Latest Updates
-
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா?
ஆண்களின் முகத்தை இளமையாக வைக்கும் 8 ஆயுர்வேத முறைகள்..!
ஆண்களின் அழகிற்கு அழகு சேர்க்க பல வகையான வேதி பொருட்கள் இன்று சந்தையில் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் ஆண்களின் அழகை கெடுத்துவிடும்.
அழகு என்பது பெண்களுக்கு மட்டும்தானா...! என்ற கேள்வி ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அழகு என்பதில் எப்போதும் வேறுபாடு இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். எவ்வாறு ஒரு பெண் தன்னை அழகு செய்து கொள்கிறாளோ, அதே போன்று ஒரு ஆணும் அழகு செய்து கொள்ளலாம். அனைத்திலும் சமத்துவம் பேசும் நாம் ஏன் இதில் பேசுவதில்லை..? பெண் மட்டும்தான் அழகு செய்ய வேண்டும் என்கிற பழைய கால பேச்சுகள் எல்லாம் மலையேறி போயிற்று. இன்று ஆண்களும் தங்கள் முகத்தை அழகு செய்ய எண்ணுகிறார்கள்.

முகம் மட்டுமின்றி தங்கள் முழு உருவத்தையும் மற்றவரிடம் அழகாக காட்ட வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த எண்ணம் முற்றிலும் நியாயமானதே. ஆண்களின் அழகிற்கு அழகு சேர்க்க பல வகையான வேதி பொருட்கள் இன்று சந்தையில் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் ஆண்களின் அழகை கெடுத்துவிடும். அத்துடன் பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இவற்றிற்கு மாறாக ஆண்களின் அழகை இயற்கை வழியாக அழகு படுத்தும் ஆயர்வேத அழகு குறிப்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குறிப்பு #1
ஆண்களின் முகம் எப்போதும் மினுமினுவென மினுக்க வேண்டுமா..? அதற்கு இந்த அழகு குறிப்பே போதும். வெளியில் ஆண்கள் அதிகம் செல்வதால் முகத்தில் எண்ணற்ற கிருமிகள் ஒட்டி கொள்ளும். இவற்றை நீக்கி பொலிவான முக பெற, அரை வாழைப்பழத்தை நமக்கு அரைத்து கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கிருமிகள் நீங்கி பொலிவு பெரும்.

குறிப்பு #2
பெரும்பாலான ஆண்களுக்கு முகம் மிகவும் வறண்டு காணப்படும். இதனை குணப்படுத்த இந்த அழகு குறிப்பு ஒன்றே போதும். அரை வெள்ளரிக்காயை எடுத்து கொண்டு நன்கு அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் பூசவும். இதனை வாரத்திற்கு 2 முறை இரவில் செய்து காலையில் முகம் கழுவினால் வறண்ட சருமம் புத்துணர்வுடனும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.

குறிப்பு #3
கரும்புள்ளிகள் கொண்ட முகத்தை சரி செய்ய 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், சிறிது அரைத்த வேப்பங்கொழுந்து, 1/2 மஞ்சள், சிறிது பால் அல்லது ரோஸ் நீர் ஆகியற்றை நன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் வந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். இந்த அழகு குறிப்பை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே கரும்புள்ளிகள் மறையும்.

குறிப்பு #4
பல ஆண்களின் முகம் மிகவும் மங்கலாக இருக்கும். அவர்களுக்கென்றே இந்த அழகு குறிப்பு உள்ளது. சிறிது ஆரஞ்ச் பழ தோலை எடுத்து அரைத்து கொண்டு, அதனுடன் பால் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்தால் மங்கலாக இருந்த முகம் பளபளப்பாக மாறும். அத்துடன் முகத்தில் உள்ள அழுக்குகளையும் நீக்கும்.

குறிப்பு #5
இன்று பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் முக பிரச்சினைகளில் முதன்மையானது இந்த முகப்பருக்கள்தான். இவற்றை போக்க 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் யோகர்ட், பொடி செய்த ஆரஞ்ச் தோல், ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முக பருக்கள் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலனை பெறலாம்.

குறிப்பு #6
முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள், அதிகமாக எண்ணெய்யை வெளியேற்றுவதால் முகம் எப்போதும் பார்க்க பிசுபிசுப்புடனும், எண்ணெய் வழிந்த படியும் இருக்கும். இதற்கு தீர்வு இந்த ஆயர்வேத முறையே...! 2 டீஸ்பூன் முல்தானி மட்டி, 1 டீஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு, ரோஸ் நீர் ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவவும். பிறகு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகத்தின் எண்ணெய் பிசுக்குகள் நீங்கும்.

குறிப்பு #7
மிகவும் அழகான சருமம் வேண்டுமென்றால் இதனை செய்து பாருங்கள். 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் பால், 1 டீஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தடவினால் முகம் மிக அழகாகும். இந்த அழகு குறிப்பை வாரத்திற்கு 1 முறை செய்தால் முகம் மின்னுவதோடு, எந்தவித சரும பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கும்.

குறிப்பு #8
என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையாருக்குத்தான் இருக்காது. நீண்ட நாட்கள் இளமையாக இருக்க இந்த ஆயர்வேத முறை நன்கு பயன்படும். பசும்பாலில் நெய்யை 1/2 டீஸ்பூன் எடுத்து கொண்டு சிறிது பாலுடன் சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்தால் முகம் இளமையாக இருக்கும். அத்துடன் முகத்தில் உள்ள செல்களை மறு உற்பத்தி செய்யும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications
