For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரு வந்த இடத்துல வடுவா மாறிடுச்சா? இத தடவுங்க... இருந்த இடம் தெரியாம போயிடும்

நிறைய பருக்கள் வந்து தொல்லை தருவதோடு அதன் தடத்தையும் விட்டு விட்டு போய் விடுகிறது. எனவே இந்த மாதிரியான பருக்களை உடனே கண்டு கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு தான் நாங்கள் சில வீட்டு முறைகளைக் பற்

|

பருக்கள் என்பது உங்கள் அழகான தோற்றத்தை மட்டும் கெடுப்பதோடு தீராத வலியையும் எரிச்சலையும் தருகிறது. இந்த பருக்களை போக்க நாம் நிறைய அழகு முறைகளையும் க்ரீம்களையும் பயன்படுத்தினாலும் என்னவோ மிஞ்சுவது பக்க விளைவுகள் மட்டுமே.

Effective 2-Ingredient Face Masks For Acne Scars

நீங்கள் சரியான முறையை தேர்ந்தெடுக்கா விட்டால் உங்கள் சரும அழகும் கெட்டுப் போய் விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பரு வடுக்கள்

பரு வடுக்கள்

நிறைய பருக்கள் வந்து தொல்லை தருவதோடு அதன் தடத்தையும் விட்டு விட்டு போய் விடுகிறது. எனவே இந்த மாதிரியான பருக்களை உடனே கண்டு கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு தான் நாங்கள் சில வீட்டு முறைகளைக் பற்றி இங்கே கூறப் போகிறோம். இந்த இரண்டு பொருட்களைக் மட்டும் கையில் எடுங்கள். உங்கள் பருக்கள் மாயமாய் மறைந்து போகும்.

MOST READ: எதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிற ஐந்து ராசிகள் எவை? அட நீங்களும் இந்த ராசியா?

கற்றாழை ஜெல் மற்றும் லெமன் ஜூஸ்

கற்றாழை ஜெல் மற்றும் லெமன் ஜூஸ்

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்

1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

பயன்படுத்தும் முறை

கற்றாழை இலையிலிருந்து கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக ஒரு பெளலில் எடுத்து கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு லெமன் ஜூஸை அதனுடன் சேர்த்து கலக்கவும். இப்பொழுது இந்த மாஸ்க்கை முகத்தில் போடுங்கள். இதை அப்படியே 20 - 30 நிமிடங்கள் காய விடவும். 30 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 3-4 தடவை என தினமும் செய்யவும்.

பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய்

பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய்

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா

2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

பயன்படுத்தும் முறை

இது உங்கள் சருமத்திற்கு ஒரு ஸ்க்ரப் மாதிரி செயல்படுகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் பவுடர் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்திற்கு ஸ்கரப் மாதிரி பயன்படுத்துங்கள். இதை ஒரு 2-3 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

MOST READ: இனிமேல வெறும் டீக்கு பதிலா அதுல இப்படி ஒரு பட்டையை போட்டு குடிங்க... ஏன்னு தெரியுமா?

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன்

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் தேன்

1/2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் ஆப்பிள் சிடார் வினிகர், தேன் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது இந்த பேஸ்ட்டை எடுத்து நன்றாக மசாஜ் செய்யவும். 15-20 நிமிடங்கள் வைத்து இருந்து பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை ஒரு வாரம் என செய்து வந்தால் தழும்புகள் மாறி விடும்.

MOST READ: இந்த ராசிக்காரர் இன்னைக்கு கேட்கிற இடமெல்லாம் பணம் கிடைக்குமாம்... கேட்டு பாருங்களேன்

முட்டையின் வெள்ளை கரு மற்றும் லெமன்

முட்டையின் வெள்ளை கரு மற்றும் லெமன்

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் முட்டையின் வெள்ளை கரு

1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்

பயன்படுத்தும் முறை

முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து ஒரு பெளலில் போட்டு கொள்ளுங்கள். அதில் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். நல்ல ஸ்மூத்தாக வந்ததும் முகத்தில் அப்ளே செய்யுங்கள். சில நிமிடங்கள் வைத்து இருந்து சாதாரண நீரில் கழுவவும். முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் அழகு பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective 2-Ingredient Face Masks For Acne Scars

If we do not choose the right remedies in the process, it could even damage the skin. Aloe vera gel, egg, baking soda, apple cider vinegar these are remedies used for treating acne.
Story first published: Monday, December 3, 2018, 15:36 [IST]
Desktop Bottom Promotion