சரும அலர்ஜிகளை விரைவில் மறையச் செய்யும் அற்புதக் குறிப்புகள்!!

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

ஒரு பெரிய அசெளகரியமான சரும பிரச்சினை என்றால் அது சரும வடுக்கள் பிரச்சினை தான். பெரும்பாலான சரும வடுக்கள் எரிச்சல், அழற்சி, அரிப்பு மற்றும் சிவந்த சருமத்துடன் ஏற்படுகிறது.

இந்த சரும வடுக்கள் நமது உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றும். இதன் வீரியத்தை பொருத்து இதற்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் தீவிரம் அதிகமாகும் போது சரும மருத்துவரை அணுகுவது தான் நல்லது.

Best Remedies To Get Relief From Skin Rashes

பொதுவாக ஏற்படும் சரும வடுக்கள் வீரியம் குறைந்த தன்மையுடனே காணப்படுகின்றன. நம் உடலில் ஏற்படும் அழற்சிக்கு ஏற்ப நமது தோலும் சரும பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது. அதிகமான சூரிய ஒளி, எக்ஸிமா போன்ற காரணிகளும் சரும வடுக்களை ஏற்படுத்துகின்றன.

இந்த சரும வடுக்களை போக்க நிறைய மருத்துவ க்ரீம்கள் இருந்தாலும் அவற்றில் உள்ள கெமிக்கல்கள் பக்க விளைவுகளை உண்டு பண்ணுகிறது.

எனவே இதற்கு இயற்கை முறையில் உள்ள பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆன்டி செப்டிக் பொருட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள்கள் போன்றவை அழற்சி பரவாமல் தடுக்க உதவுகிறது. மேலும் சரும வடுக்களை குணப்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக மாற்றுகிறது.

எனவே இங்கே சரும வடுக்களை போக்கும் சில இயற்கை பொருட்களை பற்றி இக்கட்டுரையில் பேச உள்ளோம். சிவந்த தோல், அழற்சி, அரிப்பு போன்றவற்றை களையும் இப்பொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் சரும வடுக்களை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு 15-20 நிமிடங்கள் சரும வடுக்கள் ஏற்பட்ட இடத்தில் இதை தடவி விட்டால் போதும் சரும வடுக்கள் காணாமல் போய்விடும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் சரும வடுக்களை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதிக்கப்பட்ட சருமத்தில் சமைத்த ஓட்ஸ் கலவையை தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் சரும வடுக்களை தடுப்பதோடு சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தையும் கொடுக்கிறது. கொஞ்சம் ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

 ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள்

இந்த சரும வடுக்களை போக்குவதில் ஜஸ் கட்டிகள் உதவுகிறது. அரிப்பை மட்டும் போக்குவதோடு அழற்சி, சிவந்த சருமம் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் சில ஐஸ் கட்டிகளை கட்டிக் கொண்டு சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இதை ஒரு நாளில் சில தடவை என்ற முறையில் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

கெமோமில் டீ

கெமோமில் டீ

இந்த சரும வடுக்கள் பிரச்சினையை போக்குவதில் கெமோமில் டீ மிகுந்த நன்மை அளிக்கிறது. இந்த ஹெர்பல் டீ அரிப்பு மற்றும் அழற்சி யிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட சருமத்தில் கெமோமில் டீயை தடவினால் போதும் நல்ல மாற்றத்தை காணலாம்.

 கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது இதனால் சரும வடுக்களிலிருந்து இது உடனடி நிவாரணம் அளிக்கிறது. இந்த கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20-25 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். சரும வடுக்கள் இல்லாத ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.

பட்டர் மில்க்

பட்டர் மில்க்

அழற்சியால் ஏற்படும் சரும வடுக்களை போக்குவதில் பட்டர் மில்க் மிகுந்த நன்மை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட சருமத்தை பட்டர் மில்க்கால் கழுவ வேண்டும். அப்படியே வைத்து இருந்து 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள ஆன்டி செப்டிக் பொருட்கள் இந்த அசெளகரியமான சரும வடுக்களை எளிதாக போக்குகிறது. ஆப்பிள் சிடார் வினிகரை தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். 5-10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

 துளிசி இலைகள்

துளிசி இலைகள்

சரும வடுக்களை போக்குவதில் துளசி இலைகள் பெரிதும் பயன்படுகிறது. ஒரு கையளவு துளசி இலைகளை நன்றாக நசுக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Remedies To Get Relief From Skin Rashes

Best Remedies To Get Relief From Skin Rashes
Story first published: Wednesday, January 3, 2018, 20:00 [IST]
Subscribe Newsletter