For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுல ஒன்ன தினமும் நைட் செஞ்சா, சீக்கிரம் வெள்ளையாவீங்க... தெரியுமா!!!

|

அனைத்து பெண்களுக்குமே நல்ல அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். எனவே சரும அழகை மேம்படுத்துவதற்காக பல விஷயங்களை முயற்சிப்போம். ஆனால் நல்ல ஆரோக்கியமான சருமம் தான் அழகான சருமத்திற்கான அடையாளம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். எனவே, சருமத்தின் அழகை மேம்படுத்துவதற்கு முயற்சிப்பதை விட, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டியது மிகவும் முக்கியம்.

சரும அழகை அதிகரிப்பதற்கு மார்கெட்டில் பல அழகு சாதனப் பொருட்கள் கிடைக்கும். ஆனால் அந்த பொருட்கள் அனைத்திலுமே கெமிக்கல்கள் நிறைந்திருப்பதால், அவற்றை உபயோகித்தால், சருமத்தின் வெளிப்புறம் தான் அழகாக காட்சியளிக்குமே தவிர, உட்புறம் அல்ல. எனவே இயற்கை வழிகளை நாடுவதே சாலச் சிறந்தது. அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே, சருமத்திற்கு நல்ல பராமரிப்பைக் கொடுத்து, சரும ஆரோக்கியத்தை அதிகரித்து, சரும அழகில் மாயத்தை ஏற்படுத்தலாம்.

simple herbal beauty tips for beautiful glowing skin

சரி, இப்போது சரும ஆரோக்கியத்தை அதிகரித்து, சரும அழகை மேம்படுத்த உதவும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம். அதைப் படித்து அவற்றில் ஒன்றை தினமும் பின்பற்றி வந்தாலே, சரும பிரச்சனைகள் நீங்கி, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர் மற்றும் ஆப்ரிகாட்

தயிர் மற்றும் ஆப்ரிகாட்

ஆப்ரிகாட் பழம் மற்றும் தயிரை ஒன்றாக நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதோடு, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். ஒருவேளை உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், இத்துடன் சிறிது தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ்

சருமத்தில் ஆங்காங்கு கருமையான புள்ளிகள் காணப்பட்டால், அப்பகுதியில் கற்றாழை ஜெல்லை தினமும் தடவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் வறட்சியின்றி ஈரப்பசையுடன் காணப்படும்.

Most Read : ஆபிஸ் போகும் முன் இதால முகத்தை துடைச்சா, பளிச்சுன்னு வெள்ளையா

தெரிவீங்க தெரியுமா?

முட்டைக்கோஸ் ஜூஸ் மற்றும் தேன்

முட்டைக்கோஸ் ஜூஸ் மற்றும் தேன்

முட்டைக்கோஸ் ஜூஸ் உடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த கலவையை தினமும் சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்படும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ் அழகான சருமத்தைப் பெற பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு கேரட் ஜூஸை தினமும் முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே நன்கு காண்பீர்கள்.

வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை ஜூஸ்

வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை ஜூஸ்

வெள்ளரிக்காயில் சரும கருமையைப் போக்கும் பண்புகள் உள்ளது. இந்த வெள்ளரிக்காய் ஜூஸை எலுமிச்சை ஜூஸ் உடன் சேர்த்துப் பயன்படுத்தினால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள், சிறிது கிளிசரினை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய் ஜூஸ், கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்

வெள்ளரிக்காய் ஜூஸ், கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர்

வெள்ளரிக்காய் ஜூஸ், ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் போன்றவற்றை ஒரு பௌலில் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவ வேண்டும். இந்த கலவையை வெளியே வெயிலில் செல்லும் முன்பும், வீட்டிற்கு திரும்பி வந்த பின்பும் தவறாமல் பயன்படுத்துங்கள். இதனால் சருமம் கருமையாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரஞ்சு தோல் மற்றும் தயிர்

ஆரஞ்சு தோல் மற்றும் தயிர்

ஆரஞ்சு தோலை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். பின் அந்த பொடியை தயிருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின்பு அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக் மூலம், சருமத்தில் உள்ள கருமை மற்றும் தழும்புகள் நீங்குவதோடு, சரும பொலிவும் மேம்படும்.

பால், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு

பால், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு சிறிய பௌலில் சிறிது பால், 1 சிட்டிகை உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கி, சருமம் பொலிவோடும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

கடலை மாவு

கடலை மாவு

ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒன்று. இதனை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு பௌலில் சிறிது கடலை எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதனை தினமும் முகத்தில் தடவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள பிம்பிள் மற்றும் கரும்புள்ளிகள் சீக்கிரம் காணாமல் போகும்.

திராட்சை

திராட்சை

சிறிது திராட்சையை முகத்தில் நேரடியாக தேய்க்க வேண்டும். வேண்டுமானால் திராட்சையை அரைத்து, அதை ஃபேஸ் மாஸ்க் போன்று முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இதனால் சருமத்தின் பொலிவு மற்றும் நிறம் மேம்படும்.

Most Read : முகப்பரு மற்றும் கருமையைப் போக்க, தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க...

தேன் மற்றும் பட்டை பவுடர்

தேன் மற்றும் பட்டை பவுடர்

3 பங்கு தேனுடன் 1 பங்கு பட்டைப் பவுடர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை பிம்பிள் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கவும். இதனால் பிம்பிள் சீக்கிரம் நீங்குவதோடு, அதனால் உண்டான தழும்புகளும் வேகமாக மறைந்துவிடும்.

சந்தனம், மஞ்சள் மற்றும் பால்

சந்தனம், மஞ்சள் மற்றும் பால்

ஒரு பௌலில் சந்தன பவுடர், பால் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறு வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் சரும பொலிவு அதிகரிப்பதோடு, முகமும் நன்கு புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Herbal Beauty Tips for Beautiful Glowing Skin

Here are some simple herbal beauty tips for beautiful glowing skin. Read on to know more...
Story first published: Thursday, September 20, 2018, 18:01 [IST]
Desktop Bottom Promotion