Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
சமந்தாவின் அழகின் ரகசியத்திற்கு இந்த ஒரு பொருள் தான் காரணமாம்.. நீங்களும் யூஸ் பண்ணுங்க..
நடிகை சமந்தாவின் அழகிற்கு ஒரு இயற்கை பொருள் தான் முக்கிய காரணமாம். அது என்ன தெரியுமா? அது தான் சந்தனம். இதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்குமே நடிகைகளின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். அந்த வகையில் தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. நடிகை சமந்தா ஃபிட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புபவர். அதற்காக பலவிதமான உடற்பயிற்சிகளை செய்வார் என்பது அவரது இன்ஸ்டா பக்கத்தை பார்த்தாலே தெரியும். அப்படிப்பட்ட நடிகை சமந்தாவின் அழகிற்கு ஒரு இயற்கை பொருள் தான் முக்கிய காரணமாம். அது என்ன தெரியுமா? அது தான் சந்தனம். இதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தனப் பவுடர் அழகை மேம்படுத்த போடப்படும் ஃபேஸ் பேக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் சந்தனத்தில் சரும செல்களை நல்ல அமைப்புன் பராமரிக்கத் தேவையான ஆன்டி-ஆக்ஸிட்ன்ட் அதிகம் உள்ளது. மேலும் சந்தனம் சரும வறட்சியைக் குறைக்கிறது மற்றும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சந்தனப் பொடியைக் கொண்டு பலவாறு முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம். அவற்றில் சில சந்தன ஃபேஸ் பேக் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. சரும வறட்சியைப் போக்கும் சந்தன ஃபேஸ் பேக்
உங்களுக்கு சருமம் அதிகம் வறட்சியடைகிறதா? அப்படியானால் இந்த சந்தன ஃபேஸ் பேக்கை போடுங்கள். இது சரும வறட்சியைத் தடுத்து, சருமத்தின் மென்மையை அதிகரிக்கும்.
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரால் கழுவி, நன்கு உலர்த்தியதும், மறக்காமல் மாய்ஸ்சுரைசரைத் தடவுகள்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

2. சரும கருமையைப் போக்கும் சந்தன ஃபேஸ் பேக்
உங்கள் முகம் கருப்பாக உள்ளதா? முகத்தில் உள்ள கருமையைப் போக்க ஒரு நல்ல ஃபேஸ் பேக்கை தேடிக் கொண்டிருந்தால், இந்த சந்தன ஃபேஸ் பேக்கை போடுங்கள்.
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை ஃபேஸ் பேக் போட்டு வந்தால் சரும கருமை நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

3. முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் சந்தன ஃபேஸ் பேக்
உங்கள் முகத்தில் முதுமைத் தோற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகிறதா? அப்படியானால் அதைப் போக்க இந்த சந்தன ஃபேஸ் பேக் உதவும்.
* ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications
