For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கரும்புள்ளி உங்க முகத்துல இருக்கா? அதை நீக்கும் அருமையான வழிகள்!!

சரும அழகை அதிகரிக்க எலுமிச்சையை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

By Bala Karthik
|

அழகு பயன்பாடுகளுக்கு எழுமிச்சை எவ்வாறு உதவுகிறது? என்பதனை தெரிந்துகொள்ளுமுன்...அப்படி என்ன தான் எழுமிச்சையில் இருக்கிறது? என முதலில் பார்க்கலாம். இந்த எலுமிச்சையில் தேவைக்கேற்ப வைட்டமின்களும், புரத சத்துகளும் நிறைந்திருக்க...அது நம் சருமத்தை பல வழிகளில் பேணி பாதுகாக்க முன் வருகிறது.

Uses Of Lemon For Skin Care

சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த பழம், நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் முக்கியமான ஒன்றாகவும் இருக்கிறது. இந்த எலுமிச்சையின் பயன்பாட்டினை நாம் ஆராய்ந்தால்...சருமத்தை காக்கவும் கூந்தலை மேம்படுத்தவும் அது முன் வருவதனை நம்மால் பார்க்க முடிகிறது.

எழுமிச்சையில் அதிகளவில் வைட்டமின் C இருக்க...அது உங்கள் சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களையும் தரவல்லதாகவும் விளங்குகிறது. அது உங்கள் சருமமாக இருந்தாலும் சரி...கூந்தலாக இருந்தாலும் சரி. இங்கே எலுமிச்சை பழத்தினால் எளிதாக நாம் காண கூடிய சில மருத்துவ தீர்வுகளை இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கை ப்ளீச் :

இயற்கை ப்ளீச் :

இந்த எழுமிச்சை பழத்தில் வைட்டமின் C அதிகமிருக்க, அது உங்கள் சருமத்தை இயற்கையிலே பளபளக்க செய்ய வல்லதாகவும் இருக்கிறது. ஆம், இந்த எழுமிச்சையில் இருக்கும் இயற்கை பளபளப்பு தன்மை, நம்முடைய தோல்களை வெளிர் நிறத்தில் வைத்துகொள்ள பெரிதும் உதவுகிறது. அத்துடன் முகத்தில் தோன்றும் கரும் பட்டைகளையும் அது போக்க உதவுகிறது.

உங்கள் முழங்கால்கள், முழங்கைகள் கரு நிறத்துடன் காணப்பட... சீரற்ற பட்டைகளும் தோன்றுகிறது என்றால்...அந்த பகுதியில் எழுமிச்சை ஜூஸை நாம் தடவுவதன் மூலம் சரியாகிறது. ஒரு மாதக்காலத்துக்கு இந்த முறையை நீங்கள் பின்பற்றிவர...வித்தியாசத்தை கண்டு கண் குளிர்ந்து நிற்பது உறுதி.

 கரும்புள்ளி பிரச்சனைகளுக்கு தீர்வு:

கரும்புள்ளி பிரச்சனைகளுக்கு தீர்வு:

எலுமிச்சை ஜூஸின் உதவியுடன் இந்த கரும்புள்ளி பிரச்சனைக்கு நம்மால் தீர்வினை எளிதில் காண முடியும்.

இந்த எழுமிச்சை ஜூஸில் அத்தியவாசிய பண்புகள் அதிகமிருக்க...அது, உங்கள் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளி பிரச்சனைகளை நீக்கி, சருமத்தை மென்மையாகவும், குறைபாடற்றதாகவும் வைக்க உதவுகிறது.

ஒரு எழுமிச்சை துண்டினை எடுத்துகொள்ளுங்கள். அதன் மீது சமையல் சோடாவை தெளியுங்கள். அந்த கலவையை கொண்டு தினமும் மசாஜ் செய்து வர, குறைபாடற்ற சருமத்தை கண்டிப்பாக நீங்கள் பெறுவீர்கள்.

சருமத்தை சுத்தமாக்க:

சருமத்தை சுத்தமாக்க:

எலுமிச்சை பழத்தை கொண்டு உங்களுடைய சருமத்தை தூய்மையாக வைத்துகொள்ள முடியும். இந்த எலுமிச்சை பழத்தில் காணப்படும்...புரத சத்துகளும், வைட்டமின்களும், சிட்ரிக் அமிலங்களும் அதிகளவில் இருக்க.

மேலும் இது முகத்தில் இருக்கும் அழுக்குகளையும், தூசிகளையும் நீக்க பெரிதும் உதவுகிறது. இயற்கை டோனராக வேலை செய்யும் இந்த எழுமிச்சை...

உங்கள் சருமத்தை மிளிர செய்வதுடன் அழகாகவும் மாற்றுகிறது.எலுமிச்சை கொள்ளுங்கள். அந்த கலவையை, காட்டன் பாலின் உதவியுடன் தேய்த்து வர அது உங்கள் சருமத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

 கூடுதல் பளபளப்பை பெற என்ன வழி:

கூடுதல் பளபளப்பை பெற என்ன வழி:

இந்த எலுமிச்சையில் சக்திவாய்ந்த பளபளப்பை தரும் சக்தி அதிகம் இருக்கிறது. இது உங்கள் சருமத்திலிருக்கும் கூடுதல் மிளிர்விற்கு சிகிச்சையாக அமைகிறது. எலுமிச்சை ஜீஸை எடுத்துகொள்ளுங்கள்.

அதனை முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். நன்றாக முகம் முழுவதும் மசாஜ் செய்து, அப்படியே சிறிது நேரத்திற்கு விட்டுவிடுங்கள். அதன்பின்னர், மிதமான சுடு தண்ணீரை கொண்டு முகத்தை கழுவுங்கள்.

