For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் மிக அதிகமாக வறண்டு இருக்கும் சருமத்தை சரிசெய்வதற்கான சில வழிகள்!

குளிர்காலத்தில் உங்களுடைய சருமம் அதிக வறட்சியுடன் இருக்கிறதா? ஆம், என்றால் உங்கள் சருமத்திற்கு கூடுதல் பராமரிப்பு அவசியம்.

|

குளிர்காலம் தொடங்கியவுடன் நமது சருமம் வறண்டு போக தொடங்குகிறது. வறண்ட சருமத்தில் ஒருவித அரிப்பு, இறுக்கம் ஆகியவை தோன்றும், இது நாளடைவில் சருமத்தில் சுருக்கம் ஏற்பட வழிவகுக்கும். இந்த குளிர்காலத்தில் உங்களுடைய சருமம் அதிக வறட்சியுடன் இருக்கிறதா? ஆம், என்றால் உங்கள் சருமத்திற்கு கூடுதல் பராமரிப்பு அவசியம்.

Ways To Treat Extremely Dry Skin In Winters

வறண்ட சருமத்தை எதிர்த்து போராட சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் இதனை தொடர்ந்து முயற்சித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்நீரில் குறைந்த நேரம் குளிக்கவும்

வெந்நீரில் குறைந்த நேரம் குளிக்கவும்

தினமும் 5-10 நிமிடங்கள் மட்டுமே குளிப்பதற்கான நேரம் ஒதுக்குங்கள். இதற்கு அதிகமான நேரம் குளித்துக் கொண்டே இருப்பதால் சருமத்தின் எண்ணெய் தன்மை அகற்றப்பட்டு சருமத்தின் ஈரப்பதம் குறையக்கூடும்.

தண்ணீர் மிகவும் சூடாக இருப்பதற்கு மாற்றாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும் . இதனால் உடலில் உள்ள இயற்கை எண்ணெய் இழக்கப்படாமல் இருக்கும்.

மாய்ஸ்சுரைசிங் சோப்பு பயன்படுத்தவும்

மாய்ஸ்சுரைசிங் சோப்பு பயன்படுத்தவும்

சோப்பு பயன்படுத்தும் அளவை குறைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மாய்ஸ்ச்சரைஸர் அடங்கியுள்ள டோவ், ஓலே, பேஸிஸ் போன்ற தயாரிப்புகளை பயன்படுத்தலாம் அல்லது சோப்பு இல்லாத க்ளென்சர் தயாரிப்புகளான கெட்டப்பில் (Cetaphil), அகுவானில் (Aquanil), ஆயிலாட்டம் - ஏடி (Oilatum-AD) போன்றவற்றை பயன்படுத்துவது குறித்து ஆலோசியுங்கள்.

கெமிக்கல் பொருட்களைத் தவிர்க்கவும்

கெமிக்கல் பொருட்களைத் தவிர்க்கவும்

டியோடரண்ட் சோப்பு, வாசனை திரவியம் சேர்க்கப்பட்ட சோப்பு, ஆல்கஹால் தயாரிப்புகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவை நிச்சயம் உங்கள் உடலில் உள்ள இயற்கை எண்ணெய்யை இழக்கச் செய்யும்.

எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி குளிப்பது நலன் பலனைத் தரலாம். இருப்பினும் அதனை பயன்படுத்துவதால் குளியலறை மிகவும் வழுக்கலாம் அல்லது பாத் டப் வழுக்கலாம் என்பதால் பயன்படுத்துவதில் அதிக கவனம் தேவை.

சருமத்தை தேய்க்காதீர்கள்

சருமத்தை தேய்க்காதீர்கள்

சருமத்தில் உண்டாகும் காயத்தைக் குறைக்க ஸ்பாஞ், ஸ்க்ரப் ப்ரஷ் , துணி போன்றவற்றை பயன்படுத்தி சருமத்தை தேய்ப்பதைத் தவிர்க்கவும். முற்றிலும் அவற்றைத் தவிர்க்க வேண்டாம் என்று நினைத்தால் அதனை மென்மையாக பயன்படுத்துங்கள். குளித்த பின்னர், இதே காரணத்திற்காகவே உங்கள் சருமத்தை மென்மையாக துடைத்து ஈரத்தை அகற்றுங்கள். சருமத்தை டவல் கொண்டு தேய்க்க வேண்டாம்.

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும்

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும்

குளித்து முடித்த பின்னர் அல்லது கைகளைக் கழுவிய பின்னர் உடனடியாக மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் சரும அணுக்கள் இடையில் உள்ள இடைவெளி குறைந்து ஈரப்பதம் தக்கவைக்கப்படும் . இதனால் சருமம் நல்ல நிலையில் பாதுகாக்கப்படும்.

பெட்ரோலியம் ஜெல்லி/க்ரீம்

பெட்ரோலியம் ஜெல்லி/க்ரீம்

சரும பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லி அல்லது இதர க்ரீம் பயன்படுத்துவதால் அந்த இடத்தில் ஒருவித ஒட்டும்தன்மை காணப்படும். ஆகவே அதனைக் குறைக்க ஒருசிறு அளவு பெட்ரோலியம் ஜெல்லி அல்லது க்ரீம் எடுத்து கையில் தடவி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதால் கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடம் ஆகியவை இரண்டுமே ஒட்டும்தன்மையுடன் இருக்காது.

கடுமையாக சொறியாதீர்கள்

கடுமையாக சொறியாதீர்கள்

சருமத்தை ஒருபோதும் சொறிந்துவிட வேண்டாம். பெரும்பாலான நேரங்களில் மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துவதால் அரிப்பு கட்டுப்படும். அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் குளிர் ஓத்தடம் கொடுப்பதால் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

பிற வழிகள்...

பிற வழிகள்...

* குளிர்காலம் மற்றும் கோடை காலம் ஆகிய இரண்டு காலங்களிலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

* ஷேவ் செய்வதற்கு முன்னர், சில நிமிடங்கள் முன்னதாவே ஷேவிங் க்ரீம் அலல்து ஜெல் போன்றவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஷேவ் செய்யவும்.

* துணிகளுக்கு வாசனையற்ற டிடர்ஜென்ட் பயன்படுத்தவும் மற்றும் பேப்பிரிக் சாப்ட்னர் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

* சருமத்திற்கு எரிச்சல் ஏற்படுத்தும் ஆடைகளான கம்பளி போன்றவற்றை அணிவதைத் தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Treat Extremely Dry Skin In Winters

Here are some ways to treat extremely dry skin in winters. Read on...
Desktop Bottom Promotion