உலகளவில் அழகுப்படுத்திக்கொள்ள செய்யப்படும் விசித்திர சிகிச்சைகள்!

Posted By: Aashika
Subscribe to Boldsky

அழகு என்ற பெயரிலும் அழகுக்காக என்று சொல்லியும் பல்வேறு சிகிச்சைமுறைகளை பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். நம் ஆரோக்கியத்தை பறைசாற்றும் சருமத்திற்காக அதன் பொலிவுக்காக என வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் சில வேடிக்கையான சிகிச்சைமுறைகளைப் பற்றி இங்கே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பறவையின் எச்சங்களில் பேஷியல் :

பறவையின் எச்சங்களில் பேஷியல் :

நியூயார்கில் பறவைகளின் எச்சங்களைக் கொண்டு பேஷியல் செய்யும் நடைமுறை இருக்கிறது.பொலிவான சருமத்திற்கு நைட்டிங்கேல் பறவையின் எச்சங்களை தான் பேஷியலுக்கு பயன்படுத்துகிறார்கள்.

பீர் குளியல் :

பீர் குளியல் :

ஐரோப்பின் பல இடங்களில் பீர் குளியல் மிகப்பிரபலம். இதுவும் சரும பொலிவிற்காக்வே மேற்கொள்ளப்படுகிறது.

வைக்கோல் குளியல் :

வைக்கோல் குளியல் :

இத்தாலியில் வைக்கோல் குளியல் செய்கிறார்கள். டென்சனை குறைக்க இந்த சிகிச்சை முறை என்று சொல்லப்படுகிறது. இந்த குளியல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

தாய்ப்பால் பேஷியல் :

தாய்ப்பால் பேஷியல் :

சிகாகோவில் தாய்ப்பால் பேஷியல் செய்யப்படுகிறது. தாய்ப்பாலில் இருக்கும் லாரிக் ஆசிட் என்ற அமிலம் சென்சிட்டிவ் ஸ்கின்னுக்கு நல்லதாம்.

ரத்தகாட்டேரி :

ரத்தகாட்டேரி :

இது பயங்கரமானது இருக்கும். நம் உடலில் உள்ள் ரத்தைத்தை வைத்தே பேஷியல் செய்வார்கள். கடந்த 2009 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள எட்மாண்டன் என்ற இடத்தில் ஆறிமுகப்படுத்தப்பட்ட இந்த பேஷியல் இன்று பல நாடுகளில் பரவியிருக்கிறது.

நத்தை ஊறும் :

நத்தை ஊறும் :

தாய்லாந்தில் இந்த பேஷியல் செய்யப்படுகிறது. ஸ்நைல் மசாஜ் என்று சொல்லப்படும் இது செய்யப்படுவதால் சரும சுருக்கத்தை கட்டுப்படுத்தும் என்று சொல்கிறார்கள்.

ஹிமாலியன் டச் :

ஹிமாலியன் டச் :

ஹிமாலியாவில் இது செயப்படுகிறது. உப்பு நிரப்பி, இதமான நிறத்தில் ஒரு பெட், மங்கிய வெளிச்சம், தூரத்தில் கேட்கும் இசை என அமைதியான சூழல் நிலவும். பெட்டைச் சுற்றி தண்ணீர் ஓடும், அந்த பெட்டில் அமைதியாக நாம் படுத்துக் கொள்ளலாம். அந்த சுழல் நல்ல தூக்கத்தை உருவாக்கும், மன இறுக்கத்தை போக்கி... புத்துணர்ச்சி பெற இதை செய்யலாம்.

கரணம் தப்பினால் மரணம் :

கரணம் தப்பினால் மரணம் :

க்ரியோதெரபி என்று சொல்லப்படும் இந்த முறையில் மரணம் ஏற்படக்கூட வாய்புகள் அதிகம். ஃபின்லாண்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் ஆங்காங்கே இது செய்யப்படுகிறது. க்ரியோஜெனிக் சேம்ப்பர் என்று சொல்லப்படும் ஒரு அறையில் செயற்கையாக மிகக் குறைந்த வெப்பநிலையை ஏற்படுத்தியிருப்பார்கள் அந்த அறைக்குள்ளே குறிப்பிட்ட நொடிகள் வரை இருந்துவிட்டு வந்திட வேண்டும், இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், மற்றும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்குமாம்.

முதலை கழிவு :

முதலை கழிவு :

பேஷியல் எல்லாம் முடிந்த பிறகு முதலையின் கழிவை பேஸ் மாஸ்காக போடுகிறார்கள்.பல ஆண்டுகளுக்கு முன்பு க்ரீக் மற்றும் ரோமனில் இது நடைமுறையில் இருந்திருக்கிறது, தற்போது அது மீண்டும் புத்தாக்கம் பெற்றுள்ளது.

முடிகளை வளர்க்கம் விந்து :

முடிகளை வளர்க்கம் விந்து :

லண்டனில் முடிக்காக பின்பற்றப்படும் இந்த சிகிச்சை முறையில் மாட்டின் விந்தணு பயன்படுத்தப்படுகிறது. முடிக்காக எடுக்கப்படும் சிகிச்சை முறைகளில் இதுவும் ஒன்று. இரானிய செடி ஒன்றுடன் மாட்டின் விந்தணுவைக் கலந்து முடியில் தடவினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்குமாம் அந்த கலவையில் அதிகப்படியான ப்ரோட்டின் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அடிச்சு அடிச்சு விளையாடலாம் :

அடிச்சு அடிச்சு விளையாடலாம் :

தாய்லாந்தில் அழகாகவும் நீண்ட நாட்கள் இளமையாகவும் இருக்க இந்த ஸ்லாப்பிங் தெரபி செய்கிறார்கள். 15 நிமிடங்களுக்கு 300லிருந்து 400 டாலர் வரை கட்டணம் வசூலிக்கப்படும் இந்த சிகிச்சை முறையில் என்ன செய்வார்க்ள் தெரியுமா? 15 நிமிடங்களும் நம் முகத்தில் அறைவார்கள்! இப்படிச் செய்வதால் நம் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, சுருக்கம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: bodycare haircare skin care
English summary

Weird Things People Do For Beauty!

The most 11 insane things people are doing for beauty