தழும்புகளை மறைய வைக்க 'விட்டமின் ஈ' உதவுமா? உண்மை என்ன?

Written By:
Subscribe to Boldsky

தழும்புகள் முகத்தின் அழகை கெடுப்பதாக இருக்கும். இந்த தழும்புகள் சிலருக்கு நீண்ட நாள் தழும்புகளாக அப்படியே முகத்தில் இருந்துவிடும். இது அவர்களுக்கு தழும்பு எப்படி உண்டானது என்பதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். இத்தகைய தழும்புகளை நாட்கள் பல ஆகும் முன்னரே இதனை கவனித்தால் விரைவாக இந்த தழும்புகளை மறைய வைக்கலாம்.

பெரும்பாலானவர்கள் தங்களது முகத்தில் இருக்கும் தழும்புகளை மறைய வைக்க விட்டமின் ஈ எண்ணெய்யை தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த விட்டமின் ஈ எண்ணெய் உண்மையாகவே தழும்புகளை போக்க உதவுமா? தழும்புகளை போக்க வேறு என்னென்ன வழிமுறைகள் எல்லாம் உள்ளன என்பது பற்றி இந்த பகுதியில் தொடந்து காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விட்டமின் ஈ

விட்டமின் ஈ

தழும்புகளை மறைய செய்ய வேண்டும் என்றால் அனைவரும் முதலில் பயன்படுத்துவது இந்த விட்டமின் ஈ-யை தான். இது சருமத்தில் உள்ள பிரச்சனைகளை போக்கவும், தலைமுடிகளை நன்றாக வளர செய்யவும் மிகவும் உதவுகிறது.

ஆதாரம்?

ஆதாரம்?

பலர் இந்த விட்டமின் ஈ தங்களது தழும்புகளை மறைப்பதாக கூறுகின்றனர். ஆனால் எப்படி விட்டமின் ஈ ஆயில் தழும்புகளை போக்க எப்படி சிறப்பாக செயல்படுகிறது என்பதை ஆய்வு பூர்வமாக இன்னும் கண்டறியமுடிவில்லை..

விட்டமின் ஈ- எப்படி பெறுவது?

விட்டமின் ஈ- எப்படி பெறுவது?

விட்டமின் ஈ, உங்களுக்கு நீங்கள் சாப்பிடும் சில வகை உணவுகளில் இருந்து கிடைக்கிறது. இது பச்சைக்காய்கறிகள், நட்ஸ், பயறு வகைகள் போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது. இவற்றை உங்களது உணவில் சேர்த்து வருவதால், உடலுக்கு தேவையான விட்டமின் ஈ கண்டிப்பாக கிடைக்கும்.

அதிகமாக சாப்பிட்டால்?

அதிகமாக சாப்பிட்டால்?

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து மட்டுமே மிஞ்சும். அதே போல தான் விட்டமின் ஈ-யையும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும். தினசரி 1000mg அளவு உட்க்கொள்ளலாம். மாத்திரைகளாக சாப்பிட்டால் எப்போதும் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

விட்டமின் ஏ

விட்டமின் ஏ

விட்டமின் ஏ உணவுகள் உங்களது உடல் ஆரோக்கியத்திற்கும், தழும்புகளை மறைய செய்வதிலும், சருமத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. விட்டமின் ஏ நிறைந்த உணவுகளாவன, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவை ஆகும்.

சர்க்கரை

சர்க்கரை

ஸ்கிரப் செய்வது என்பது முகத்தில் உள்ள இறந்த செல்களை போக்கவும், தழும்புகளை போக்கவும் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. கால் கப் அளவு சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிதளவு எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை உங்களது முகத்தில் அல்லது உடலில் எங்கு தழும்புகள் உள்ளதோ அந்த இடங்களில் மசாஜ் செய்யுங்கள். இதனை ஒரு வாரத்தில் குறைந்தது 8-10 முறையாவது செய்யுங்கள்.

ஹையலூரோனிக் அமிலம்

ஹையலூரோனிக் அமிலம்

உங்களது சருமத்தில் உள்ள கொலாஜன் என்ற பொருள் தான் உங்களது சருமம் எந்த வித பிரச்சனைகளும் இன்றி பாதுகாப்பாக இருக்க உதவுகிறது. இந்த கொலாஜன் என்பது வயதாக வயதாக உள்ளது உடலில் இருந்து குறைந்து கொண்டே இருக்க கூடியது ஆகும். இந்த கொலாஜனை அதிகப்படுத்த உதவுவது தான் ஹையலூரோனிக் அமிலம் (Hyaluronic acid) ஆகும். இது உங்களுக்கு ஆரோக்கிய உணவுகள் விற்பணை செய்யும் இடங்களிலும், ஆன் லைனிலும் கூட கிடைக்கும். இதனை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மாத்திரைகளாகவும் சாப்பிடலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

உங்களது சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் பாதிப்படைந்துள்ள சருமத்தை சரி செய்வதற்கு தேங்காய் எண்ணெய் பெரிதும் பயன்படும் ஒன்றாக இருக்கிறது. இந்த தேங்காய் எண்ணெய் சருமத்தில் உள்ள புண்கள் மற்றும் வடுக்களை விரைவிலேயே போக்கும் தன்மை உடையது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் உங்களது முகத்தில் வெர்ஜின் தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யுங்கள் இதனால் முகத்தில் உள்ள வடுக்கள், சிகப்பு புள்ளிகள் போன்றவை நீங்கும்.

பிளாக் சீட் ஆயில்

பிளாக் சீட் ஆயில்

இது மருத்துவ தாவரம் ஆகும். இந்த பிளாக் சீட் ஆயிலை (black seed oil) நீங்கள் ஆன் லைன் மூலமாக ஆடர் செய்து வாங்கலாம். இதில் உள்ள ஆண்டி பாக்டீரியல் தன்மையானது உங்களது சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்க உதவுகிறது. இது சருமத்தில் அங்காங்கே உள்ள கருமைகளை போக்குவதோடு மட்டுமல்லாமல், முகப்பருக்கள் வருவதையும் இந்த எண்ணெய் தடுக்கிறது. எனவே தழும்புகள், பருக்கள், முக கருமை போன்றவற்றிற்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

ரோஸ்கிப் சீட் ஆயில்

ரோஸ்கிப் சீட் ஆயில்

ரோஸ்கிப் சீட்ஆயில் (Rosehip Seed Oil) ஒரு மிகச் சிறந்த எண்ணெய் ஆகும். இது சருமத்தில் வரும் பிரச்சனைகளை போக்குவதில் உதவியாக உள்ளது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணெய் சருமத்தை பராமரிக்க உதவும் ஒரு பாதுகாப்பான எண்ணெய் ஆகும். இதனையும் நீங்கள் ஆன் லைன் மூலமாக ஆடர் செய்து பெறலாம். இது உங்களது சரும குழிகள், சருமத்தில் உள்ள தழும்புகள், கருமை போன்றவற்றை போக்க உதவியாக உள்ளது.

தேன்

தேன்

தேன் உங்களுக்கு எளிதாக கிடைக்க கூடிய ஒன்றாகும். இந்த தேன் ஆனது உங்களது முகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கும் உள்ள ஒரே மருத்துவ நிவாரணியாக செயல்படுகிறது. இதனை நேரடியாக சருமத்தின் மீது தடவலாம். இதில் உள்ள ஆண்டி பாக்டீரியல் தன்மையானது காயங்களை விரைவாக ஆற்ற உதவுகிறது.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை உங்களது அருகிலேயே இருக்கும் கை கண்ட மருந்தாகும். இதனை நீங்கள் கடைகளில் கிடைக்கும் ஜெல்களாக கூட வாங்கி பயன்படுத்தலாம். அல்லது மிக சுலபமாக அதிக பராமரிப்புகள் இன்றி இதை வீட்டிலேயே வளர்த்தலாம். இந்த கற்றாழை ஜெல்லை உங்களது முகத்தில் அன்றாடம் தடவி வந்தால் முகம் மென்மையாகவும், எந்த வித பிரச்சனைகளும் இன்றியும் ஆரோக்கியமாக இருக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை தழும்புகளை போக்க உதவும் மிகச்சிறந்த பொருளாகும். இந்த எலுமிச்சை சாறை முகத்திற்கு தொடந்து பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாக மறைவதை காணலாம். எலுமிச்சை சாறை நீங்கள் இலவங்கப்பட்டை பொடியுடன் கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால் விரைவில் தழும்புகள் இல்லாத சுத்தமான முகத்தை பெறலாம்.

மஞ்சள்

மஞ்சள்

சிறிதளவு கசகசா, சின்னதாக மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் எங்கே வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள். பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Remove Skin Scars Naturally

How to Remove Skin Scars Naturally
Story first published: Thursday, January 11, 2018, 14:30 [IST]