Latest Updates
-
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த ஒரு பழமே போதும் உங்களை உலக அழகி போல மாற்றுவதற்கு...!
முக அழகை மேம்படுத்த பல வகையான வேதி பொருட்களை முகத்தில் பயன்படுத்துகின்றனர். இதனால் முக அழகு சிறிது காலத்திற்கு பொலிவுடன் இருக்கும் பிம்பத்தை காட்டி, பின்பு சருமத்தில் எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பல பெண்களின் கனவு ஒரே இரவில் மிகவும் அழகானவர்களாக மாற வேண்டும் என்பதே. அழகு என்பது முகம் மட்டும் சார்ந்த விஷயம் கிடையாது. உடல் ஆரோக்கியத்தையும் உள்ளத்தின் ஆரோக்கியத்தையும் சார்ந்தே முகத்தின் அழகு நிர்ணயிக்கப்படும். பெண்களுக்கு அழகு என்பது ஒரு டேக் லைன் போல இன்று மாறி கொண்டே வருகிறது. முகத்தை அழகு செய்வதும், செய்யாததும் அவரவர் விருப்பமே.

சிலர் முக அழகை மேம்படுத்த பல வகையான வேதி பொருட்களை முகத்தில் பயன்படுத்துகின்றனர். இதனால் முக அழகு சிறிது காலத்திற்கு பொலிவுடன் இருக்கும் பிம்பத்தை காட்டி, பின்பு சருமத்தில் எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றிற்கு ஒரு அருமையான தீர்வு வாழைப்பழமே. இதில் உள்ள எண்ணற்ற நன்மைகள் உங்கள் முக அழகை பல மடங்கு அதிகரிக்கும். இனி வாழை பழத்தை வைத்து தயார் செய்யும் அழகு குறிப்பை பற்றி பார்ப்போம்.

பயன்கள் :-
வாழை பழத்தில் அதிக அளவில் முக அழகை கூட்டும் மூல பொருட்கள் உள்ளது. இதனால் என்றுமே நீங்கள் இளமையாகவும், அழகாகவும் இருப்பீர்கள். இவற்றில் உள்ள பயன்கள் இதோ...
வைட்டமின் எ - உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றும்.
வைட்டமின் பி - முக சுருக்கத்தை குறைத்து, வயோதிக சருமத்தை தடுக்கும்.
வைட்டமின் ஈ - முக சருமத்தை சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்கவும். அத்துடன், வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
பொட்டாசியம் - முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவும்.

பொலிவான முகம் பெற:-
முதலில் பழுத்த அரை வாழை பழத்தை எடுத்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்கவும். இதனை முகத்தில் நன்றாக பூசி 15 நிமிடம் மசாஜ் செய்யவும். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் முகம் மிகவும் அழகாகவும் பொலிவாகவும் மாறும்.

முக சுருக்கங்கள் போக :-
பலர் பார்ப்பதற்கு மிகவும் வயதானவர்கள் போல தெரிவார்கள். ஆனால் அவர்கள் வயது மிகவும் குறைவாக தான் இருக்கும். இளம் வயதிலேயே சருமம் விரைவில் வயோதிக பருவத்தை அடைவதை தடுக்க இந்த அழகு குறிப்பு பயன்படும். 1 டீஸ்பூன் யோகர்டுடன் 1 டீஸ்பூன் ஆரஞ்ச் சாற்றை சேர்த்து கலக்கி கொள்ளவும். பிறகு அதனுடன் 1/4 கப் வாழை பழக் கூழை சேர்க்கவும். இதனை 20 நிமிடம் முகத்தில் ஃபேஸ் பேக் போல போடவும். பின் மிதமான நீரில் கழுவி விடவும். இந்த குறிப்பு கண்டிப்பாக நல்ல பலனை தரும்.

பருக்கள் நீங்க :-
முக அழகை கெடுப்பதில் முதல் இடத்தில் இருப்பது இந்த முக பருக்களே. இவற்றை நீக்க 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை நன்றாக கலந்து 1/2 கப் வாழைப் பழ சாற்றுடன் சேர்க்கவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை 15 நிமிடம் முகத்தில் போட்டு நீரில் கழுவினால் முக பருக்கள் காணாமல் போய்விடும். மேலும் சருமத்தில் உள்ள கீறல்களுக்கும் இது ஒரு சிறந்த மருந்து.

ஈரப்பதமான முகம் :-
பலருக்கு முகம் மிகவும் வறண்டு காணப்படும். இதனை சரி செய்ய 2 டீஸ்பூன் வாழைப் பழ கூழை 1 டீஸ்பூன் தேங்காய் பாலுடன் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அதில் 2 டீஸ்பூன் ஓட்ஸை சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவினால் ஈரப்பதமான சருமம் கிடைக்கும்.

முக அரிப்புகள் குணமடைய :-
சிலருக்கு வெளியில் போயிட்டு வந்தாலே முகம் அரிக்க ஆரம்பித்து விடும். ஏனென்றால் வளி மண்டலத்தில் உள்ள காற்றில் அதிக மாசுவின் காரணமாக கிருமிகள் இருக்க கூடும். இதனால் அரிப்புகள் ஏற்படும். இதனை குணப்படுத்த 1/2 வாழைப் பழத்தை அரைத்து அதில் 1 டீஸ்பூன் பால், 1 டீஸ்பூன் ஓட்ஸ், மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூள் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் பூசவும். 15 நிமிடதிற்கு பின் இதனை, நீரில் நனைத்த காட்டன் துணியால் துடைத்து விடவும். இது நிச்சயம் முக அரிப்பை போக்கும்.

முகத்தை சுத்தம் செய்ய :-
2 டீஸ்பூன் வாழைப்பழ கூழுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து முகத்தில் பூச வேண்டும். இது உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி விடும். மேலும் அழுக்குகள் சேராமல் பாதுகாக்கும். சருமத்தின் இறந்த செல்களையும் அகற்றும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications