சரும பிரச்சினைகளே இல்லாத முகம் வேண்டுமா? அப்போ இந்த ஓட்ஸ் பேஸ் மாஸ்க்களை ட்ரை பண்ணுங்க!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

ஓட்ஸ் என்பது நிறைய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு புதையல் என்றே கூறலாம். ஏனெனில் உங்கள் சருமத்திற்கு நீங்கள் எதிர்பாராத நன்மைகளை அள்ளிக் கொடுப்பதில் இதற்கு நிகர் எதுவும் கிடையாது.

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. மேலும் சரும பிரச்சினைகள் அனைத்தையும் போக்க வல்லது. பரு பிரச்சினையிலிருந்து சரும நிறமாற்றம் வரை வெவ்வேறு விதமான சரும பிரச்சினைகளையும் களைகிறது.

எனவே இப்படிப்பட்ட ஓட்ஸ் தானியத்தை எப்படி அழகு பராமரிப்புக்கு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளவது நமக்கு நன்மை பயக்கும். இந்த ஓட்ஸ்யை கொண்டு எப்படி வித விதமான சரும பேஸ் மாஸ்க்களை தயாரிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

ஷாப்களில் வாங்கி பயன்படுத்தப்படும் மாஸ்க்கை விட இந்த ஓட்ஸ் பேஸ் மாஸ்க் விலை குறைந்தது மட்டுமில்லாமல் இயற்கையான ஒன்றாகவும் உள்ளது.

தினமும் பொலிவிழந்த முகத்துடன் ஹாய் சொல்லும் நீங்கள் இனி மேல் குறைபாடுகள் இல்லாத அழகான முகத்துடன் பிரதிபலியுங்கள்.

சரி வாங்க ஓட்ஸ் பேஸ் மாஸ்க்களை எப்படி தயாரிப்பது என்பதை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓட்ஸ் மற்றும் தேன்

ஓட்ஸ் மற்றும் தேன்

1 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ் மற்றும் 2 டீ ஸ்பூன் தேன் இரண்டையும் எடுத்து கொள்ள வேண்டும்.

நன்றாக கலந்து இந்த மாஸ்க்கை முகத்தில் அப்ளே செய்யவும்

10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் வறண்ட சருமம் சரியாகி போதுமான ஈரப்பதத்துடன் குறைபாடற்ற முகழகை பெற முடியும்

ஓட்ஸ், பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர்

ஓட்ஸ், பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர்

1 டேபிள் ஸ்பூன் சமைத்த ஓட்ஸ், 1/2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டீ ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்

பிறகு இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்

பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும். பிறகு லைட் டோனர் பயன்படுத்தவும்.

இந்த அல்ட்ரா மாய்ஸ்சரைசரிங் மாஸ்க்கை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

ஓட்ஸ் மற்றும் யோகார்ட்

ஓட்ஸ் மற்றும் யோகார்ட்

1 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ், 2 டீ ஸ்பூன், யோகார்ட் இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும்.

இதை முகத்தில் தடவி காய்ந்ததும் 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

இந்த முறையை வாரத்திற்கு ஒரு, முறை என்று பயன்படுத்தி வந்தால் மென்மையான மிருதுவான சருமம் கிடைக்கும்.

ஓட்ஸ், ஆலிவ் ஆயில் மற்றும் லெமன் ஜூஸ்

ஓட்ஸ், ஆலிவ் ஆயில் மற்றும் லெமன் ஜூஸ்

1 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ், 1 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும்

இந்த மாஸ்க்கை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும்

10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

இதை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி விடும்.

ஓட்ஸ் மற்றும் பாதாம் எண்ணெய்

ஓட்ஸ் மற்றும் பாதாம் எண்ணெய்

1 டீ ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்

பிறகு இந்த மாஸ்க்கை உங்கள் முகத்தில் தடவி காய விடவும்

பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவி, பிறகு லேசான மாய்ஸ்சரைசர் அப்ளே செய்ய வேண்டும்.

இதை இரண்டு வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் நல்ல ஜொலிப்பான முகத்தை பெறலாம்.

 ஓட்ஸ், வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர்

ஓட்ஸ், வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர்

வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் 1 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ் மற்றும் 3 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் காய விடவும்

பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும்

இந்த முறையை மாதத்திற்கு இரண்டு முறை என்று பயன்படுத்தி வந்தால் தூய்மையான ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.

ஓட்ஸ் மற்றும் பால்

ஓட்ஸ் மற்றும் பால்

ஒரு பெளலில் 2 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ் மற்றும் 1 டீ ஸ்பூன் பால் சேர்த்து கலக்கவும்

இப்பொழுது இந்த கலவையை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவவும்

பிறகு 15 நிமிடங்கள் காய வைத்து சூடான குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும்.

வாரத்திற்கு இரண்டு முறை என்று பயன்படுத்தி வந்தால் சமமான சரும நிறத்தை பெறலாம்

ஓட்ஸ் மற்றும் ஆப்பிள் ஜூஸ்

ஓட்ஸ் மற்றும் ஆப்பிள் ஜூஸ்

1 டீ ஸ்பூன் சமைத்த ஓட்ஸ் மற்றும் 2 டீ ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ் இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும்.

பிறகு முகத்தில் இந்த மாஸ்க்கை தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.

பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவி லேசான மாய்ஸ்சரைசர் அப்ளே செய்ய வேண்டும்.

மாதத்திற்கு இரண்டு முறை என்று பயன்படுத்தி வந்தால் சீக்கிரம் சருமம் வயதாகுவதை தடுக்கலாம்.,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ultra-Moisturizing Oatmeal Face Masks For Flawless Skin

Ultra-Moisturizing Oatmeal Face Masks For Flawless Skin
Story first published: Wednesday, January 3, 2018, 17:00 [IST]