எழுமிச்சையை முகத்தில் தேய்ப்பது, எண்ணெய் பிசுபிசுப்பு சருமம் கொண்ட பலருக்கும் சிகிச்சையாக அமைகிறது. அத்துடன், அது அதிகமிருக்கும் எண்ணெய்யையும் சருமத்தை விட்டு நீக்க வல்லதாகும்.

 தழும்பை போக்க :

தழும்பை போக்க :

முகப்பரு வடுக்கள் அல்லது கரும்புள்ளிகள் சருமத்தில் தோன்ற, அது பல பிரச்சனைகளுக்கு ஆதிப்புள்ளியாக அமைகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வாக எலுமிச்சைஜூஸ் இருக்கிறது.

மேலும் இந்த எலுமிச்சை ஜூஸுக்கு, சருமத்தை வெளிர் நிறத்தில் மாற்றும் பண்பு இருக்க, அது உங்கள் சருமத்தில் தோன்றும் கரும்புள்ளியையும், கறைகளையும் போக்குகிறது. இது நம்மிடம் தோன்றும் உயர் நிறமிகளுக்கு சிகிச்சையாக அமைய...தோல் நிறத்தையும் சரியான முறையில் பாதுகாக்க உதவுகிறது.

நகங்களை வலுப்படுத்துவது எப்படி:

நகங்களை வலுப்படுத்துவது எப்படி:

எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயிலின் கலவையை கொண்டு உங்கள் நகத்தை வலுப்படுத்துவதோடு ஆரோக்கியமாகவும் வைத்துகொள்ள அது பயன்படுகிறது.

இந்த கலவையை கொண்டு உங்கள் நகத்தை தினமும் மசாஜ் செய்ய, அது உங்கள் நகத்தை வலுப்படுத்துவதோடு, இயற்கை நீரேற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது. மேலும் எழுமிச்சை, உங்கள் நகத்தின் மஞ்சள் மற்றும் வெளிர் நிறத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

வெடிப்புற்ற உதடுகளுக்கு சிகிச்சை:

வெடிப்புற்ற உதடுகளுக்கு சிகிச்சை:

எலுமிச்சைஎழுமிச்சையை எடுத்துகொண்டு அத்துடன் சர்க்கரையையும் சேர்த்துகொள்ள வேண்டும். அதனை உங்கள் உதடுகளில் தடவிகொள்ள வேண்டும்.

சில மணி நேரம் காத்திருந்து குளிர்ந்த நீரினை கொண்டு உதட்டை துடைக்க வேண்டும். இந்த எலுமிச்சையின் மூலமாக நம் சருமத்திலிருக்கும் கரு நிற செல்கள் எளிதாக நம்மை விட்டு செல்கிறது.

உலர்ந்த மற்றும் சீரற்ற சருமத்தை தவிர்ப்பது எப்படி:

உலர்ந்த மற்றும் சீரற்ற சருமத்தை தவிர்ப்பது எப்படி:

சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கும் பண்பு இந்த எலுமிச்சைக்கு இருக்கிறது. அது, உங்களுடைய உலர்ந்த சருமத்தையும் சீரற்ற சருமத்தையும் குணப்படுத்த வல்லது. எலுமிச்சையை எடுத்துகொண்டு...அத்துடன் தயிரையும் சேர்த்துகொள்ள வேண்டும்.

இப்பொழுது உங்கள் முகத்தையும், உடம்பினையும் மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் கழித்து...குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும்.

இந்த முகமூடி போன்றதனை கொண்டு வரண்ட, அரிப்பு ஏற்படும் மற்றும் அழற்சியான சருமத்தில் பயன்படுத்திவர, நம்மை விட்டு அது நீங்குகிறது. எலுமிச்சை சிகிச்சை என்பது உலர்ந்த சருமத்தை கொண்டவர்களுக்கு அருமையான வைத்தியமாக இருக்கிறது.

முகப்பரு சிகிச்சை:

முகப்பரு சிகிச்சை:

எலுமிச்சை ஜூஸை எடுத்துகொள்ளுங்கள். அதனை தேனுடன் கலந்து கொள்ளுங்கள். அதனை உங்கள் முகத்திலிருக்கும் பருக்கள் மீது தடவுங்கள். அதன் பின்னர், சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினை கொண்டு கழுவுங்கள். இந்த தீர்வின் மூலம்...உங்கள் சருமத்தில் தோன்றும் பரு மற்றும் முகப்பரு பிரச்சனைகளுக்கு அது சிறந்ததோர் வைத்தியமாக அமைகிறது.

மூடிய துளைகளை தெளிவுபடுத்துவது எப்படி:

மூடிய துளைகளை தெளிவுபடுத்துவது எப்படி:

எலுமிச்சைபழம், தெளிவுபடுத்தும் ஒரு பொருளாக அமைந்து சருமத்தில் காணும் துளைகளுக்கான சிகிச்சையாகவும் இருக்கிறது. துளைகள் அடைக்கப்பட்டுவிட..அது தான் பருக்கள் மற்றும் முகப்பருக்களின் தோற்றம் என கூறுகின்றனர்.

இந்த பிரச்சனையை எழுமிச்சை பழத்தின் உதவியுடன் நம்மால் சரி செய்ய முடிகிறது. எலுமிச்சை ஜூஸை எடுத்துகொள்ளுங்கள்.

அத்துடன், தேங்காய் எண்ணெய்யையும் சேர்த்து கொள்ளுங்கள். அதனை கொண்டு உங்கள் சருமத்தை மசாஜ் செய்து, அதன் பின்னர் குளிர்ந்த நீரினை கொண்டு கழுவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Uses Of Lemon For Skin Care

Uses Of Lemon For Skin Care
Story first published: Thursday, June 8, 2017, 15:44 [IST]
Desktop Bottom Promotion