Just In
- 3 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 4 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 7 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
- 11 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்த்திட வேண்டாம்...
Don't Miss
- Movies
வாரத்திற்கு ஒன்னு...ரெட் ஜெயண்ட் மூவிஸ் காட்டில் அடைமழை காலம் போல
- News
யூ டூ ப்ரூட்டஸ், ஜெகத் கஸ்பரை விட்டுட்டு.. கனல் கண்ணன் கைதா? நாளை பாருங்க! காடேஸ்வரா விட்ட அறிக்கை!
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க... இனி இஎம்ஐ அதிகரிக்கலாம்..!
- Automobiles
ரூ1 லட்சத்திற்கு ஸ்கூட்டர்... முழுசார்ஜில் 500 கி.மீ பயணிக்கும் கார்... ஓலாவின் சுதந்திர தின அதிரடி அறிவிப்பு
- Sports
தினேஷ் கார்த்திக்கால் வரும் பிரச்சினை.. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி.. ரிஷப் பண்ட் வெளிப்படை பேச்சு!!
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
முகத்தில் உள்ள கருமை போகணுமா? அப்ப இந்த காபி ஃபேஸ் பேக் போடுங்க...
பெரும்பாலானோர் விரும்பி குடிக்கும் காபி, உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக்க உதவும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அந்த காபி சருமத்திலும் மாயங்களை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? சொல்லப்போனால் காபி ஒரு அற்புதமான எக்ஸ்போலியேட்டர். இது சருமத்தில் இரத்த ஓட்டத்தைத் தூண்ட உதவி புரிந்து, முகப்பரு, செல்லுலைட் மற்றும் ஸ்ட்ரெட்ச் மார்க் போன்றவற்றைக் குறைக்கும்.
காபி ஃபேஸ் பேக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும். நீங்கள் சருமத்தில் அடிக்கடி பிரச்சனைகளை சந்திப்பவராயின், எந்த சரும பிரச்சனைக்கு எந்த மாதிரியான காபி ஃபேஸ் பேக் போடுவது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து, கொரோனா காலத்தில் உங்கள் அழகை வீட்டிலேயே மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
MOST READ: சமீப காலமாக கொரோனாவால் நிறைய பேர் இறப்பதற்கு இதுதான் காரணமாம்! - உஷாரா இருங்க...

பொலிவான முகத்தைப் பெற...
தேவையான பொருட்கள்:
* காபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* பால் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் காபி பவுடர் மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை நீரால் கழுவி, துணியால் துடைத்துக் கொள்ளவும்.
* அதன் பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துவது நல்லது.

வெள்ளையாக...
தேவையான பொருட்கள்:
* காபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் காபி தூள், மஞ்சள் தூள் மற்றும் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை கட்டி இல்லாதவாறு நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை போட்டால், முகம் பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

பிம்பிளைப் போக்க...
தேவையான பொருட்கள்:
* காபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டைத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் காபி தூள், பட்டைத் தூள், தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பிறகு நீரால் முகத்தைக் கழுவவும்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் போட்ட பின் மாய்ஸ்சுரைசரைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.
* அதோடு இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், பிம்பிள் மாயமாய் மறையும்.

சரும கருமை நீங்க...
தேவையான பொருட்கள்:
* காபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் காபி பவுடர் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக எடுத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

சரும சுருக்கத்தைப் போக்க...
தேவையான பொருட்கள்:
* காபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு கிண்ணத்தில் காபி பவுடர், தேன் மற்றும் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவும் போது, 2-3 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

கருமையான தழும்புகள் மறைய...
தேவையான பொருட்கள்:
* காபி பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கொக்கோ பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பால் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு சுத்தமான முகத்தில் தயாரித்து வைத்துள்ள கலவையைத் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் கருமையான தழும்புகள் மாயமாய் மறையும்.