Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் டாப் 10 பெரிய மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? இந்த மாவட்டம்தானா? -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா?
சரும நிறத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த வாழைப்பழ ஃபேஸ் பேக்கை போடுங்க...
நாம் சாப்பிடும் வாழைப்பழம் கொண்டே நமது சரும நிறத்தை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்குகளைப் போடலாம். கீழே சரும நிறத்தை உடனடியாக அதிகரிக்கும் சில வாழைப்பழ ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Banana Face Pack for Instant Glow: யாருக்கு தான் சரும நிறத்தை அதிகரிக்க வேண்டுமென்ற ஆசை இருக்காது. நிச்சயம் ஒவ்வொருவருமே தங்களின் சரும நிறத்தை மேம்படுத்த முயற்சிப்போம். அதற்காக நிறைய பேர் அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஸ் பேக், ப்ளீச்சிங், ஸ்க்ரப் என்று பலவற்றை மேற்கொள்வதுண்டு. அழகு நிலையம் சென்றால் அங்கு நிறைய பணம் செலவாகும். எனவே அனைவராலும் அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாது. இது தவிர தற்போது அலுவலகத்தில் உள்ள வேலைப்பளுவால் நிறைய பேருக்கு அழகு நிலையம் செல்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.

இதனால் நிறைய பெண்கள் தங்கள் சரும அழகை மற்றும் நிறத்தை மேம்படுத்த இயற்கை வழிகளை நாடுகிறார்கள். குறிப்பாக வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட விரும்புகிறார்கள். சரும நிறத்தை அதிகரிக்கும் நிறைய பொருட்கள் நமது வீட்டில் உள்ளன. குறிப்பாக நாம் சாப்பிடும் வாழைப்பழம் கொண்டே நமது சரும நிறத்தை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்குகளைப் போடலாம். கீழே சரும நிறத்தை உடனடியாக அதிகரிக்கும் சில வாழைப்பழ ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. வறண்ட சருமத்தினருக்கான வாழைப்பழ ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
* தேன் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பயன்படுத்தும் முறை:
* முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, அத்துடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை நீரால் கழுவி, துடைத்துவிட்டு, பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் ஆனதும், குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

2. எண்ணெய் பசை சருமத்திற்கான வாழைப்பழ ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* வாழைப்பழ பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* முல்தானி மெட்டி - 1 டேபிள் ஸ்பூன்
* ரோஸ் வாட்டர் - சிறிது
* வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 1
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு பௌலில் வாழைப்பழ பேஸ்ட், முல்தானி மெட்டி, வைட்டமின் ஈ கேப்ஸ்யலில் உள்ள எண்ணெய் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* ஃபேஸ் பேக் நன்கு காய்ந்ததும், முகத்தில் வெதுவெதுப்பான நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

3. சென்சிடிவ் சருமத்தினருக்கான வாழைப்பழ ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:
* மசித்த வாழைப்பழம்
* கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
* டீ ட்ரீ ஆயில் - 1-2 துளிகள்
பயன்படுத்தும் முறை:
* முதலில் ஒரு பௌலில் நன்கு மசித்த வாழைப்பழத்தை எடுத்து, அத்துடன் கற்றாழை ஜெல் மற்றும் டீ ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளை முகத்திற்கு பயன்படுத்தும் முன், கையில் பரிசோதனை செய்து பார்த்த பின்னர் பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
