உருளை கிழங்கை பயன்படுத்தி கருவளையத்தை போக்குவது எப்படி?

Posted By: Kripa Saravanan
Subscribe to Boldsky

தூக்கத்தில் குறைபாடு, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு அட்டவணை, ஆரோக்கிய கோளாறுகள், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, நீண்ட நேரம் கம்ப்யுட்டரில் வேலை செய்வது, போன்றவற்றால் கரு வளையம் ஏற்படுகிறது.

கருவளையத்தை போக்க உருளை கிழங்கை ஏன் பயன்படுத்த வேண்டும்?

உருளை கிழங்கில் இயற்கையாக ப்ளீச்சிங் தன்மை உண்டு. இதனால், கண்ணுக்கு கீழ் உள்ள பகுதியின் கரு வளையங்கள் நீக்கப்படுகின்றன.

உருளை கிழங்கில் வைடமின் சி , வைடமின் ஏ , ஸ்டார்ச், என்சைம்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இவை சருமத்திற்கு புத்துணர்ச்சி தந்து, கண்ணனுக்கு கீழே கரு வளையத்தை தடுக்கிறது.

How To Remove Dark Circles With Potatoes: 10 Effective Home Remedies

உருளை கிழங்கிற்கு அழற்சியை குறைக்கும் தன்மை உண்டு. ஆகவே, கண்ணுக்குக் கீழே வீக்கம் மற்றும் சிவப்பு நிறம் உண்டாவதை தடுக்கிறது.

உருளை கிழங்கு, சருமத்திற்கு ஈரப்பதத்தை தந்து, சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது.

கருவளையத்தை போக்க உருளை கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டும்?

உருளை கிழங்கை பயன்படுத்தி கருவளையத்தை போக்க எளிய 10 குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளை கிழங்கு சாறு :

உருளை கிழங்கு சாறு :

காய்கறிகளில் , உருளை கிழங்கு கருவளையத்தை போக்க மிக சிறந்ததாகும். இதனை சாறாக அல்லது துண்டுகளாக பயன்படுத்தி கருவளையத்தை போக்கலாம்.

வழிமுறை:

ஒரு பெரிய உருளை கிழங்கை எடுத்து தோல் உரித்து மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய உருளை கிழங்கில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

அந்த சாறை , ப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

பிறகு அந்த சாறை எடுத்து, சிறிது பஞ்சை அந்த சாறில் நனைத்து கருவளையத்தில் வைக்கவும்.

15 நிமிடங்கள் அந்த பஞ்சை கண்ணில் இருந்து எடுக்க வேண்டாம். பிறகு பஞ்சை எடுத்து, குளிர்ந்த நீரால் கண்களை கழுவவும்.

கருவளையம் நீங்கும் வரை இந்த முறையை தொடர்ந்து செய்யவும்.

உருளை கிழங்கு துண்டுகள்:

உருளை கிழங்கு துண்டுகள்:

மிக எளிய முறையில் கருவளையத்தை போக்க இந்த வழியை பின்பற்றவும்.

வழிமுறை :

ஒரு உருளை கிழங்கை ப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து, அதை வெளியில் எடுத்து, 2 சிறிய துண்டுகளை வெட்டவும்.

அந்த துண்டுகளை கண்களை சுற்றி வைக்கவும். கருவளையத்தின் மேல் இந்த உருளை கிழங்கு இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

20 நிமிடங்கள் அப்படியே விடவும்.

பின்பு அதனை எடுத்துவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவவும்.

ஒரு நாளைக்கு 2 முறை இதனை செய்யவும்.

உருளை கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் :

உருளை கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காயில் கொலோஜென் அதிகமாக உள்ளது. சருமம் மென்மையாக இருக்க இந்த கொலோஜென் பெரிதும் உதவுகிறது. சரும தளர்ச்சியை போக்கி, இறுக்கத்தை கொடுக்கிறது. சரும திட்டுகளை போக்கி, பளிச்சென்று வைக்க வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது. வெள்ளரிக்காயில் 95% நீர் உள்ளது. இதனால் சருமத்திற்கு ஈரப்பதமும் நீர்சத்தும் கிடைக்கிறது.

வழிமுறை:

ஒரு உருளை கிழங்கை தோல் உரித்து, துருவி கொள்ளவும்.

துருவிய உருளை கிழங்கில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வெள்ளரிக்காயை எடுத்து, துருவி , சாறு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில், உருளை கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் சாறை சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

இந்த கலவையை ப்ரிட்ஜில் சில நிமிடம் வைத்து குளிர வைக்கவும்.

பின்பு அதனை வெளியில் எடுத்து, அந்த சாறில் பஞ்சை நனைத்து, இரண்டு கண்களில் மேல் வைக்கவும்.

20 நிமிடங்கள் அப்படியே விடவும்.

பிறகு, பஞ்சை எடுத்து, குளிர்ந்த நீரால் கண்களை கழுவவும்.

ஒரு நாளைக்கு 3 முறை இதனை செய்யவும்.

உருளை கிழங்கு மற்றும் தேன் , மற்றும் ஆலிவ் எண்ணெய் :

உருளை கிழங்கு மற்றும் தேன் , மற்றும் ஆலிவ் எண்ணெய் :

தேனிற்கு அழற்சியை குறைக்கும் தன்மை உண்டு. இது சருமத்திற்கு இதமான உணர்வை தருகிறது. ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு சிறந்தது. இதில் வைட்டமின்கள், அன்டி ஆக்ஸ்சிடென்ட் , வீக்கத்தை குறைக்கும் தன்மை போன்றவை உள்ளன. சருமத்தை சுத்தம் செய்து பளிச்சென்று வைக்க இந்த எண்ணெய் பெரிதும் உதவுகிறது.

வழிமுறை:

ஒரு உருளை கிழங்கை எடுத்து நறுக்கி கொள்ளவும், அதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை கண்ணுக்கு கீழ் தடவவும். கண்களில் படாமல் கருவளையத்தில் மட்டும் படும்படி பார்த்துக் கொள்ளவும்.

30 நிமிடம் அப்படியே விடவும்.

பின்பு , வெது வெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.

ஒரு வாரத்திற்கு 3-4 தடவை இதனை செய்யவும்.

உருளை கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு :

உருளை கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு இயற்கையான ஒரு ப்ளீச். இந்த எலுமிச்சை, கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையத்தை போக்க உதவுகிறது. இந்த சாறு, இரத்த குழாய்களை இறுக்கமாக்க உதவுகிறது. இதனால் திரவ சேர்க்கையை குறைக்கிறது. எலுமிச்சை சரும புத்துணர்ச்சிக்கு உதவுகிறது.

வழிமுறை :

ஒரு உருளைகிழங்குடன் 4 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இந்த விழுதை ப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.

இந்த விழுது குளிர்ந்தவுடன், அதில் பஞ்சை நனைத்து, கண்களில் வைக்கவும்.

20 நிமிடம் அப்படியே வைக்கவும்.

பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

ஒரு வாரத்தில் 3-4 முறை இதனை செய்து வரவும்.

உருளை கிழங்கு மற்றும் தக்காளி விழுது :

உருளை கிழங்கு மற்றும் தக்காளி விழுது :

தக்காளி ஒரு இயற்கையான ப்ளீச். இது சருமத்தில் அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று வைக்க உதவுகிறது, மேலும் சருமத்திற்கு மென்மையை தருகிறது. தக்காளியில் உள்ள லிகோபேன் என்னும் அன்டி ஆக்ஸ்சிடென்ட் , கருவளையத்தை குறைக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ , சேதமடைந்த சருமத்தை உயிர்பிக்கிறது, மேலும், அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது.

வழிமுறை:

ஒரு தக்காளி மற்றும் ஒரு உருளை கிழங்கை எடுத்து நறுக்கி கொள்ளவும்.

இரண்டையும் ஒன்றாக அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

இந்த விழுதை பஞ்சில் நனைத்து, கண்களை சுற்றி அந்த பஞ்சை வைக்கவும்.

