Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
சிவப்பழகு பெற வேண்டுமா? இந்த இரண்டு பொருள் கையில் இருந்தாலே போதும்
பேஸ் பேக்குகள் உங்கள் முகத்திற்கு புத்துயிர் அளிப்பதோடு நல்ல நிறழகையும் கொடுக்கிறது. அதிலும் தயிரும் வாழைப்பழ பேஸ் பேக் உங்களுக்கு உடனடியான சிவப்பழகையும் பளிச்சென்ற பார்வையும் ஒரு நொடிப் பொழுதில் தந்த
நம் முகத்தை அழகாக்க வேண்டும் என்றாலே நாம் முதலில் நாடுவது அழகு நிலையங்களைத் தான். ஆனால் அடிக்கடி கெமிக்கல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் போது உங்கள் முகழகு கெடவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் வீட்டிலேயே இயற்கையான முறையில் பேஸ் பேக்குகளை செய்து பயன்படுத்தும் போது குறைவான செலவில் பக்க விளைவுகள் இல்லாத முகழகை பெற இயலும். பேஸ் பேக்குகள் உங்கள் முகத்திற்கு புத்துயிர் அளிப்பதோடு நல்ல நிறழகையும் கொடுக்கிறது. அதிலும் தயிரும் வாழைப்பழ பேஸ் பேக் உங்களுக்கு உடனடியான சிவப்பழகையும் பளிச்சென்ற பார்வையும் ஒரு நொடிப் பொழுதில் தந்து விடும்.

சரி வாங்க இந்த இரண்டு பொருளைக் கொண்டோ உங்க சிவப்பழகை மெருகேற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
1 பழுத்த வாழைப்பழம்
1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

பயன்படுத்தும் முறை
வாழைப்பழம் ரெம்பவும் பழுத்திருக்க வேண்டாம். மீடியமான அளவில் பழுத்திருப்பதை எடுத்துக் கொள்ளுங்கள்
தோலை உரித்து விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்
1/3 பங்கு யோகார்ட் இதனுடன் சேர்க்கவும்
சாதாரணமான யோகார்ட்டை பயன்படுத்துங்கள். ப்ளோவர்டு யோகார்ட் வேண்டாம்.
நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளுங்கள்

அப்ளே செய்யும் முறை
முதலில் உங்கள் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்து உலர்த்தி கொள்ளுங்கள்
இப்பொழுது தயாரித்த பேஸ் பேக் கலவையை முகத்தில் எல்லா இடங்களிலும் தடவுங்கள்
கழுத்துப் பகுதியிலும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள்.
கோடை காலமாக இருந்தால் ஒரு 15 நிமிடங்கள் அப்படியே இதை வைத்து இருங்கள். இதுவே குளிர் காலமாக இருந்தால் 20 நிமிடங்கள் வரை உலர வையுங்கள்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
பிறகு எப்பொழுதும் போல் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி கொள்ளுங்கள்

குறிப்பு
இந்த பேஸ் பேக்கை 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கூட நீங்கள் பயன்படுத்தலாம். உங்களுக்கு பால் அழற்சி இருந்தால் யோகார்ட்டை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முழங்கையில் சிறிது அப்ளே செய்து பரிசோதனை செய்து கொண்டு அப்புறம் உபயோகிக்கவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு பிறகு எந்த வித சரும வடுக்கள், அழற்சி போன்றவை ஏற்படவில்லை என்றால் நீங்கள் யோகார்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் விட்டமின் ஏ, பி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள பொட்டாசியம் உங்கள் சரும நிறத்தை மெருகேற்றும். சரும பிரச்சினைகளை இயற்கையாகவே எதிர்த்து போரிடுகிறது.
மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், கொப்புளங்கள் போன்றவற்றை போக்கி மாசு மருவற்ற முகழகை தருகிறது. சரும சுருக்கங்கள் இருந்தால் அதற்கு எதிராக செயல்பட்டு சருமத்தை இளமையாக காக்க உதவுகிறது.

யோகார்ட்
இதிலுள்ள ஆல்பா ஹைட்ராக்ஸில் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. இதனால் முகம் எப்போதும் ப்ரஷ்ஷாக ஜொலிக்க முடியும். எண்ணெய் பசை சருமம், பருக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. 50 வயதை அடைந்தவர்கள் தங்களது இளமையை தக்க வைக்க இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒட்டுமொத்த பயன்கள்
பருக்கள், சரும பிரச்சினைகள், சருமம் வயதாகுதல் போன்றவற்றை போக்கி சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தையும் நிறத்தையும் கொடுக்கிறது.
என்னங்க உங்கள் முகத்தில் உள்ள டென்ஷன், களைப்பு இவற்றையெல்லாம் போக்கி அழகாக ஜொலிக்க இந்த இரண்டு பொருளை கையில் எடுத்திட்டிங்களா.



Click it and Unblock the Notifications
