Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த சரும பிரச்சனைகளை சந்திக்குறீங்களா? அப்ப நீங்க தவறான மாஸ்சுரைசரை யூஸ் பண்றீங்கன்னு அர்த்தம்...
உடலுக்கும், முகத்திற்கும் தனித்தனி மாய்ஸ்சுரைசர்கள் உள்ளன. ஒருவர் தவறான மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினால், அது பல சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.
தற்போது குளிர்காலம் என்பதால் நாம் அனைவருமே சரும வறட்சியை சந்திப்போம். சரும வறட்சியானது சரும அழகை கெடுப்பதோடு, முதுமை தோற்றத்தைத் தரும். சரும வறட்சி நீடிக்கும் போது சருமத்தில் வெடிப்புகள் ஏற்படத் தொடங்கும். இந்த சரும வறட்சியைப் போக்கவும், சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் தான் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவோம். ஒரு நல்ல மாய்ஸ்சுரைசரானது சரும வறட்சியைப் போக்குவதோடு, சருமத்திற்கு ஊட்டமளிக்கும். அதற்கு மாய்ஸ்சுரைசரை குளித்தவுடன், சருமத்தை உலர்த்தி பயன்படுத்த வேண்டும்.

உடலுக்கும், முகத்திற்கும் தனித்தனி மாய்ஸ்சுரைசர்கள் உள்ளன. ஒருவர் தவறான மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினால், அது பல சரும பிரச்சனைகளை உண்டாக்கும். இப்போது சருமத்திற்கு தவறான மாய்ஸ்சுரைசரைத் தடவினால், எந்த மாதிரியான சரும பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

முகப்பருக்கள்
உங்கள் சருமத்தில் பருக்கள் அதிகம் வருவதைக் கண்டால், உடனே நீங்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அது நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவில்லை என்பதன் முக்கிய அறிகுறி. உங்களுக்கு சென்சிடிவ் சருமம் அல்லது பருக்கள் அதிகம் வரும் சருமம் என்றால், லைட் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஜெல் அல்லது சீரம் வடிவிலான மாய்ஸ்சுரைசரையும் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசரில் கெமிக்கல்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

வறட்சி
மாய்ஸ்சுரைசர் பயன்படுத்திய பின்னரும் சருமத்தில் வறட்சியை சந்தித்தால், நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவில்லை என்று அர்த்தம். இந்நிலையில் நீங்கள் உங்கள் மாய்ஸ்சுரைசரை உடனே மாற்ற வேண்டும்.

எண்ணெய் பசை சருமம்
மாய்ஸ்சுரைசர் பயன்படுத்திய பின் உங்கள் முகம் எண்ணெய் வழிந்தவாறு காணப்பட்டால், நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவில்லை என்று அர்த்தம். மாய்ஸ்சுரைசரானது சரும வறட்சியைப் போக்க வேண்டுமே தவிர, எண்ணெய் வழியும் வகையில் இருக்கக்கூடாது. ஒருவேளை உங்கள் சருமத்தில் எண்ணெய் வழிந்தால், நீங்கள் நீர் வடிவிலான மற்றும் எண்ணெய் பசை இல்லாத மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

அரிப்புகள்
நீங்கள் உங்கள் சருமத்தில் மாய்ஸ்சுரைசரைத் தடவிய பின் அரிப்புக்களை சந்தித்தால், உடனே அந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். எப்போது ஒரு சரும பராமரிப்பு பொருள் சருமத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லையோ, அப்போது தான் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படும். இந்நிலையில் உடனே அந்த பொருளின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசரானது கெமிக்கல் அதிகம் இல்லாததாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், இத்தகையவர்கள் இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவதே நல்லது.

சிறுசிறு புள்ளிகள்
மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த பின் உங்கள் சருமத்தில் சீழ் நிறைந்த சிறுசிறு புள்ளிகள் தென்பட்டால், நீங்கள் தவறான மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். அதுவும் நீங்கள் உடலுக்கு பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசரை முகத்திற்கு பயன்படுத்தினால், இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications
