Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
கோதுமை மாவை இப்படி பயன்படுத்தினா முகத்திலுள்ள கருமையை உடனே போக்கலாம்
கோதுமை மாவைக் கொண்டு எளிதாக சருமத்தை ஜொலிக்க செய்யலாம். இதற்கு வீட்டிலேயே நீங்கள் இந்த பேஸ் பேக்குகளை தயார் செய்யலாம்.
இந்தியாவில் அதிகமாக கோதுமை உணவு ஒரு பிரதான உணவாக இருந்து வருகிறது. இதை ஆட்டா என்றும் அழைக்கிறார்கள். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் விட்டமின்களும் அடங்கி இருப்பதால் மக்கள் இதை உணவில் சேர்ப்பதை தவிர்ப்பதில்லை. இந்த கோதுமை மாவு உடலுக்கு மட்டும்மல்ல சருமத்திற்கும் மிகவும் நல்லது. சருமத்தை பொலிவாக ஜொலிக்க வைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது எல்லா சரும வகைக்கும் ஏற்றது.

இந்த கோதுமை மாவைப் பயன்படுத்தி வீட்டிலேயே சில பேஸ் பேக்குகளை தயாரித்து உங்கள் சரும அழகை பேண முடியும்.

சருமம் கருத்துப்போகாமல் இருக்க
2 கப் கோதுமை மாவு
1 கப் தண்ணீர்
ஒரு சுத்தமான பெளலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு, மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக குலைத்து கொள்ளுங்கள். கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். சூரியனால் கருத்த சருமத்தில் இப்பொழுது இந்த பேஸ்ட்டை தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தினமும் இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பொலிவான சருமத்திற்கு
2-3 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
1-2 டேபிள் ஸ்பூன் பால் க்ரீம்
பால் மற்றும் கோதுமை மாவை நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். இதை முகத்தில் அப்ளே செய்து 10 நிமிடங்கள் கழித்து வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். பிறகு சதாரண நீரில் கழுவவும். இதை தினமும் செய்து வந்தால் பொலிவான சருமத்தை பெறலாம்.

எண்ணெய் பசை சருமம்
4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
3 டேபிள் ஸ்பூன் பால்
1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்
ஒரு சுத்தமான பெளலில் கோதுமை மாவு, பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பேக் போட்டு கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி ஜொலிப்பை பெறுவீர்கள்

பட்டு போன்ற சருமம்
4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
2-3 டேபிள் ஸ்பூன் பால்
2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்
ரோஸ் இதழ்கள்
2 டேபிள் ஸ்பூன் தேன்
ஆரஞ்சு தோல்
ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். துருவிய ஆரஞ்சு தோலை தண்ணீரில் போட்டு சில ரோஜா இதழ்களையும் அதில் சேர்க்கவும். மூடியை கொண்டு மூடி சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும். பிறகு பாலை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் ஆரஞ்சு தோல், ரோஸ் மற்றும் தண்ணீர் கலந்த கலவையை சேருங்கள். பிறகு ஆற விடவும். கடைசியாக கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்து உலர விடவும். பிறகு சாதாரண நீரில் கழுவி துடைத்து விட்டு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள். பட்டு போன்ற சருமம் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications
