For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர் காலத்துல செலவே இல்லாம உங்க வறண்ட சருமத்தை எப்படி சரி செய்வது தெரியுமா?

குளிர் காலம் வந்து விட்டாலே சருமத்தைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் வந்து விடும். இல்லையெனில் சருமம் வறண்டு விடுதல், துளைகள் ஏற்படுதல் மற்றும் தோழற்சி போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

|

குளிர் காலம் வந்து விட்டாலே சருமத்தைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் வந்து விடும். இல்லையெனில் சருமம் வறண்டு விடுதல், துளைகள் ஏற்படுதல் மற்றும் தோழற்சி போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். குளிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தும் சோப்புகள், சூடான நீரில் குளித்தல் போன்ற அனைத்தும் உங்கள் சருமத்தை இன்னும் வறண்டு போகச் செய்யும்.

Home Remedies To Pamper Your Skin This Winter.

ஆனால் குளிர்காலத்தில் தான் உங்கள் சருமத்தை மிகவும் மென்மையாக மற்றும் ஈரப்பதத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் விலையுயர்ந்த பொருட்களாகிய மாய்ஸ்சரைசர்கள் மற்றும் பாடி லோஷன்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. மிகவும் குறைந்த செலவில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பால் என்பது பொதுவாக எல்லா விதமான பாடி லோஷன்கள் மற்றும் பாடி பட்டர்களில் முக்கிய மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். பால் உங்கள் சருமத்தினை ஈரப்பதத்துடன் வைப்பதற்கும் வறண்ட சருமத்தினை சரிசெய்யும் பண்பினையும் கொண்டுள்ளது.

MOST READ: நாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.

பயன்படுத்தும் விதம்

பயன்படுத்தும் விதம்

உங்கள் சருமம் வறண்டு அல்லது அரிப்பு போன்ற பிரச்சனைகளினால் பாதிக்கப்படும் போது ஒரு மஸ்லீன் துணியை எடுத்துக் குளிர்ந்த பாலில் நனைத்து அந்த துணியை 5 நிமிடங்கள் உங்கள் சருமத்தில் போடுங்கள். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சிறந்த வறட்சி நீக்கும் பண்பினை அகற்றி ஈரப்பதத்தினை தக்க வைக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் என்பது ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாகும். உங்கள் சருமம் மற்றும் முடி தொடர்பான எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண தேங்காய் எண்ணெய் உதவும். தேங்காய் எண்ணெய் பழங்காலத்திலிருந்தே மருத்துவ சிகிச்சையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணையில் உமிழும் பண்புகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் உங்கள் சருமத்தினை ஈரப்பதமாக்கி மென்மையானதாக மாற்றுகிறது.

பயன்படுத்தும் விதம்

பயன்படுத்தும் விதம்

தேங்காய் எண்ணெயை சிறிதளவு எடுத்து உங்கள் உள்ளங்கையில் தேய்த்து பின்பு சருமம் வறண்ட பகுதிகளில் தடவுங்கள். மேலும் தேங்காய் எண்ணெய் தினமும் உங்களின் கண்களைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் வாயைச் சுற்றி உள்ள பகுதிகளில் பயன்படுத்துவது நல்லது.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

உங்களின் வறண்ட சருமத்தைச் சரி செய்வதற்கு மிகவும் சிறந்த தீர்வு பெட்ரோலியம் ஜெல்லி என்பதில் சந்தேகம் இல்லை. பெட்ரோலியம் ஜெல்லி மிக விரைவில் உங்களின் வறண்ட சருமத்தினை சரி செய்ய உதவும். இது உங்கள் சருமத்தினை மாய்ஸ்சரைசர் செய்து மென்மையானதாக மாற்றுகிறது. அத்துடன் இது உங்கள் சருமத்தினை நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்துடன் வைத்து இருக்க உதவுகிறது.

கற்றாழை

கற்றாழை

குளிர் காலத்தில் ஏற்படும் வறட்சி தன்மையைப் போக்கச் சிறந்த தீர்வாக கற்றாழை உதவும். இப்போது கற்றாழையில் இருக்கும் நன்மைகளினால் மக்கள் அனைவரும் அதனை வெகுவாகப் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே உங்களின் வறண்ட சருமத்தினை சரி செய்யக் கற்றாழை உதவும்.

MOST READ: லிப்ஸ்டிக் போடாமலே உங்க உதடு பிங்க் கலர்ல மாறணுமா? இத ட்ரை பண்ணுங்க.

பயன்படுத்தும் விதம்

பயன்படுத்தும் விதம்

தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு கற்றாழை ஜெல்லை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாய்ஸ்சரைசரை சருமத்தின் உலர்ந்த பகுதிகளில் தடவி விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழும்போது உங்கள் சருமம் ஈரப்பதமாகவும் மென்மையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Pamper Your Skin This Winter.

Come winter each year, you need to ramp up your skincare routine. The cold outdoors and heated interiors can take a toll on your skin leaving it prone to dryness and itching. Dry and arid winters strip away moisture from the skin, leaving it parched and flaky.Heat, hot showers and harsh soaps can all make dry skin even worse. so use this natural ingredients for extra care this winter.
Story first published: Wednesday, September 25, 2019, 15:46 [IST]
Desktop Bottom Promotion