20 நிமிடம் அப்படியே விடவும்.

தினமும் இதனை தொடர்ந்து செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

உருளை கிழங்கு மற்றும் பாதாம் :

உருளை கிழங்கு மற்றும் பாதாம் :

பாதாம் பருப்புக்கு அழற்சியை தடுக்கும் தன்மை உண்டு. இது கண் வீக்கத்தை குறைத்து, கரு வளையத்தை போக்க உதவுகிறது. கண்ணுக்கு கீழ் இருக்கும் மென்மையான சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்க, பாதாம் எண்ணெய்யில் உள்ள ரெடினால் மற்றும் பாமிடிக் போன்றவை உதவுகின்றன.

வழிமுறை:

இரவு முழுதும் 3-5 பாதாமை ஊறவைக்கவும்.

ஒரு உருளை கிழங்கை தோல் உரித்து, பாதாமுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் .

இந்த விழுதில் பஞ்சை நனைத்து எடுத்துக் கொள்ளவும்.

அந்த பஞ்சை, கருவளையம் உள்ள கண்களில் வைத்து 20 நிமிடங்கள் அப்படி விடவும்.

பின்பு, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

தினமும் இந்த முறையை தொடர்ந்து செய்து வரவும்.

 உருளை கிழங்கு மற்றும் யோகர்ட் :

உருளை கிழங்கு மற்றும் யோகர்ட் :

யோகர்ட் ஒரு இயற்கையான ப்ளீச். சருமத்தின் கருமை நிறத்தை போக்கி, பளிச்சென்று வைக்க யோகர்ட் உதவுகிறது. சருமத்தின் இறந்த அணுக்களை வெளியேற்ற யோகர்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் உதவுகிறது. சருமத்திற்கு ஈரப்தத்தை கொடுக்கிறது.

வழிமுறை:

ஒரு உருளை கிழங்கை துருவி, சாறு எடுத்துக் கொள்ளவும்.

அந்த சாறை 1 ஸ்பூன் எடுத்து, அதில் 1 ஸ்பூன் யோகர்டை சேர்க்கவும்.

அந்த கலவையில் பஞ்சை நனைத்து, கண்களில் வைக்கவும்.

15 நிமிடம் கழித்து கண்களை சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்யவும்.

இந்த முறையை தொடர்ந்து தினமும் செய்யவும்.

உருளை கிழங்கு மற்றும் ஆப்பிள் :

உருளை கிழங்கு மற்றும் ஆப்பிள் :

ஆப்பிளில் டானிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு மென்மையை தருகிறது. அப்பிளில் இருக்கும் வைட்டமின் மற்றும் பொட்டசியம் கண்ணுக்கு கீழ் உள்ள இடங்களில் புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

வழிமுறை:

ஒரு உருளை கிழங்கு மற்றும் ஒரு ஆப்பிளை எடுத்துக் கொள்ளவும்.

இரண்டையும் வெட்டி, அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

இந்த விழுதை கண்களின் கீழே கருவளையத்தில் தடவி விடவும்.

20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

தினமும் இதனை செய்து வரவும்.

 உருளை கிழங்கு மற்றும் புதினா :

உருளை கிழங்கு மற்றும் புதினா :

புதினா இலையில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கொலோஜென் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால் சரும தளர்ச்சி குறைந்து, இறுக்கம் அதிகரிக்கிறது. புதினாவில் மென்தால் அதிகம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது , மேலும் கண் பகுதியில் மென்மையை அதிகரிக்கிறது.

வழிமுறை:

ஒரு உருளை கிழங்கை தோல் உரித்து, சிறிதளவு புதினாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இந்த விழுதை கரு வளையம் உள்ள இடத்தில் தடவவும்.

20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

தினமும் இதனை தொடர்ந்து செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Remove Dark Circles With Potatoes: 10 Effective Home Remedies

How To Remove Dark Circles With Potatoes: 10 Effective Home Remedies
Story first published: Monday, January 8, 2018, 8:30 [IST]