Just In
- 23 min ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 5 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 15 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Don't Miss
- Movies
மாமனிதனை உங்களால் கொல்ல முடியாது.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சீனு ராமசாமி!
- News
படுக்கை அறை வரை நுழைந்த "கறுப்பு ஆடு"! இம்ரான் கானை கொல்ல பெரிய சதி? கடைசி நேரத்தில் பரபர சம்பவம்
- Sports
இந்திய அணியில் அதிகரிக்கும் கொரோனா.. டிரெஸிங் ரூம்மில் என்ன பிரச்சினை.. பயோ பபுள் இல்லாததால் சிக்கல்
- Finance
ரஷ்யாவின் ஒற்றை நடவடிக்கை.. 40 - 50 மில்லியன் மக்களை பசியில் ஆழ்த்தும்
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
கோடைக்காலத்தில் ஆண்கள் அழகாக இருக்க கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் அளவில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. வெளியே சென்றாலே சருமம் பொசுங்கிப் போகும் அளவில் வெயில் கொளுத்துகிறது. எனவே நாம் அனைவருமே கோடைகாலத்தில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க விரும்புவோம். ஆனால் வெயிலோ, மழையோ, புயலோ எதுவாயினும் வேலைக்கு வெளியே செல்ல வேண்டியுள்ளது. இதில் பெண்கள் தங்களின் சருமத்திற்கு தவறாமல் பராமரிப்புக்களை மேற்கொண்டு வருவார்கள். ஆண்கள் அப்படியில்லை. வெளியே வெயிலில் சுற்றும் போது சருமத்தில் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே இதைத் தவிர்க்க வேண்டுமானால், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களை தவறாமல் கொடுக்க வேண்டும். ஆனால் ஆண்களின் சரும பராமரிப்பு என்று வரும் போது, பெரும்பாலான ஆண்கள் சோம்பேறிகளாகவே இருப்பார்கள். இருப்பினும் தற்போது பல ஆண்கள் தங்கள் அழகின் மீதும் அக்கறை காட்டுவதோடு, சரும பராமரிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். எனவே கோடைக்காலத்தில் சருமம் அதிகம் சேதமடையாமல் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க ஆண்கள் பின்பற்ற வேண்டியவைகள் குறித்து தமிழ் போல்ட்ஸ்கை கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து பின்பற்றி கோடையிலும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கிளின்சர் பயன்படுத்தவும்
பெரும்பாலும் முகத்தைக் கழுவ ஆண்கள் சோப்பை தான் பயன்படுத்துவார்கள். ஆனால் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமானால் சருமத்திற்கு ஏற்ற நல்ல கிளின்சரை வாங்கி தினமும் 3 முறை முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுவும் ஆண்கள் கற்றாழை அல்லது க்ரீன் டீ அடங்கிய கிளின்சரை பயன்படுத்துவது இன்னமும் நல்லது.

டோனர் பயன்படுத்தவும்
பலருக்கும் டோனர் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி தெரியவில்லை. ஆனால் இது சரும பராமரிப்பு வழக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த டோனரை முகத்தைக் கழுவிய பின்னர் பயன்படுத்த வேண்டும். அதுவும் இதற்கு நல்ல டோனர் அல்லது டோஸ் வாட்டரைப் பயன்படுத்த வேண்டும். கோடைக்காலத்தில் சருமத்தை அழகாக பராமரிக்க ஒரு நல்ல டோனர் மிகவும் அவசியம்.

ஸ்கரப் மற்றும் ஃபேஸ் மாஸ்க்
ஆண்கள் வாரத்திற்கு ஒருமுறை சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதனால் சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படுவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும் மற்றும் சருமத்துளைகளின் அளவு குறையும். அதற்கு முகத்திற்கு கெமிக்கல் கலந்த ஸ்கரப்புகளைப் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே ஸ்கரப் தயாரித்துப் பயன்படுத்தலாம். ஆனால் எந்த ஒரு பொருளை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பும், கையின் ஓரத்தில் சோதனை செய்து பார்த்துக் கொள்ள மறவாதீர்கள். இது தவிர, வாரத்திற்கு ஒருமுறை முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.

ஷேவிங்கிற்கு பிந்தைய ஸ்ப்ரே/லோஷன்
பெரும்பாலான ஆண்களுக்கு ஷேவிங் செய்யும் பழக்கம் இருக்கும். ஷேவிங் செய்வதால் சருமம் அதிகம் சேதமடையும். எனவே ஷேவிங் செய்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஆண்களின் முகச் சருமம் மென்மையாக இருக்க ஷேவிங் செய்த பின் பயன்படுத்தும் ஸ்ப்ரே அல்லது லோஷனைப் பயன்படுத்த வேண்டும்.

சன்ஸ்க்ரீன்
சூரிய கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆண்களும் சன்ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அதுவும் இந்த சன்ஸ்க்ரீனை கைகளில் மட்டுமின்றி, முகம், கழுத்து, கால் போன்ற பகுதிகளிலும் தடவ வேண்டும். முக்கியமாக சன் ஸ்க்ரீன் பயன்படுத்தும் போது, அது சருமத்தினுள் நுழையும் அளவில் நன்கு மென்மையாக சருமத்தில் வெள்ளை படலம் இல்லாதவாறு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.