For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…!

இயற்கையாகவே வறண்ட சருமம் இல்லையென்றாலும், குளிர் மற்றும் வறண்ட குளிர்காலம் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சும்.

|

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு சரும பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். கோடைகாலம், மழைகாலம் மற்றும் குளிர்காலம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலத்திற்கு ஏற்றவாறு சரும பிரச்சனைகள் ஏற்படும். கடுமையான குளிர்கால வானிலை உங்கள் சருமத்தை வறண்டு எரிச்சலடையச் செய்யலாம். உங்களுக்கு இயற்கையாகவே வறண்ட சருமம் இல்லையென்றாலும், குளிர் மற்றும் வறண்ட குளிர்காலம் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சும்.

beauty-products-to-avoid-in-winter-season

வானிலை மாற்றத்துடன் உங்கள் தோல் வழக்கத்தை மாற்றுவது சரியான திசையில் ஒரு படியாகும். ஆனால், நாம் வழக்கமாக அதற்கு என்ன செய்யலாம் என்றுதான் பார்க்கிறோம். எதை செய்யக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவதில்லை. உங்களுக்கு உகந்ததாக நீங்கள் நினைக்கும் சரும அழகு பொருட்கள், குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் என்னென்ன பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்று தெரியுமா? . கவலையை விடுங்க... உங்களுக்கு நாங்க இங்கே சொல்லுறோம். இங்கே குளிர்காலத்தில் எந்தெந்த பொருட்களை உங்கள் சருமத்தில் பயன்படுத்தக்கூடாது என்று விளக்குகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆல்கஹால் சார்ந்த தயாரிப்புகள்

ஆல்கஹால் சார்ந்த தயாரிப்புகள்

ஆல்கஹால் உங்கள் சருமத்தை உலர வைக்கும். கடுமையான குளிர்கால வானிலையால் உங்கள் தோல் போதுமான அளவு வறண்டு காணப்படுகிறது. உங்கள் தோல் பராமரிப்புப் பொருட்களில் எந்தளவு ஆல்கஹால் உள்ளது, குறிப்பாக டோனர்கள் எவ்வளவு உள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நிச்சயமாக அவை அழுக்கை நீக்கி உங்கள் சருமத்தின் பி.எச்(pH)-ஐ சமப்படுத்துகின்றன. ஆனால் குளிர்காலத்தில், ஆல்கஹால் சார்ந்த பொருட்கள் உங்கள் சருமத்திற்கு நல்லதல்ல. அந்த தயாரிப்புகளை தவிர்க்கவும். அதற்கு பதிலாக கரிம பொருட்களை பயன்படுத்தலாம்.

MOST READ:இந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்...!

சோப்புகள்

சோப்புகள்

சோப்புக்கு பதிலாக ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதை ஒரு வேலையாக நினைக்கும் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், சோப்புகள் உங்கள் சருமத்திற்கு சரியானதல்ல. சோப்புகளில் அதிக பி.எச் உள்ளது. இது உங்கள் சருமத்தை விட அதிகம். கடுமையான சோப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தின் பி.எச் சமநிலையை சீர்குலைத்து, உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அகற்றும். அதற்கு பதிலாக முகத்தைக் கழுவ ஒரு மென்மையான ஃபேஸ் வாஷ்ஷை பயன்படுத்தலாம்.

மிகவும் கரடுமுரடான ஸ்க்ரப்ஸ்

மிகவும் கரடுமுரடான ஸ்க்ரப்ஸ்

சருமத்தை வெளியேற்றுவது தோல் பராமரிப்பு செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாகும். இது சருமத்திலுள்ள அழுக்குகள், அசுத்தங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட உதவுகிறது மற்றும் ஆழமாக சுத்தப்படுத்துகிறது. எக்ஸ்ஃபோலைட்டிங் செய்வதை முற்றிலுமாக நிறத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லையென்றாலும், நீங்கள் அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்யக்கூடாது. வாரத்திற்கு ஒரு முறை உங்கள் சருமத்தை வெளியேற்றி, அதைச் செய்ய சிறிய துகள்கள் கொண்ட மென்மையான ஸ்க்ரப் பயன்படுத்தவும். மிகவும் கரடுமுரடான ஸ்க்ரப் உங்கள் சருமத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தும்.

பவுடர் மேக்-அப்

பவுடர் மேக்-அப்

சருமத்தை அழகுபடுத்த மேக்-அப்-கிரீம், பவுடர் மற்றும் ஜெல் என உலகில் தயாரிப்புகளின் வெவ்வேறு கட்டமைப்புகள் இருக்கின்றன. இவற்றில், பவுடரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது, எனவே அவற்றை அடிக்கடி நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், பவுடர் பொருட்கள் குளிர்காலத்தில் அதிகமாக உபயோகிக்க வேண்டாம். பவுடர் பொருட்கள் சருமத்தின் எண்ணெய் சுரப்பை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. பெரும்பாலும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும். வறண்ட குளிர்காலத்துடன் இணைந்து, இது உங்கள் சருமத்தை வறண்டு விடக்கூடும். எனவே, பவுடர் தயாரிப்புகளைத் தவிர்ப்பது மற்றும் கிரீம் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

MOST READ:ஆண்களே! உங்கள் தாடி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா? அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்...!

களிமண் ஃபேஸ் மாஸ்க்

களிமண் ஃபேஸ் மாஸ்க்

ஒரு களிமண் ஃபேஸ் மாஸ்க், சருமத்தின் அதிகப்படியான எண்ணெய் மற்றும் தூசு படிந்த அழுக்கை உறிஞ்சி ஆழமாகச் சுத்தப்படுத்துகிறது. எனவே, இது எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது. ஆனால், குளிர்காலத்தில் களிமண் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் வறண்டு, நீரிழந்து விடும். ஆதலால், குளிர்காலங்களில் களிமண் ஃபேஸ் மாஸ்க்கிற்கு பதிலாக பழ ஃபேஸ் மாஸ்க்கை தேர்வுசெய்து, உங்கள் சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும்.

நறுமண பொருட்கள்

நறுமண பொருட்கள்

அதிக நறுமணத்துடன் இருக்கும் பொருட்களை நீங்கள் விரும்பலாம். ஆனால், அது உங்கள் சருமத்திற்கு நல்லதல்ல. நறுமண பொருட்கள் உங்கள் சருமத்தை வறண்டுபோகச் செய்யும். குளிர்காலம் உங்கள் சருமத்தை மிகவும் உலர வைக்கிறது. ஆதலால், கோடைகாலத்தில் உங்கள் தோலுக்கு முற்றிலும் நன்றாக இருந்த நறுமணம் கொண்ட பொருட்கள், இப்போது உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். எனவே, நீங்கள் மணம் இல்லாத தயாரிப்புகளுக்கு செல்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

beauty products to avoid in winter season

Here are the list of beauty products you should avoid using in winter season.
Story first published: Tuesday, January 14, 2020, 16:44 [IST]
Desktop Bottom Promotion