Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
1 ஸ்பூன் அரிசி மாவு இருந்தா.. இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. கருமை நீங்கி முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கும்..
Skin Care Tips In Tamil: தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக வெளியே சென்றாலே சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, முகப்பொலிவு குறைந்து, முகம் டல்லாகவும், கருப்பாகவும் காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சருமத்திற்கு தினமும் போதுமான பராமரிப்புக்களை கொடுக்காமல் இருந்தால், பின் முகத்தில் ஒருவித கருப்பு படிந்துவிடும்.
இதைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் சருமத்தில் உள்ள அழுக்கை போக்கும் விஷயங்களை இரவு தூங்கும் முன் மேற்கொள்ள வேண்டும். அதுவும் முகத்தில் உள்ள அழுக்கை போக்கவும், முகப்பொலிவை அதிகரிக்கவும் ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த ஃபேஸ் பேக்குகளை நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே போடலாம். அதுவும் வீட்டில் அரிசி மாவு இருந்தால், இன்னும் சூப்பரான ஃபேஸ் பேக்குகளை போடலாம். கீழே சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவும் டாப் 5 அரிசி மாவு ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அரிசி மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 டீஸ்பூன் பிரஷ் க்ரீம் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.
2. அரிசி மாவு, ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வர, நல்ல பலனைப் பெறலாம்.
3. அரிசி மாவு, கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் துருவிய வெள்ளரிக்காயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை போடலாம்.
4. அரிசி மாவு மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை தினமும் கூட பயன்படுத்தலாம்.
5. அரிசி மாவு மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 தக்காளியின் சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தி தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை தினமும் ஒருமுறை போட்டு வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications