For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் செய்யும் இந்த செயல்கள் தான் உங்களின் முகத்தின் அழகை கெடுக்கிறது..!

|

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நமது உடல் நலத்தையும், முக அழகையும் பாதிக்க செய்யும். சில செயல்கள் நம்மை அறிந்தே நாம் செய்வோம். ஒரு சில செயல்கள் நம்மை அறியாமலே நாம் செய்கின்றோம். அவை அனைத்துமே நமது முக அழகை பெரிதான அளவில் பாதிக்குமாம்.

நீங்கள் செய்யும் இந்த செயல்கள் தான் உங்களின் முகத்தின் அழகை கெடுக்கிறது..!

குறிப்பாக வேதி பொருட்கள், முகத்தை அடிக்கடி கழுவுதல், கண்ட முகப்பூச்சுகளை முகத்தில் பயன்படுத்துதல் போன்றவை முக அழகை கெடுபவையாகும். எந்தெந்த செயல்கள் நமது முகத்தையும், தோலையும் கெடுக்கிறது என்பதை இனி இந்த பதிவில் அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிகவும் மென்மையானவை..!

மிகவும் மென்மையானவை..!

நமது உடலை அழகாக போர்த்தி கொள்ளும் ஒரு உறுப்பு தான் இந்த தோல். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை இவை தான் நமது முழு உடலையும் சுற்றி உள்ளது. கிட்டத்தட்ட ஒரு பாதுகாப்பான அரண் போன்று நமக்கு இவை இருக்கின்றன. இவற்றை நாம் அதிக கவனத்துடன் கையாள வேண்டும். இல்லையென்றால் இதற்கான விளைவுகள் அதிகமே.

சோப்பு பயன்படுத்தலாமா..?

சோப்பு பயன்படுத்தலாமா..?

பொதுவாகவே நாம் அனைவரும் உடலுக்கு சோப்பை பயன்படுத்துவோம். ஆனால், சருமத்தை வறட்சியாக வைத்து கொள்ளும் சோப்புகளை நீங்கள் பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் சருமம் இறுகி, கெட்டி தன்மை பெற்று விடும். மேலும், கைகளை கழுவும் போதும் சோப்பை பயன்படுத்தாதீர்.

லோஷன் சரியானதா..?

லோஷன் சரியானதா..?

சிலர் தோலில் அல்லது முகத்தில் ஒரு சில லோஷன்களை பயன்படுத்துவார்கள். ஆனால், இவற்றை வாங்கும் போது அதிக கவனம் தேவை. ஏனெனில், இவற்றில் ஆல்கஹால் கலந்திருந்தால் அவற்றை சருமத்தில் பயன்படுத்த கூடாது. எனவே, இது போன்ற லோஷன்களை தவிர்த்து விடுங்கள்.

எத்தனை முறை..?

எத்தனை முறை..?

பலர் முகத்தில் சிறிதாக எண்ணெய் வடிந்தால் கூட முகத்தை கழுவி கொண்டே இருப்பார்கள். ஆனால், முகத்தை அடிக்கடி கழுவினால் முகத்திற்கு எரிச்சலை தரும். மேலும், இவை பருக்களையும் உண்டாக்கும். எனவே, தினமும் 2 முறை முகத்தை கழுவுவதே சிறந்தது.

MOST READ: சராசரியாக இந்திய பெண்கள் கன்னித்தன்மை இழக்கும் வயது என்ன தெரியுமா?

வித விதமானவை..!

வித விதமானவை..!

இன்று பலரிடம் உள்ள பழக்கம் இதுதான். பார்க்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு கிரீம்களையோ, பௌடர்களையோ வாங்காதீர்கள். இது பல வித பாதிப்புகளை உங்களுக்கு ஏற்படுத்தும். ஒரே பிராண்டை சேர்ந்த பொருளையே பெரும்பாலும் பயன்படுத்துவது சிறந்தது. மீறினால் பல பாதிப்புகள் சருமத்திற்கு ஏற்படும்.

எப்போதும் ஏசியா..?

எப்போதும் ஏசியா..?

நாகரீக மாற்றத்தின் ஒரு வெளிப்பாடு தான் இந்த ஏசிலே இருக்க கூடிய பழக்கம். பலர் அதிக நேரம் ஏசியில் இருக்கின்றனர். இவ்வாறு இருந்தால் பல வித பாதிப்புகளை இவை ஏற்படுத்தும். மேலும்,சருமத்தை அதிக வறட்சியுடன் வைத்து கொள்ளும். இந்த நிலையை எளிதில் தவிர்க்க காலை அல்லது மாலையில் சிறிது நேரம் வெயிலில் நடந்து வாருங்கள்.

அதிக காபியா..?

அதிக காபியா..?

தினமும் 2 கப் காபிக்கு மேல் குடித்தால் பாதிப்புகள் அதிகம். குறிப்பாக உங்களின் சருமத்தை மிகவும் மங்கலாக மாற்றி விட கூடும். அத்துடன் விரைவிலே முகத்தின் பொலிவை இந்த காபி பழக்கம் பறித்து விடும்.

இவ்வளவு மேக்கப்பா..?

இவ்வளவு மேக்கப்பா..?

இன்று பல பேண்க்ளைடம் உள்ள அடிமை பழக்கம் இதுதான். மேக்கப் போடுவது தவறில்லை. ஆனால், அவை நமது முழு அழகையும் கெடுக்கும் அளவில் இருந்தால் இவற்றின் உபயோகிப்பதை குறைத்து கொள்ளலாம். இல்லையென்றால் சருமம் விரைவாகவே சுருக்கங்களை தரும்.

MOST READ: இந்த வகை சிகரெட் பிடித்தால் எந்த பாதிப்பும் வராதாம்..! உண்மையா..? கட்டுக்கதையா..?

குறைத்து கொள்ளுங்கள்..!

குறைத்து கொள்ளுங்கள்..!

அதிகமாக உப்பு அல்லது இனிப்பை உங்களின் உணவில் சேர்த்து கொண்டால் அதன் பாதிப்பும் பல மடங்காக அதிகரிக்க கூடும். அதிக உப்போ, அதிக இனிப்போ விரைவிலே வயதானவரை போன்ற தோற்றத்தை தர கூடும். அத்துடன் சருமத்தின் ஆரோக்கியத்தை இழக்க செய்து விடுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst Things You Might Be Doing to Your Skin

Worst Things You Might Be Doing to Your Skin
Story first published: Friday, November 23, 2018, 17:45 [IST]
Desktop Bottom Promotion