For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழத்தை முகத்தில் இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீங்க…

|

உடலில் உள்ள மிகப்பெரிய உணர்வு உறுப்பு என்றால் தோல் தான். நமது உடலில் மிக முக்கியமான ஒன்று என்றும் கூறலாம். நரம்பு மண்டலத்தை பாதுகாப்பது முதல், சீரான உடல்நிலையை பெற உதவுவது முதல் அனைத்திற்கும் சருமம் இன்றியமையாத ஒன்று. ஆனால், அத்தகைய சருமம் தான், பிற உறுப்புகள் அனைத்தை காட்டிலும், அதிகமாக பாதிக்கப்படுகிறது. ஆம், சுற்றுச்சூழல் மாசு தொடங்கி, தூசி, புகை, சூரியனின் புற ஊதாக்கதிர்கள் வரை அனைத்துமே, நேரடியாக முதலில் தாக்குவது சருமத்தை தான். இத்தகைய பாதிப்பில் இருந்து உங்கள் சருமத் காக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

பாடி லோசன் தொடங்கி, இன்னும் ஏராளமான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றேன் என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். சரி, நீங்கள் உபயோகிக்கும் க்ரீம் அல்லது லோசன், சிறந்தது தானா? அப்படி பார்த்தால், சந்தைகளில் கிடைக்கப்பெறும் அனைத்து பொருட்களையுமே சிறந்தது அல்ல என்று கூறி விட முடியுமா என்ற ஐயம் எழத்தான் செய்யும். அப்படி ஒன்று கூறவில்லை. சிறந்தது தானா என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்றை, விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதை காட்டிலும், நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே, நமது சருமத்தை பாதுகாப்பது மிகச் சிறந்தது அல்லவா?

கருப்பா இருக்கீங்களா? சீக்கிரம் வெள்ளையாகணுமா? இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க...

அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும், வீட்டு வைத்தியம் சிறந்த பலனை அளிக்கக்கூடியது. அந்த வகையில், இப்போது நாம் வாழைப்பழத்தை கொண்டு எப்படி சருமத்தை பராமரிப்பது என்று தெரிந்து கொள்ள போகிறோம். வாழைப்பழம் சாப்பிட மட்டும் சிறந்த பழம் அல்ல, சரும பராமரிப்பிற்கும் சிறந்தது. சருமத்திற்கு வாழைப்பழத்தை உபயோகிப்பதன் மூலம், மிருதுவான, இளமை தோற்றத்துடன் கூடிய, ஆரோக்கியமான சருமத்தை பெற்றிடலாம்.

உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? இதோ அதைப் போக்கும் சில வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்திட வாழைப்பழம் எப்படி உதவுகிறது?

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்திட வாழைப்பழம் எப்படி உதவுகிறது?

கடையில் வாங்கக்கூடிய அநேக அழகுசாதன அல்லது தோல் பராமரிப்புப் பொருட்களில் வாழைப்பழம் ஒரு பொதுவான மூலப்பொருளாக காணப்படுவது கிடையாது. ஏனெனில், பழத்தை உபயோகிப்பதன் காரணமாக அந்த குறிப்பிட்ட பொருட்களின் ஆயுள் காலம் குறையலாம். இருப்பினும், சிறந்த சருமத்தை பெற வேண்டுமென்றால், வாழைப்பழத்தை வீட்டு வைத்தியமாக சுலபமான முறையில் பயன்படுத்தலாம்.

வைட்டமின் ஏ உள்ளது

வைட்டமின் ஏ உள்ளது

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஒன்று. இது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. மேலும், வெளிப்புற காரணிகளால் ஏற்படக்கூடும் கருமையை நீக்கி, ஆரோக்கியமான பளபளப்பை உங்களுக்குத் தந்திடும்.

சரும வறட்சியைப் போக்கும்

சரும வறட்சியைப் போக்கும்

வாழைப்பழத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை உள்ளது. இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவிடும். இது சரும சுருக்கங்களை தவிர்க்கவும், முகப்பரு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கவும், சருமத்தை மென்மையாக்கவும் உதவிடக்கூடும்.

சரும பராமரிப்பிற்கு வாழைப்பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

சரும பராமரிப்பிற்கு வாழைப்பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

வாழைப்பழங்களை சரும பராமரிப்பிற்கு பயன்படுத்த ஏராளமான வழிகள் உள்ளன.

வழி #1

முதலில் ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து, பிசைந்து கொள்ளவும். கண்களைத் தவிர, முகத்தின் பிற பகுதிகளில் பிசைந்த வாழைப்பழ கலவையை நேரடியாக தடவவும். சுமார், 15-20 நிமிடங்களுக்கு அதனை அப்படி ஊற விட்டு, பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவிடவும்.

வழி #2

வழி #2

பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து பிசைந்து கொள்ளுங்கள். பின் அதில் காய்ச்சாத பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். பின் அதை முகத்தில் கருமை படிந்த இடத்தில் அதிக கவனம் செலுத்தி, அவ்விடத்தில் தடவுங்கள். இதனை ஒரே ஒரு முறை செய்து பாருங்கள் போதும், நீங்களே வித்தியாசத்தைக் காணலாம்.

வழி #3

வழி #3

சிறந்த ஈரப்பதத்தை பெற வேண்டுமானால், வாழைப்பழத்தோடு தேன் கலந்து பயன்படுத்தவும். இருப்பினும், எண்ணெய் பசை உள்ள சருமம் உடையவர்கள் இந்த கலவையை பயன்படுத்துவதை தவிர்த்திடவும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. குறிப்பாக குளிர்காலத்தில் இதனை செய்வது சருமத்திற்கு மிக மிக நல்லது.

வழி #4

வழி #4

நன்கு பிசைந்த வாழைப்பழத்துடன், எலுமிச்சை சாறு மற்றும் சிறிது கடலை மாவு சேர்த்து ஃபேஸ் பேக் பதத்தில் நன்கு கலந்து கொள்ளவும்.. தயார் செய்து கலவையை முகத்தில் ஃபேஸ் பேக்காக போடவும். அடைபட்ட சரும துளைகள், கரும்புள்ளி மற்றும் வெள்ளைப்புள்ளி பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது நன்கு உதவும்.

குறிப்பு

குறிப்பு

கைகள் மூட்டுகள், கால் மூட்டுகள், கழுத்து பகுதி போன்ற கருமையான சருமம் உள்ள உடல் பாகங்களில் வாழைப்பழத்தின் தோலை தேய்க்க நல்ல தீர்வு கிடைக்கும். நன்கு பிசைந்த பழுத்த வாழைப்பழத்தின் கலவையை, ஹேர் பேக்காக கூட பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Use Banana For Healthy, Glowing Skin

Want to know how to use banana for healthy and glowing skin? Read on...