For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நைட்ல இந்த க்ரீமை தடவிட்டு படுங்க... காலைல என்ன மாயம் நடக்குதுன்னு நீங்களே பாருங்க...

  |

  நீங்கள் எந்த நகரத்தில் வாழ்ந்தாலும், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, உங்கள் தோல் ஒரு குறிப்பிட்ட அளவு மாசுபாடுக்கு உட்படுத்தப்படுவது என்பது தெளிவான ஒன்று. அனைத்து மாசுபாட்டின் ஒட்டுமொத்த விளைவாக, உங்கள் தோல் பாதிப்புக்கு உள்ளாகிறது.

  beauty

  இந்த சேதத்தின் செயல்திறனை குறைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இது பருவத்திற்கு முந்தைய முதுமை, தோலின் மந்தநிலை மற்றும் நெகிழ்ச்சி தன்மை இழத்தல் போன்ற பல எதிர்மறையான சருமப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எப்பொழுதாவது ஒருமுறை விலையுயர்ந்த சரும சிகிச்சை பெறுவதும் எந்த ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கதிர்வீச்சு

  கதிர்வீச்சு

  சூரியக் கதிவீச்சு மற்றும் தினசரி மாசுபாடு ஆகியவற்றோடு உங்கள் தோல் தொடர்பு கொள்வதை தவிர்க்க முடியாது என்பதால், சில நீண்டகால சேதத்திற்கு உட்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி, அன்றைய நாளில் ஏற்படும் பாதிப்பிற்கு அன்றைக்கே தீர்வு காணுதலாகும். அத்தகைய ஒரு விஷயம் நடந்தால், தோல் சேதம் நாளுக்கு நாள் அதிகரிக்காது மேலும் கவனிக்கப்பட வேண்டிய சேதம் ஏற்படாது.

  உங்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய உண்மை யாதெனில், தோல் சேதத்தை சமாளிக்க விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவதற்கு நிறைய பணம் முதலீடு செய்ய தேவை இல்லை அல்லது நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களிலிருந்து குழப்பமான கலவைகள் மற்றும் பசைகள் போன்றவை தயார் செய்ய மணிக்கணக்கில் நேரத்தை செலவிட வேண்டியதில்லை.

  நைட் க்ரீம்

  நைட் க்ரீம்

  ஒரு சோப்பு அல்லது முகம் கழுவி (பேஸ் வாஷ்) கொண்டு உங்கள் முகத்தை கழுவி பின்னர் முகத்தில் ஒரு நைட் கிரீம் பயன்படுத்துவதே அடுத்த நாளுக்காக உங்கள் தோலை தயார் செய்ய போதுமானது.

  இந்த கட்டுரை உங்களுக்கு நைட் கிரீம்-ன் 10 நன்மைகளை விளக்குகிறது. இந்த குறிப்புகள் நீங்கள் நைட் கிரீம் உபயோகப்படுத்தவும், இரவு தூங்க செல்லும் முன் இதை ஒரு வழக்கமாக தொடரவும் ஊக்குவிக்கும். பகலில் மட்டும் நம்முடைய சருமத்தை க்ரீம்கள் தடவி,அழகுபடுத்திக் கொண்டால் போதாது. இரவிலும் அதற்கென தனியே கிடைக்கிற சில க்ரீம்களைப் பயன்படுத்தி, சருமத்தைப் பாதுகாக்கவும் செய்ய வேண்டும்.

  ஈரப்பதம்

  ஈரப்பதம்

  சூரியக் கதிவீச்சு மற்றும் தினசரி மாசுபாடு என்பது முகத்தின் நீரிழப்பு தன்மைக்கு முதன்மை காரணியாகும். இது தவிர, தவறான உணவு பழக்கம் மற்றும் ஜங்க் உணவுகள் போன்றவை தோலை மேலும் சேதமடைய செய்கிறது.

  இன்றைய இளைய தலைமுறையின் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையின் காரணமாக அவர்கள் தேவைக்கும் குறைவான அளவு தண்ணீரே பருகுகின்றனர். எனவே இது அவர்களுக்கு நீரிழப்பை ஏற்படுத்துகிறது. நைட் கிரீம்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கான உயிர் ஆற்றல்மிக்க தாவரங்களின் அம்சத்தைக் கொண்டுள்ளது.

  நெகிழ்வுத்தன்மை

  நெகிழ்வுத்தன்மை

  கன்னங்களின் நெகிழ்ச்சி தன்மை நிறைய காரணிகளால் பாதிக்கப்படுகிறது. இந்த மிக முக்கியமான காரணங்கள் வைட்டமின் குறைபாடு ஆகும். முந்தைய குறிப்பை போலவே, உணவு பழக்க வழக்கங்களும் காரணமாக இருக்கலாம். நைட் க்ரீம்களில் இருக்கும் இரட்டை வைட்டமின்கள் தோலில் உள்ள வைட்டமின்களை மீட்டெடுத்து, மென்மையான மற்றும் அழகான கன்னங்களை பெற உதவுகிறது.

  தோல் பிரகாசம்

  தோல் பிரகாசம்

  பிரபலமான கிடைக்கும் நைட் கிரீம்கள் நுண்படிக சூத்திரங்களை அடிப்படையாக கொண்டவை. இந்த நைட் க்ரீம்களின் முக்கிய பொருட்களில் கிளிசரைன் ஒன்றாகும். இதன் காரணமாக, இத்தகைய கிரீம்கள் தோலை ஹைட்ரேட் செய்வதோடல்லாமல், உங்கள் வாழ்நாள் முழுவதுக்குமான இயற்கை அழகை மற்றும் பிரகாசத்தையும் கொடுக்கும்.

