முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க..

DIY Face Wash In Tamil: தற்போது சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்ற ஏராளமான கெமிக்கல் கலந்த ஃபேஸ் வாஷ்கள் விற்கப்படுகின்றன. அதுவும் ஒவ்வொருவரின் சரும வகைக்கேற்ப ஃபேஸ் வாஷ்கள் விற்கப்படுகின்றன. ஆனால் இந்த ஃபேஸ் வாஷ்கள் அனைவருக்குமே நல்ல பலனைத் தந்துவிடுவதில்லை. சிலருக்கு அவற்றில் உள்ள குறிப்பிட்ட கெமிக்கல்கள் அழற்சி, வறட்சி, பருக்கள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இந்நிலையில் இத்தகையவர்கள் இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதே சிறந்த வழி.

Top 5 DIY Face Wash For Healthy And Glowing Skin

என்னது நேச்சுரல் ஃபேஸ் வாஷ்ஷா என்று பலரும் ஆச்சரியப்படலாம். நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்த அருமையான ஃபேஸ் வாஷ்களை தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவாவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். கீழே டாப் 5 நேச்சுரல் ஃபேஸ் வாஷ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. கடலை மாவு

* இந்த ஃபேஸ் வாஷ்ஷிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி மென்மையாக 1-2 நிமிடம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் வாஷ் எண்ணெய் பசை அல்லது நார்டல் ஸ்கின் கொண்டவர்களுக்கு ஏற்றது.

2. தேன்

* இந்த ஃபேஸ் வாஷ்ஷிற்கு முகத்தைக் கழுவ வேண்டும்.
* பின் தேனை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் வாஷ் வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது.

3. பால்

* காய்ச்சாத பால் சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்து, சருமத்திற்கு ஊட்டமளிக்கும். அதுவும் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு பொலிவளிக்கும்.
* அதற்கு காய்ச்சாத பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.
* இந்த ஃபேஷ் வாஷ் வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்தை கொண்டவர்களுக்கு ஏற்றது.

4. முல்தானி மெட்டி

* இந்த ஃபேஸ் வாஷ் தயாரிப்பதற்கு 1 டீஸ்பூன் முல்தானி மெட்டியை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

5. கற்றாழை ஜெல்

* கற்றாழை ஜெல் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
* அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த நேச்சுரல் ஃபேஷ் வாஷ் அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, August 19, 2026, 21:10 [IST]
Desktop Bottom Promotion