தலைமுடி அடர்த்தியா வேகமா வளரணுமா? அப்ப வாரம் 2 முறை விளக்கெண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..

Castor Oil Hair Masks: தற்போது தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை நிறைய பேர் சந்திக்கின்றனர். அதில் முக்கியமாக தலைமுடி உதிர்வால் ஏராளமானோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் தலைமுடி அதிகமாக உதிர்வதாக உணர்ந்தால், அதை நிறுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமுடி மெலிந்து போகத் தொடங்கி, நாளடைவில் வழுக்கை ஏற்படத் தொடங்கிவிடும்.

தலைமுடி உதிர்வதை தடுப்பது எப்படி என்று கேட்கலாம். பொதுவாக ஒருவருக்கு தலைமுடியானது அதிக மன அழுத்தம் கொள்வதால், தலைமுடிக்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் இருந்தால் உதிரத் தொடங்கும். இந்நிலையில் மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடுவதோடு, தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் மனம் சற்று அமைதியடையும்.

Top 3 Castor Oil Hair Masks For Hair Growth

அதோடு தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் பொருட்களைக் கொண்டு ஹேர் பேக்குகளை போட்டு வந்தால், முடி உதிர்வது நிற்பதோடு, முடியின் வளர்ச்சியும் அடர்த்தியாக இருக்கும். தலைமுடியின் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் பெரிதும் உதவி புரியும். அந்த விளக்கெண்ணெய் கொண்டு ஹேர் மாஸ்க்குகளை போட்டு வந்தால், முடி நன்கு வளர்ச்சியடையும். இப்போது முடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் 3 விளக்கெண்ணெய் ஹேர் பேக்குகளைக் காண்போம்.

1. விளக்கெண்ணெய், டீ-ட்ரீ ஆயில் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்

இந்த ஹேர் மாஸ்க் ஸ்காப்பிற்கு புத்துணர்ச்சியை அளிக்கவும், தலைமுடி அதிகம் வறண்டு போவதையும், முடி உடைவதையும் தடுக்கும். மேலும் இந்த ஹேர் மாஸ்க் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அளித்து, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

தேவையான பொருட்கள்:

* விளக்கெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கற்றாழை ஜெல் - 1/2 கப்
* டீ-ட்ரீ ஆயில் - 2-3 துளிகள்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு பௌலில் விளக்கெண்ணெயுடன் கற்றாழை ஜெல்லை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, ஷவர் கேப்பை தலையில் அணிந்து, 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 2 முறை பயன்படுத்தி வர, முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

2. விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் வெந்தய ஹேர் மாஸ்க்

இந்த ஹேர் மாஸ்க் தலை முடியை மென்மையாக வைத்துக் கொள்வதோடு, முடி உடைவதைத் தடுக்கும். மேலும் இந்த ஹேர் மாஸ்க் தலைமுடிக்கு வேண்டிய சத்துக்களைக் கொண்டுள்ளதால், இது தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

தேவையான பொருட்கள்:

* விளக்கெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெந்தய பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* பாதாம் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு பௌலில் வெந்தய பவுடரை எடுத்து, விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியின் வேர் முதல் நுனிப்பகுதி வரை தடவ வேண்டும்.
* அதன் பின் ஒரு டவலை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து, அந்த டவலை தலையில் சுற்றி, 10-15 நிமிடம் கட்ட வேண்டும்.
* இப்படியே ஒரு 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கின் முழு பலனைப் பெற விரும்பினால், வாரத்திற்கு 2 முறை இந்த ஹேர் மாஸ்க்கைப் போடுங்கள்.

3. விளக்கெண்ணெய், தேன் மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்

இந்த ஹேர் மாஸ்க்கில் விளக்கெண்ணெயுடன் முட்டை சேர்ந்திருப்பதால், இது தலைமுடியை வலுப்படுத்தி, முடி உடைவதையும், முடிகளின் முனைகளில் ஏற்படும் பிளவுகளையும் தடுத்து, தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:

* விளக்கெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 1

பயன்படுத்தும் முறை:

* முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் தேன் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியின் வேர் முதல் நுனிப்பகுதி வரை தடவ வேண்டும்.
* பின் தலையை ஷவர் கேப் கொண்டு மூடி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

FAQs
விளக்கெண்ணெய் தலைமுடிக்கு எவ்வாறு நன்மை அளிக்கிறது?

விளக்கெண்ணெய் தலைமுடிக்கு நீரேற்றத்தை வழங்குவதன் மூலமும், முடி உதிர்தலைக் குறைப்பதன் மூலமும், மயிர்கால்களை வலுப்படுத்துவதன் மூலமும், முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலமும் நன்மை பயக்கும்.

விளக்கெண்ணெயை தலைமுடியில் பயன்படுத்துவதால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?

விளக்கெண்ணெய் பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், சிலருக்கு ஒவ்வாமை அல்லது எரிச்சல் ஏற்படலாம், எனவே முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

தலைமுடிக்கு எத்தனை முறை விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம்?

பொதுவாக தலைமுடிப் பராமரிப்பில் சிறந்த முடிவுகளைப் பெற, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம்.

 

BoldSky Lifestyle

Desktop Bottom Promotion