For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? இதோ சில அற்புத வழிகள்!

உங்கள் முகப் பொலிவை அதிகரிக்க கண்ட கண்ட க்ரீம்களை உபயோகிக்கிறீர்களா? இருப்பினும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியானால் பின்வரும் இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள்.

|

யாருக்கு தான் அழகான, பிரகாசமான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்காது. சருமத்தின் பொலிவை அதிகரிக்க நம்மில் பலர் கடைகளில் விற்கப்படும் பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தியிருப்போம். ஆனால் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள், சருமத்திற்கு தற்காலிக பொலிவைக் கொடுக்குமே தவிர, சரும செல்களின் ஆரோக்கியத்தை மெதுவாக அழத்துக் கொண்டிருக்கும். அதனால் தான் தினமும் மேக்கப் போடுபவர்களை, ஒருநாள் மேக்கப் போடாமல் பார்த்தால், அவர்களது சருமம் சுருக்கத்துடனும், பொலிவின்றியும் காணப்படுகிறது. அதுவே இயற்கைப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சரும செல்கள் ஆரோக்கியமாகவும், சருமம் எப்போதும் பிரகாசமாகவும் காணப்படும்.

Awesome Ways To Get Glowing Skin Overnight

உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? கண்ணாடியைப் பார்த்தாலே முகம் பிரகாசம் இழந்து அசிங்கமாக காட்சியளிக்கிறதா? உங்கள் முகப் பொலிவை அதிகரிக்க கண்ட கண்ட க்ரீம்களை உபயோகிக்கிறீர்களா? இருப்பினும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியானால் பின்வரும் இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள். குறிப்பாக இந்த வழிகளை இரவு நேரத்தில் பின்பற்றினால், மறுநாள் காலையில் முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

MOST READ: முடி அதிகமா கொட்டுதா? முடியின் அடர்த்தி குறையுதா? இதோ அதைத் தடுக்கும் வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம் எண்ணெய் மசாஜ்

பாதாம் எண்ணெய் மசாஜ்

இரவு தூங்கும் முன் சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்கை நீக்கிய பின், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை துடைத்து, அதன் பின் சில துளிகள் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி இரவு தூங்கும் முன் தினமும் செய்து வந்தால், பொலிவிழந்து இருக்கும் முகம் பொலிவு பெற்று அழகாக காணப்படும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

நம் அனைவரது வீட்டிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டும் நல்லதல்ல, சரும பொலிவை அதிகரிக்கும் திறனையும் கொண்டது. எனவே சருமத்திற்கு கெமிக்கல் கலந்த மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்யுங்கள். இது சரும பொலிவை அதிகரிக்க உதவுவதோடு, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

பால் ஃபேஸ் பேக்

பால் ஃபேஸ் பேக்

காய்ச்சாத பச்சை பால் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தும். குறிப்பாக இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். எனவே நீங்கள் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க நினைத்தால், இரவு தூங்கும் முன் முகத்தை கழுவிய பின்பு, பச்சை பாலை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, பின் மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இதனால் உங்கள் முகம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் ஒரு அற்புதமான மாய்ஸ்சுரைசர். தினமும் இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், சருமம் மென்மையாக இருப்பதோடு, பளிச்சென்று பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை

கிளிசரின் மற்றும் எலுமிச்சை

சிறிது கிளிசரினுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இதனால் கிளிசரின் சருமத்திற்கு நீரேற்றம் அளிக்கும் மற்றும் எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தை பொலிவாக வெளிக்காட்டும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

தேன் மற்றும் முல்தானி மெட்டி

தேன் மற்றும் முல்தானி மெட்டி

உங்கள் முகம் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படுகிறதா? அப்படியானால் முல்தானி மெட்டி மற்றும் தேன் ஃபேஸ் பேக் போடுங்கள். அதற்கு முகத்தை முதலில் நீரில் கழுவி உலர வைத்து, பின் முல்தானி மெட்டியை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை இரவு தூங்கும் முன் போட்டால், காலையில் உங்கள் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

ரோஸ் வாட்டர், சந்தன பவுடர் மற்றும் மஞ்சள்

ரோஸ் வாட்டர், சந்தன பவுடர் மற்றும் மஞ்சள்

சருமத்தின் பொலிவை அதிகரிக்க இரவு தூங்கும் முன் ஃபேஸ் பேக்கை போடுவது ஒரு சிறந்த வழி. அதுவும் மஞ்சள் தூள், சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் ரோஸ் வாட்டரால் முகத்தை ஒருமுறை துடைத்திடுங்கள். மறுநாள் காலையில் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Awesome Ways To Get Glowing Skin Overnight

In this article we listed some awesome ways to get glowing skin overnight. Take a look...
Desktop Bottom Promotion