Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
ஒரு வாழைப்பழம் இருந்தா போதும்.. டல்லா இருக்குற முகத்தை பளிச்சுன்னு மாத்தலாம்.. எப்படின்னு பாருங்க..
Banana Face Packs For Glowing Skin: உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து டல்லாக இருக்கிறதா? தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாகவும், அதிகமாக வியர்ப்பதாலும் சருமத்தில் அழுக்குகள் அப்படியே படிந்துவிடுகிறது.
இப்படி சருமத்தில் படியும் அழுக்குகளை அவ்வப்போது முறையாக சுத்தம் செய்யாமல் இருந்தால், பின் அந்த அழுக்குகள் அப்படியே சருமத் துளைகளினுள் நுழைந்து, பலவிதமான சரும பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, முகத்தையும் கருமையாக பொலிவிழந்து காட்டும்.

இந்நிலையில் சருமத்தை எப்போதும் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். அதுவும் ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, முகமும் பளிச்சென்று பிரகாசமாக ஜொலிக்கும்.
குறிப்பாக விலைக்குறைவில் கிடைக்கும் வாழைப்பழத்தைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தாலே சருமத்தை உடனடியாக பிரகாசமாக்கலாம். கீழே சருமத்திற்கு உடனடி பொலிவைத் தர உதவும் சில வாழைப்பழ ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை ஒரு பௌலில் துண்டுகளாக்கி போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரில் ஒருமுறை முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2-3 முறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பாதி வாழைப்பழத்தை மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2-3 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதிக எலுமிச்சை சாற்றினை சேர்க்க வேண்டாம். இல்லாவிட்டால் சருமத்தில் அரிப்பை சந்திக்க நேரிடும்.
* அதன் பின் அவற்றை நன்கு கலந்து, வேண்டுமானால் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பாதி வாழைப்பழத்தை மசித்து அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரில் ஒருமுறை முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சிறந்த பலனைப் பெறலாம்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த 1/2 வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த 1/2 வாழைப்பழத்தை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர் மற்றும் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் எண்ணெய் சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications