Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்த பொருளை கொஞ்சம் தடவினாலே கருவளையம் காணாமல் போகும் தெரியுமா?
இந்த பொருளை கொஞ்சம் தடவினாலே கருவளையம் காணாமல் போகும் தெரியுமா?
முகம் பார்ப்பதற்கு எவ்வளவு தான் அழகாக இருந்தாலும் கூட கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் உங்களது முகத்தின் அழகை குறைத்து காட்டிவிடும்.. கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் உங்களது முகத்தை மிகவும் சோர்வாக காட்டும்..
கண்களுக்கு கீழே கருவளையங்கள் வர ஊட்டச்சத்து குறைபாடு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.. கருவளையங்கள் நீங்கள் ஊட்டச்சத்து மிகுதியாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

ஓய்வு அவசியம்
அளவுக்கதிகமாக டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது, கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது, இரவு ஷிஃப்ட் என்கிற பெயரில் தூக்க முறையையே மாற்றிக் கொள்வது போன்றவை கருவளையங்களுக்கு முக்கிய காரணங்கள். எப்போதுமே, அது பகலோ, இரவோ... தூங்கி எழுந்த பிறகு பார்த்தால் எல்லோருடைய முகமுமே அழகாக இருப்பதை உணரலாம். தூக்கத்தின் போதுதான் உறுப்புகள் ஓய்வெடுப்பதுடன், ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். மேலே சொன்ன விஷயங்களால் ரத்த ஓட்டம் தடைப்படும். ரத்தக் குழாய்கள் சுருங்கும். அதன் வெளிப்பாடு முடி உதிர்வாகவோ, கண்களுக்கடியிலான கரு வளையங்களாகவோ தெரியும்.

ஊட்டச்சத்து
ஆரோக்கியம் என நினைத்துக் கொண்டு, வெறுமனே ஓட்ஸாகவோ, கார்ன்ஃப்ளேக்ஸாகவோ சாப்பிடுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு உணவையே தொடர்ந்து சாப்பிடு கிற போது, உடலுக்குத் தேவையான எல்லா சத்துகளும் கிடைப்பதில்லை. சருமமோ, கூந்தலோ ஆரோக்கியமாக இருக்க, எல்லா சத்துகளும் அவசியம். முந்தைய காலங்களில் கருவளையப் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் யாரும் கேள்வியே பட்டிருக்க மாட்டார்கள். காரணம், அவர்களது சரிவிகித, சத்தான சாப்பாடு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து. அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல் வைத்துக் கொண்டால்தான் பலன்.

டீ பைகள்
உபயோகித்த டீ பைகளை கண்களின் மேல் வைப்பது முழுமையான பலன் தராது. திக்கான டீ டிகாக்ஷனை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதில் பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கிரீன் டீயாக இருந்தால் இன்னும் சிறப்பு.

கார்போக அரிசி
கார்போக அரிசி, கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும். அது ஆறியதும் அதில் 10 மி.லி. சுத்தமான பன்னீர் கலந்து, அப்படியே 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி. பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும். உடனடியாக ஒரு போட்டோ செஷனுக்கு தயாராக வேண்டும், வெளியே பார்ட்டிக்கு போக வேண்டும், கருவளையங்கள் தெரியக்கூடாது என நினைக்கும் போது இந்த சிகிச்சை இன்ஸ்டன்ட் பலன் தரும்.

சாமந்திப்பூ
2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 100 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, உடனே மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் கூட விரட்டும். அதிக எண்ணெய் பசையை நீக்கும்.

தாமரை இதழ்கள்
பிங்க் நிற தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்.

முள்ளங்கி சாறு
முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி. எலுமிச்சைச் சாறும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.

பாதாம்
பாதாமை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்கள் மறையும்.

வெள்ளரிக்காய்
இது அனைவருக்குமே தெரிந்த செயல் தான். அது வேறொன்றும் இல்லை வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு
1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள் தூள்
2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் கண்களைச் சுற்றி தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கருவளையங்களைப் போக்கலாம்.

புதினா
புதினா இலைகளை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.



Click it and Unblock the Notifications











