சரும வறட்சியைத் தடுக்கும் பழ ஃபேஸ் பேக்குகள்!

Posted By:
Subscribe to Boldsky

சரும வறட்சி என்பது மிகவும் அதிகமாக பனி பொழியும் போது மற்றும் பருவநிலை மாறும் போதும் சிலருக்கு ஏற்படும். சிலருக்கு இயற்கையாகவே வறட்சியான சருமம் இருக்கும். இத்தகையவர்கள் தினமும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தாவிட்டால், அவர்களது சருமமே அசிங்கமாக காட்சியளிக்கும். சிலர் சரும வறட்சியைத் தடுக்க தினமும் எண்ணெயை பயன்படுத்துவார்கள். என்ன தான் எண்ணெய் பயன்படுத்தினாலும், அந்த எண்ணெயை சிலரது சருமம் முற்றிலும் உறிஞ்சி, மீண்டும் வறட்சியை உண்டாக்கும்.

Fruit Face Packs To Avoid Dry Skin

இத்தகையவர்கள் தங்களது சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை அன்றாடம் கொடுக்க வேண்டியது அவசியம். அப்படி கொடுக்காமல் சரும வறட்சியை விட்டுவிட்டால், அதனால் சருமத்தில் வெடிப்புக்கள் வர ஆரம்பித்து, காயங்களை உண்டாக்கி, வேறு சில பிரச்சனைகளுக்கும் வழிவகுத்துவிடும். சரி, வறட்சியான சருமத்தினர் எம்மாதிரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

வறட்சியான சருமத்தினர் தங்களது சரும வறட்சியைத் தடுக்க ஒருசில பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நிச்சயம் வறட்சியைத் தடுக்கலாம். உங்களுக்கு எந்த பழங்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் சரும வறட்சியைத் தடுக்கும் பழ ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதுளை ஃபேஸ் பேக்

மாதுளை ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் மாதுளை ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் டோனரைப் பயன்படுத்த வேண்டும்.

* இந்த மாஸ்க்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்த, முகத்தில் ஏற்படும் வறட்சி நீங்கும்.

ஆரஞ்சு ஃபேஸ் பேக்

ஆரஞ்சு ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரந்தோறும் பயன்படுத்தினால், சரும வறட்சியால் அசிங்கமாக தோல் உரிந்து காணப்படுவதைத் தவிர்க்கலாம்.

வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழ ஃபேஸ் பேக்

* ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தைப் போட்டு மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* அதைத் தொடர்ந்து சருமத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.

* இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த, சரும வறட்சி அகலும்.

ஆப்பிள் ஃபேஸ் பேக்

ஆப்பிள் ஃபேஸ் பேக்

* ஆப்பிளை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு முகத்தில் அந்த கலவையைத் தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், நல்ல பலனைப் பெறலாம்.

அவகேடோ ஃபேஸ் பேக்

அவகேடோ ஃபேஸ் பேக்

* அவகேடோ பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த பழக்கூழை முகம் முழுவதும் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின் முகத்தை நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சரும வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

திராட்சை ஃபேஸ் பேக்

திராட்சை ஃபேஸ் பேக்

* ஒரு கையளவு திராட்சையை எடுத்து பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும்.

* இந்த ஃபேஸ் பேக்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சருமம் அதிகம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.

பேரிக்காய் ஃபேஸ் பேக்

பேரிக்காய் ஃபேஸ் பேக்

* பேரிக்காயை நன்கு நன்கு அரைத்துக் கொண்டு, அத்துடன் 1/2 டீஸ்ழுன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றினால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

* ஸ்ட்ராபெர்ரிப் பழத்தை நன்கு மசித்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு பளிச்சென்று காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fruit Face Packs To Avoid Dry Skin

Try these fruit face packs in order to avoid dry skin. Read on to know more...
Story first published: Tuesday, February 20, 2018, 19:14 [IST]