Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
ஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா? அப்போ மோர் தேய்ங்க
கடுமையான வெயிலால் எல்லோருடைய சருமமும் பாதிக்கப்படுவது இயல்பு தான் என்று விட்டவிட முடியுமா என்ன... அத அப்படியே தொடர்ந்து நம்முடைய சருமத்தை பாழாக்கிவிடும். இதற்கு வேர்வையும் முக்கிய காரணம் தான். அதனால்
எல்லோருக்குமே தங்களைத் தாங்களே கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொள்ள மிகப் பிடிக்கும். அதேசமயம் கொஞ்சம் கருப்பாக இருந்துவிட்டால் போதும். நான் மட்டும் ஏன் இவ்வளவு கருப்பாக இருக்கிறேன் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்த புலம்பல் அதிகமானால் அதுவே தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடுகிறது. இதெல்லாற்றையும் தூக்கிப் போடுங்கள். அதேபோல வெட்டியாக பார்லருக்கு செலவிடுவதை விட, வீட்டில் ஓய்வாக இருக்கும்போது சில சின்னச் சின்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும்.

தயிரும் சருமமும்
தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், ஈஸ்ட் பவுடர் அரை ஸ்பூன், இவை எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின் கழுவி விடவும். முகம் உடனே பளப்பளப்பாக மாறிவிடும். எங்காவது வெளியில் போகும் முன் இப்படி செய்து பாருங்கள். நீங்களே அசந்து போயிடுவீங்க. எல்லோரும் உங்களையே பார்க்கற மாதிரி உணர்வீங்க.

பாலாடையும் கருமையும்
தயிர் ஏடு அல்லது பால் ஏடு சிறிதளவு எடுத்துக்கொண்டு கால் ஸ்பூன் மஞ்சள் தூளை அதனுடன் சேர்த்து நன்கு நைசாகக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அந்த கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, பின் 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருக்கவும். இதை தினமும் செய்து வந்தாலே போதும் எப்படிப்பட்ட கருமையும் நீங்கி விடும்.

கரும்புள்ளி தொல்லையா?
ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

வழவழ சருமம் வேணுமா?
நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரைக் கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு பின் தண்ணீர் தொட்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

முகம் தோல் சுருங்கிடுச்சா?
சிலருக்கு கண்ட கண்ட க்ரீம்களையும் போட்டு நெற்றி, கண்ணுக்கு கீழ்ப்பகுதி, தாடை, கன்னப்பகுதிகளில் தோல் சுருங்கியிருக்கும். சிலருக்கு இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் உண்டாகியிருக்கும். அப்படி சுருக்கம் உள்ளவர்கள் கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ் செய்து இரவு முழுக்க விட்டு விட்டு காலையில் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். முகம் இளமையும், வசீகரமும் பெறும்.

எலுமிச்சைக்கு பதிலா சாத்துக்குடியா?
சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். முகம் பொலிவு பெறும். முகத்தில் பருக்கள் நிறைய இருந்தால் அந்த சாறுடன் சில துளிகள் தண்ணீர் விட்டு கலந்து கொள்ளுங்கள். முகத்தில் எரிச்சல் ஏற்படாமல் இருக்கும்.

பப்பாளி ஜூஸ்
பப்பாளிப்பழ சாறுடன் காய்ச்சாத பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும். மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

எண்ணெய் வழியுதா?
வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணை வழியாமல் இருக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

சருமம் கலராக
பொதுவாக வெயில் காலத்தில் நாம் மிக அதிகமாகவே ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிடுவோம். சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அப்படி செய்யாமல் அந்த தோலை நன்கு உலர்த்தி ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், சருமத்தில் ஏற்பட்ட கருமை மறையும். முகம் பொலிவாக பளபளப்பாக இருக்கும்.

கழுத்து கருமை
கழுத்தில் உள்ள கருமையை மறையச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு சிறந்த தீர்வாக பீட்ரூட் ஜூஸ் இருக்கும். இந்த பீட்ரூட்டைத் துருவி, அதன் ஜூஸை கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மோரும் குங்குமப்பூவும்
மோரில் லாக்டிக் அமிலமும் ஆல்பா ஹைட்ராக்சியும் மிக அதிக அளவில். இருக்கின்றன. இந்த மோருடன் சில துளிகள் குங்குமப்பூவை எடுத்துக் கலந்து 30 நிமிடங்கள் விட்டுவிடவும். 30 நிமிடம் கழித்து, நன்கு கரைந்த அந்த கலவையை எடுத்து சருமத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பாக நீரில் முகத்தைக் கழுவுங்கள். அப்புறம் பாருங்க மாற்றத்தை.



Click it and Unblock the Notifications