உங்க சருமம் 20 வயது போல் மின்னனும்னா இந்த 1 பொருளை மட்டும் யூஸ் பண்ணிப் பாருங்க!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

மோர் என்பது ஏழைகளின் கூல் ட்ரிங்க்ஸ் . அந்த நாள் முதல் இந்த நாள் வரை, மோருக்கான மகத்துவம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வெயில் காலங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து நம்மை காத்து குளிர்விப்பதில் மோருக்கு இணை வேறு எந்த குளிர் பானமும் இல்லை என்பது எந்த தயக்கமும் இன்றி தெரிவிக்கலாம்.

மோர் என்பது பால் பொருட்களை கொண்டு உருவானதாகும். வெப்பமயமான நாடுகளில் இந்த மோர் கிடைக்கிறது.

Skin care benefits of Buttermilk and different ways to use it

மோர் இரண்டு விதத்தில் தயாரிக்கப்படுகிறது. பாலில் இருக்கும் க்ரீமை கடைந்து வெண்ணெய் எடுத்து அதில் மீதம் இருப்பது ஒரு வகை மோர். இதுவே பாரம்பரிய வகை மோர். மற்றொன்று, பாலை புளிக்க வைத்து அதில் இருந்து வருவது.

மோர் ஒரு ஆரோக்கிய பானமாகும். இன்றைய நவீன உணவு பண்டங்களில் டிப்ஸ், ஸ்மூத்திஸ் , சூப்ஸ் , சாலட் போன்றவற்றில் மோர் சேர்க்கப்படுகிறது.

பால் பொருட்களில் ஒவ்வாமை இருப்பவர்கள் கூட புளித்த மோரை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கு கால்சியம் தேவை பூர்த்தியடைகிறது. மோரில் வைட்டமின் ஏ , டி, பி 12 அதிகமாக உள்ளது. மற்றும் கால்சியம், பொட்டாசியம், புரதம், செலினியம், பொஸ்போரோஸ் மற்றும் ப்ரோபையோட்டிக் அதிகமாக உள்ளது. இது குறைந்த அளவு கொழுப்பும் கலோரிகளும் கொண்டது.

இதன் அதிக அளவு ஊட்டச்சத்தின் காரணமாக பல்வேறு ஆரோக்கிய மற்றும் அழகு குறிப்புகளில் மோர் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுள் சில வற்றை நாம் இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும நிறத்தை அதிகரிக்கிறது :

சரும நிறத்தை அதிகரிக்கிறது :

மோரில் புரதம் மற்றும் லாக்டிக் அமிலம் அதிகமாக உள்ளது. இந்த அமிலம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி சருமத்தின் இயற்கை அழகை திரும்ப பெற உதவுகிறது. மேலும் இந்த அமிலம், சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.

½ கப் கடலை மாவுடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு மோர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இதனை சருமத்தில் தடவி, நன்றாக காய விடவும். விரல்களை நீரில் நனைத்து சருமத்தில் காய்ந்த மாஸ்க்கை மெதுவாக உரித்து எடுக்கவும். பின்பு நீரால் சருமத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் நல்ல சரும பொலிவு கிடைக்கும்.

மோருடன் குங்குமப் பூ :

மோருடன் குங்குமப் பூ :

ஒரு துளி குங்குமப்பூவை எடுத்து ½ கப் மோரில் சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் விட்டு விடவும். 30 நிமிடம் கழித்து, அந்த கலவையை எடுத்து சருமத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். தினமும் இதனை பின்பற்றலாம்.

கருந்திட்டுக்கள் நீங்க :

கருந்திட்டுக்கள் நீங்க :

மோரில் லாக்டிக் அமிலம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் அதிகமாக உள்ளது. இவை சரும பராமரிப்பு சாதனங்களில் தழும்புகளை மற்றும் திட்டுக்களை போக்க பயன்படுத்தப்படுகின்றன. லாக்டிக் அமிலம் சருமத்தில் இறந்த செல்களை உரித்து கருந்திட்டுக்களை போக்குகின்றன.

