Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
எப்பவும் டல்லா இருக்க முகம் தகதகன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த சம்மர் ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க!
ஆரோக்கியமான மற்றும் இயற்கையான பளபளப்பைக் கொண்ட சருமத்தை பெற வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமாக இருக்கும். உங்கள் சரும தோற்றம் என்பது அழகோடு மட்டுமல்லாது, நம்பிக்கையுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. எனவே, பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை அடைய இயற்கை வழிகளை முயற்சி செய்வது நல்லது.
கொளுத்தும் கோடை வெப்பம் உங்கள் சருமத்தின் பொலிவை நீக்கிவிடும். அதை மீண்டும் கொண்டு வந்து உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்க, பழங்கள் உங்களுக்கு உதவும். இயற்கையான பிரகாசத்திற்கு, உங்கள் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கும் கோடைக்கால பழங்கள் உள்ளன.

அவை உங்கள் முகத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கும். சூரியன் மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.
வீட்டிலேயே நீங்கள் செய்யக்கூடிய சில பழ ஃபேஸ் மாஸ்க்குகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பழங்களை எவ்வாறு பயன்படுத்துவது?
அதிகமான பழங்களை சாப்பிட கோடைக்காலம் சரியான பருவமாகும். பழங்கள் சுவையாகவும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகின்றன. ஏனெனில் அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு ஊட்டமளித்து புத்துயிர் அளிக்கின்றன.
தர்பூசணி ஃபேஸ் பேக்
தர்பூசணி ஒரு நீர்ச்சத்து நிறைந்த பழம். வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த இந்த பழம், ஒரு இயற்கையான டோனராக செயல்படவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. உங்கள் சருமத்தை பிரகாசிக்க வைக்கும் தர்பூசணி ஃபேஸ் பேக் செய்ய, தர்பூசணியை துண்டுகளாக வெட்டி, அவற்றை கூழாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த கூழுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்போது பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை நீங்கள் பெறலாம்.
பப்பாளி ஃபேஸ் பேக்
பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பப்பாளியில், பப்பெய்ன் என்ற நொதி உள்ளது. இது சருமத்தை பிரகாசிக்க வைக்க உதவுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பப்பாளி சருமத்திற்கு ஊட்டமளித்து புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.
புத்துணர்ச்சியூட்டும் பப்பாளி ஃபேஸ் பேக்கிற்கு, பழுத்த பப்பாளியை சில துண்டுகளாக வெட்டி, அவற்றை கூழாக அரைத்துக்கொள்ளவும். அந்த கலவையில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்போது, உங்கள் தோல் மென்மையாகவும், பிரகாசமாகவும், இளமையாகவும் இருக்கும்.
மாம்பழ ஃபேஸ் பேக்
பருவகால பழமான மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. கூடுதலாக, இது சருமத்தை ஹைட்ரேட் மற்றும் ஊட்டமளிக்கும் இயற்கை சர்க்கரைகளைக் கொண்டுள்ளது.
மாம்பழ ஃபேஸ் பேக்கின் பலன்களை பெற, பழுத்த மாம்பழத்தை துண்டுகளாக வெட்டி அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி, உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவும்போது, மென்மையான, மிருதுவான சருமத்தை நீங்கள் பெறலாம்.
ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக்
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை பளபளப்பாக மாற்றவும், மெல்லிய கோடுகள் மற்றும் சரும சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும் உதவுகின்றன.
பழுத்த சில ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து, கூழ் போல் அரைத்துக்கொள்ளவும். அரைத்த கூழுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஓட்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
அன்னாசி ஃபேஸ் பேக்
அன்னாசிப்பழம் ஒரு வகையான வெப்பமண்டல பழமாகும். இதில் உள்ள அதிக ப்ரோமைலைன் உள்ளடக்கம், கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளின் தோற்றத்தைக் குறைக்கும் அதே வேளையில், சருமத்தை உரிந்து பிரகாசமாக்க ஜொலிக்க வைக்கிறது.
புத்துணர்ச்சியூட்டும் அன்னாசிப்பழ ஃபேஸ் பேக் செய்ய, பழுத்த அன்னாசிப்பழத்தின் சில துண்டுகளை எடுத்து கூழாக அரைத்துக்கொள்ளவும். கூழுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதை உங்கள் கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்கள் தோல் மிருதுவாகவும், மேலும் பிரகாசமாகவும் இருக்க இந்த ஃபேஸ் பேக் உதவும்.
கோடைகால பழங்களால் செய்யப்பட்ட இந்த ஐந்து ஃபேஸ் பேக்குகள் உங்கள் சருமத்தை பொலிவாக்கவும் புத்துணர்ச்சியூட்டவும் சிறந்த வழியாகும். இந்த பேக்குகள் செய்ய எளிதானவை. எனவே, நீங்களும் இந்த பழங்களைக் கொண்டு, வீட்டிலேயே ஃபேஸ் பேக்குகள் தயாரித்து உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கலாம்.



Click it and Unblock the Notifications