  இயற்கை ஒளியை பெற நீங்கள் விரும்புவீர்களானால், இரவில் கிரீம் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருங்கள். எப்போதாவது நைட் கிரீம் பயன்படுத்துவீர்களானால் உங்களால் இந்த மாற்றத்தை உணர முடியாது.

  இரத்த ஓட்டம்

  இரத்த ஓட்டம்

  இரத்த ஓட்டம் என்பது தோல் பராமரிப்பு பொருட்களின் உறிஞ்சுதலை ஊக்குவிப்பதாகும். இரத்த ஓட்டம் இரவில் அதிக அளவு உள்ளது. இதனால், உங்கள் தோல் பராமரிப்பு பொருட்களை (குறிப்பாக ஈரப்பதமாக்குதல் கிரீம்) இரவில் பயன்படுத்துவது ஒரு நல்ல நடைமுறையாகும். இந்த நைட் கிரீம் அதிகபட்ச நன்மைகளை உங்கள் தோலில் உட்செலுத்தும் என்பது உறுதி மற்றும் நீங்கள் ஜொலிப்பாகவும் மற்றும் அழகாவும் இருக்கவும் உதவும்.

  மென்மை

  மென்மை

  பெரும்பாலும், நாள் முழுவதும் (நீங்கள் பயன்படுத்தும் அழகு பொருட்கள் உட்பட) வீக்கம் மற்றும் எரிச்சல் விளைவாக முகம் பாதிக்கப்பட்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஒரு லேசான நைட் கிரீம்கள் பயன்படுத்தி முகத்தை அழகாக மட்டுமல்லாமல் நாள் முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் விளைவுகளை செயலிழக்க உதவுகிறது.

  சரும நிறம்

  சரும நிறம்

  (வெள்ளை) நிற மற்ற கிரீம்கள் பாலில் மட்டுமே வேலை செய்யும் என்பது ஒரு கற்பனை. தோல் நிறமூட்டல் கிரீம்கள் பகலில் மட்டுமே வேலை செய்யும் என்பது ஒரு கட்டுக்கதை.உண்மையில், இந்த நாட்களில் பெரும்பாலான நைட் கிரீம்கள் தோல் நிறமூட்டல் காரணிகளைக் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து நைட் க்ரீம்களைப் பயன்படுத்துகையில், நீங்கள் இன்னும் அதிகமாக தோலின் தொனியைக் கொண்டிருப்பதைக் காணலாம். மேலும் உங்கள் நிறத்தை இரண்டு நிழல்கள் பிரகாசமாக மாற்றிவிட்டதை உணரலாம்.

  முதிர்ச்சியற்ற தன்மைகள்

  முதிர்ச்சியற்ற தன்மைகள்

  சந்தையில் ஏராளமான ஆன்டி- ஏஜெய்ங் நைட் க்ரீம்கள் உள்ளன. இந்த நைட் கிரீம்கள் தோலில் ஏற்படும் வரிகள் மற்றும் சுருக்கங்கள் மீது அதிசயங்களை ஏற்படுத்த குறிப்பாக 30 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயமாக நைட் க்ரீம்கள் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.

  கொலாஜன் உற்பத்தி

  கொலாஜன் உற்பத்தி

  மார்க்கெட்டுகளில் கிடைக்கும் எந்தவொரு நைட் கிரீமும் தோலின் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த மிக முக்கியமானதொரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இதன் விளைவாக, தோலின் மென்மை மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உங்கள் வயதைக் காட்டிலும், நன்றாகவும்இளமையாகவும் உங்களால் உணர முடியும்.

  மசாஜ்

  மசாஜ்

  நைட் கிரீம் பொதுவாக இரண்டு விரல்களைப் பயன்படுத்தி, மென்மையாக மேல்நோக்கிய இயக்கத்தில் அவற்றைப் பயன்படுத்துவது தான் சிறந்தது. பொதுவாக க்ரீம்கள் கீழ்நோக்கி அப்ளை செய்யும்போது, சருமம்தளர்வடைய ஆரம்பித்துவிடும். அதனால் எப்போதும் மேல்நோக்கித் தான் தடவ வேண்டும். இதன் விளைவாக தோலை மசாஜ் செய்து, மிகவும் தளர்வானதாக உணர வைக்கிறது. இதன் விளைவாக நீங்கள் மிகவும் அமைதியான தூக்கத்தை பெறமுடிகிறது. நைட் கிரீம் கொண்டு சரியாக செய்தால், இந்த எளிய செயல் உங்கள் தோல் தொங்கிப்போவதிலிருந்து தடுக்கிறது.

  வடுக்கள், கரும்புள்ளி

  வடுக்கள், கரும்புள்ளி

  பிரபலமான நம்பிக்கைகளுக்கு மாறாக, நீங்கள் வடுக்கள் (அந்த காயங்களால் விளைந்திருக்கலாம்) மற்றும் கரும்புள்ளிகளை ஒழிக்கக் கூடிய விலையுயர்ந்த வடு குறைப்பு கிரீம் போட வேண்டியதில்லை. ஒரு எளிய இரவு கிரீமை ஒழுங்காகவும், வழக்கமாக நீண்ட காலமாகவும் பயன்படுத்தினால், இதுபோன்ற புள்ளிகளையும் வடுக்களையும் குறைக்கும் மற்றும் புள்ளிகளற்ற ஒளிரும் பளபளக்கும் சருமத்தை உங்களுக்குக் கொடுக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  10 Benefits Of Using Night Creams You Should Know

  Washing your face with a soap or face wash and then using a night cream on your face is enough to set things in place and prepare your skin for the next day.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more