Latest Updates
-
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட்? எந்த எண்ணெயைத் தவிர்க்க வேண்டும்? மருத்துவர் தரும் விளக்கம்! -
50 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்த இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார அரசர் யார் தெரியுமா? -
வக்கிர சனியால் டிசம்பர் 11 வரை இந்த 5 ராசிக்கு மிகவும் ஆபத்தான காலகட்டம்.. உஷார்.. -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!
அட..! சப்போட்டாவ வச்சி முகத்தை பளபளப்பாக்கலாமா..! எப்படினு தெரிஞ்சுக்கோங்க...
முக அழகை பெறுவது அவ்வளவு கடினமானது கிடையாது. மிக சுலபமாகவே நம் வீட்டில் இருக்கும் காய்கறிகள் பழங்களை வைத்து இந்த முக அழகை பெற்று விடலாம். கூடவே, முடியின் பிரச்சினைகள் அனைத்தையும் எளிதாக தீர்வுக்கு கொண்டு வந்து விடலாம். இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமான்னு கேக்குறவங்களுக்கு சப்போட்டாவோட அழகு குறிப்புகள கேட்ட வாய் அடைச்சு போயிடுவீங்க.

உண்மைதாங்க, சப்போட்டாவ வச்சு பலவித விதைகளை நம்மால் காட்ட முடியும். பளபளப்பான முகம் முதல் அழகான முடி வரை உஙக்ளுக்கு வேண்டுமென்றால், அதற்கு இந்த சப்போட்டா குறிப்பை பாருங்க நண்பர்களே...

அழகு ரசியம் நிறைந்தது..!
அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் இந்த சப்போட்டாவும் ஒன்று. இதில் உள்ள வைட்டமின் எ, சி, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போனவை தான் இதன் மகிமைக்கு காரணமாம். இந்த பழம் எப்படி உங்கள் முகத்தை பொலிவுடன் வைக்கிறது என்பதை இனி அறிவோம்.

இளமையாக இருக்க
முகம் பார்க்க பொலிவாகவும், இளமையாகவும் இருக்க இந்த குறிப்பு பயன்படுகிறது. இதற்கு தேவையானவை...
தேன் 1 ஸ்பூன்
பால் 2 ஸ்பூன்
சப்போட்டா 1

செய்முறை :-
முதலில் சப்போட்டாவை நன்கு அரைத்து கொண்டு அதனுடன் தென் மற்றும் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த மாஸ்க்கை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பொடுகு தொல்லைக்கு
பலருக்கு மண்டையில் ஏற்படும் வறட்சியினால் பொடுகு தொல்லை அதிகமாக இருக்க கூடும். இதன் விளைவு முடி கொட்டுதல், வழுக்கை என படி படியாக பல விளைவுகளை தரும். இதனை போக்க இந்த குறிப்பு போதும்.
தேவையானவை...
சப்போட்டா விதைகள் 8
ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் சப்போட்டா விதைகளை தனியாக எடுத்து கொண்டு, நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த பேஸ்டுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து தலையின் ஒவ்வொரு பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து தலையை அலசவும். இவ்வாறு செய்து வந்தால் பொடுகு தொல்லைகு பய் பய் சொல்லிடலாம்.

தங்கம் போல மின்ன
முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி தங்கம் போல பளபளவென மின்ன இந்த குறிப்பு போதும். இதற்கு தேவையானவை...
சப்போட்டா பழம் 1
தேன் 1 ஸ்பூன்
சர்க்கரை 1 ஸ்பூன்

செய்முறை :-
சப்போட்டாவை தோல் மற்றும் விதைகளை நீக்கி அரைத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றுடன் தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவாக இருக்கலாம்.

சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்..!
சப்போட்டாவை மேற்சொன்ன குறிப்புகள் போன்று பயன்படுத்தினால் முடி மற்றும் முகத்தின் பிரச்சினைகள் தீர்ந்து விடும். அதே போன்று இதனை அப்படியே சாப்பிட்டால் உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் முக ஆரோக்கியமும் சேர்ந்து நலம் பெறும்.
இது போன்ற புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications
