Latest Updates
-
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க..
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
DIY Rose Face Packs In Tamil: சரும அழகை இயற்கையான முறையில் மேம்படுத்தவே அனைவரும் விரும்புவோம். அதற்காக சருமத்திற்கு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க், ஸ்க்ரப் என பல சரும பராமரிப்புக்களையும் மேற்கொள்வோம். அதுவும் இதற்கு நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்களை பயன்படுத்துவோம். அந்த வகையில் சருமத்தின் நிறத்தையும், ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த உதவும் ஒரு பொருள் தான் ரோஜாப்பூ. ரோஜாவில் உள்ள சேர்மங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கவும், சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கவும் உதவும்.

எனவே உங்கள் முகம் பொலிவிழந்து கருமையாகவும், சோர்ந்தும் காணப்பட்டால் ரோஜாப்பூ அல்லது அதன் பொடியைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். அதுவும் அத்துடன் குறிப்பிட்ட சில பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக் போடும் போது, இன்னும் சிறப்பான பலனைப் பெறக்கூடும். உங்களுக்கு ரோஜாப்பூக்களைக் கொண்டு எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சருமத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் சில ரோஜாப்பூ ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ரோஸ் பவுடர் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஜாப்பூ பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை மென்மையாக தேய்த்துக் கழுவ வேண்டும்.
2. ரோஸ் பவுடர் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ரோஜாப்பூ பவுடரை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. செம்பருத்தி பவுடர் மற்றும் ரோஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் ரோஜாப்பூ பவுடரை சேர்க்க வேண்டும்.
* பின்பு 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