சரும திட்டுக்கள் உள்ள இடத்தில் மோரை ஒரு பஞ்சால் தடவவும். 5 நிமிடம் கழித்து அந்த இடத்தை நீரால் கழுவவும். திட்டுக்கள் குறையும் வரை ஒரு நாளில் இரண்டு முறை இதனை செய்யலாம்.

முகப்பரு தழும்பு நீங்க :

முகப்பரு தழும்பு நீங்க :

2 ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடருடன் மோர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து சருமத்தில் தடவவும். பின்பு மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரத்திற்கு 2-3 முறை இதனை செய்யலாம்.

சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதம்:

சூரிய ஒளியால் ஏற்படும் சரும சேதம்:

மோரில் இருக்கும் லாக்டிக் அமிலம், சருமத்தில் சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது. இதன் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை , சருமத்தை மென்மையாக்குகிறது . சருமத்தில் ஏற்படும் சேதத்தை குணப்படுத்துகிறது.

பாதி தக்காளியுடன் ¼ கப் மோரை சேர்த்து கலக்கவும்.ஒரு கை புதினா இலை சாறை இதனோடு சேர்க்கவும். இந்த கலவையை சருமத்தில் தடவவும். மெதுவாக காய விடவும்.தினமும் 1 முறை இதனை செய்யலாம்.

2 ஸ்பூன் மோருடன் 2 ஸ்பூன் தேனை சேர்க்கவும். கை விரல்களால் சருமத்தில் இந்த பேஸ்டை தடவவும். 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரால் சருமத்தை கழுவவும். தினமும் 2 முறை இதனை செய்யலாம்.

சருமத்தை தூய்மையாக்குகிறது :

சருமத்தை தூய்மையாக்குகிறது :

மோர் ஒரு சிறந்த க்ளென்சர் ஆகும் . சருமத்தில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. சருமத்திற்குள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான சருமத்தை பெற உதவுகிறது.

ஒரு பஞ்சை மோரில் நனைத்து முகத்தை துடைக்கவும். பிறகு முகத்தை நீரால் கழுவவும். இரவு உறங்க செல்லும் முன் இதனை செய்யலாம்.

ரோஸ் வாட்டர் மற்றும் மோரை சம அளவு எடுத்து அதில் சில துளி ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் பஞ்சை நனைத்து சருமத்தில் தடவினால், அழுக்குகள் வெளியேறும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். வாரத்தில் 3 முறை இதனை செய்து வரலாம்.

பொடுகை போக்குகிறது:

பொடுகை போக்குகிறது:

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் தலையில் ஏற்படும் பூஞ்சை தொற்றை நீக்கி பொடுகை போக்குகிறது. தலையில் வறட்சி ஏற்படும்போது , அரிப்பு மற்றும் பொடுகு தானாக தோன்றும். ஆகையால் மோர், சரும வறட்சியை தடுக்க பெரிதும் உதவுகிறது,

உச்சந்தலையில் மோரை தடவி, 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும். வாரத்தில் 4 முறை இதனை செய்வதால் பொடுகு குறையும்.

 முடி உதிர்வை தடுக்க :

முடி உதிர்வை தடுக்க :

எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ½ கப் மோர் சேர்த்து கலக்கவும். இதனை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து தலையை அலசவும். வாரத்திற்கு 3 முறை இதனை செய்யலாம்.

இன்னும் பலவகையான நன்மைகள் மோரில் உள்ளது. ஆகவே மோரை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை பெறலாம் என்பதை உணர்ந்து இவை முயற்சித்து களங்கமற்ற சருமத்தை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Skin care benefits of Buttermilk and different ways to use it

Skin care benefits of Buttermilk and different ways to use it
Story first published: Tuesday, October 24, 2017, 8:30 [IST]
Subscribe Newsletter