For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை யூஸ் பண்ணாம வெள்ளையாகணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க...

உங்களுக்கு எலுமிச்சை ஆகாது என்றால், எலுமிச்சை பயன்படுத்தாமல் வெள்ளையாக எந்த ஃபேஸ் பேக்குகளை போடுவது என்பதை தெரிந்து கொண்டு அவற்றைப் போடுங்கள்.

|

அனைவருக்குமே வெள்ளையாக வேண்டுமென்ற ஒரு ஆசை இருக்கும். இதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தின் நிறத்தை மேம்படுத்தலாம். இதனால் சருமம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும்.

Home Remedies To Get Fair Skin Without Using Lemon In Tamil

பொதுவாக இயற்கை பொருட்களில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும் ஒரு பொருள் என்றால் அது எலுமிச்சை. ஆனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் அனைத்து சருமத்தினருக்கும் பாதுகாப்பானது அல்ல. சிலருக்கு இது அழற்சியை ஏற்படுத்தும். அப்படி உங்களுக்கு எலுமிச்சை ஆகாது என்றால், எலுமிச்சை பயன்படுத்தாமல் வெள்ளையாக எந்த ஃபேஸ் பேக்குகளை போடுவது என்பதை தெரிந்து கொண்டு அவற்றைப் போடுங்கள். கீழே எலுமிச்சை இல்லாமல் சரும நிறத்தை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர்

அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர்

ஒரு பௌலில் அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் அரிசி மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும், மஞ்சள் தூள் சரும கருமையைப் போக்கும் மற்றும் ரோஸ் வாட்டர் சருமத்திற்கு நல்ல நிறத்தைத் தரும்.

ஓட்ஸ் மற்றும் தயிர்

ஓட்ஸ் மற்றும் தயிர்

ஓட்ஸ் பொடியை தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அப்படி கழுவும் போது மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் ஓட்ஸ் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் மற்றும் தயிர் சருமத்திற்கு எவ்வித எரிச்சலையும் ஏற்படுத்தாமல், சரும நிறத்தை மேம்படுத்தும்.

சந்தனம் மற்றும் பால்

சந்தனம் மற்றும் பால்

சந்தனம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதில் சிறந்தது என்பதை அனைவருமே அறிவோம். அந்த சந்தனத்தின் பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தின் நிறம் மேம்படும். குறிப்பாக இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கனிந்த பப்பாளி மற்றும் தேன்

கனிந்த பப்பாளி மற்றும் தேன்

பப்பாளி மற்றும் தேன் ஆகிய இரண்டிலுமே ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இவை இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தினால், அவை சருமத்தில் அற்புதங்களை ஏற்படுத்தும். அதற்கு நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை ஒரு பௌலில் ஒன்றாக சிறிது எடுத்து, அதை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். குறிப்பாக இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகப்பருக்களைத் தடுக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் உள்ள அமிலம், சருமத்தின் நிறத்தை மேம்படுத்திக் காட்டும். அதற்கு உருளைக்கிழங்கு சாற்றினை அல்லது உருளைக்கிழங்கு விழுதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது சரும நிறத்தை மேம்படுத்துவதோடு, தழும்புகளையும் மறையச் செய்யும்.

தக்காளி மற்றும் கற்றாழை ஜெல்

தக்காளி மற்றும் கற்றாழை ஜெல்

தக்காளியில் உள்ள ப்ளீச்சிங் பொருட்கள் சரும கருமையைப் போக்கும். ஆனால் தக்காளி உங்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதை உணர்ந்தால், தக்காளியுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளுங்கள். இது சரும கருமையை இன்னும் வேகமாக போக்கி, சரும நிறத்தை மேம்படுத்தும். மேலும் இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள தழும்புகளையும் மறையச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Get Fair Skin Without Using Lemon In Tamil

Here are some home remedies to get fair skin without using lemon. Read on to know more...
Story first published: Tuesday, October 11, 2022, 18:52 [IST]
Desktop Bottom Promotion