிலை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது, அது தலைமுடி ஆழமாக மென்மையாக்குவதோடு, முடி பிளவுபடுவதைக் குறைக்கிறது மற்றும் முடியின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இப்படிப்பட்ட ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
5. வெங்காய எண்ணெய்
வெங்காய எண்ணெயில் சல்பர் அதிகமாக உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தும். மேலும் இது தலைமுடி உதிர்வதைக் குறைக்கவும், முடியின் வளர்ச்சியை ஊக்கமளிக்கவும் உதவுகிறது. அதற்கு வெங்காய எண்ணெயை இரவு தூங்கும் முன் தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்கள் அனைத்தும் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சிறந்தவை. உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ, அதை தேர்வு செய்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
