பாதங்கள் வெடிப்பின்றி மிருதுவாக இருக்கனுமா? இதை செஞ்சு பாருங்க!!

Posted By:
Subscribe to Boldsky

பாதவெடிப்பு நிரந்தரமான பிரச்சனையாக பெரும்பாலோனோருக்கு இருக்கின்றது. எப்படியும் வந்துவிடுகிறது என்பதாலேயே நிறைய பேர் அதனை கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.

தினமும் இரவு தூங்கும்போது வெறும் அரை நிமிடம் செலவழித்தால் போதும். உங்கள் பாதங்கள் எப்போதும் வெடிப்பின்றி மிருதுவாக இருக்கும். கண்டுகொள்ளாமல் விடும்போது பாளமாக வெடித்து வலி ஏற்படுகின்றது.

Simple Home remedies to heal cracked heels faster

அதுவும் குளிர்காலத்தில் பாதத்தை காலில் ஊன்றும்போது வலி தாங்க முடியாத தொல்லையாக அமையும். பாதத்தில் போதுமான ஈரத்தன்மை இல்லாதபோது பாதங்கள்வெடிக்க ஆரம்பிக்கும். அதே போல் உடல் எடை அதிகரிக்கும்போதும் கொழுப்புத் திசுக்கள் உடைந்து பாரம் தாங்காமல் சதை வெடிக்க ஆரம்பிக்கும். இதனையே நாம் பாத வெடிப்பு என்று கூறுகின்றோம்.

உங்கள் பாதத்தை வெடிப்பின்றியும் மிருதுவாகவும் வைக்க உதவும் குறிப்புகளை நாங்கள் கூறுகின்றோம். பயன்படுத்திப் பாருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமையல் சோடா :

சமையல் சோடா :

சமையல் சோடாவை பேஸ்ட் போல் செய்து உங்கள் பாதங்களை ஈர்ப்படுத்தி பாதங்களில் தெய்க்கவும். அரை நிமிடம் நன்றாக ஸ்கர்ப் செய்து கழுவிக் கொள்ளுங்கள். இவை வெடிப்பில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி மிருதுவாக்குகிறது. இதனால் விரைவில் பாத வெடிப்பு மறையும்.

வாழைப்பழம் :

வாழைப்பழம் :

வாழைப்பழத்தை நன்றாக மசித்து வெடிப்பின் மேல் தேயுங்கள். சில நிமிடங்களில் கழுவுங்கள். இவை ஒரே வாரத்தில் பாத வெடிப்பை மறையச் செய்து மிருதுவான பாதத்தை தரும்.

வாசலின் :

வாசலின் :

வாசலினை எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் கழுவுங்கள். சாக்ஸ் போட்டுக் கொள்வதால் இன்னும் நல்லது.

ஆலிவ் மற்றும் லாவெண்டர் :

ஆலிவ் மற்றும் லாவெண்டர் :

ஆலிவ் எண்ணெயில் சில துளி லாவெண்டர் எண்னெய் கலந்து பாத வெடிப்புகளில் தடவுங்கள். இது அற்புதமான ரிசல்ட்டை தரும். விரைவில் வெடிப்பிலிருந்து குணம் பெறுவீர்கள்.

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய் :

மிகச் சிறந்த தீர்வு இது. விளக்கெண்ணெயை சூடுபடுத்தி மஞ்சள் கலந்து தூங்குவதற்கு முன் வெடிப்பில் இந்த எண்ணெயை பூசிக் கொண்டு படுங்கள். இவை ஒரு சில நாட்களில் வெடிப்பை போக்கும்.

வினிகர் :

வினிகர் :

வினிகரை சிறிது எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து பாதங்களை அதில் 10 நிமிடம் தினமும் ஊற வைக்கவும். பின்னர் ஸ்கர்ப் செய்யுங்கள். மிக விரைவில் பலன் தரும். மேலும் வெடிப்பு உண்டாகாமலும் தடுக்கும்.

தேன் :

தேன் :

தேன் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அதே அளவு பால கலந்து பாதத்தில் தடவவும். மறு நாள் காலையில் கழுவுங்கள். இது பாதங்களை மிருதுவாக்கும். சொரசொரப்புத்தன்மையை நீக்கும்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் :

ஓட்ஸை பொடித்து அதனைக் கொண்டு தினமும் பாதங்களை ஸ்க்ரப் செய்யுங்கள். இவை கால்களை மிருதுவாக்குவதோடு, பாதங்களை அழகாக்கு. ஓஸினால் தேய்க்கும்போது பாதங்களின் பக்கவாட்டில் இருக்கும் கருமையை எளிதில் மறையச் செய்யும்.

 எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

ஓட்ஸுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இன்னும் நல்ல பலன்களை தரும். ஓட்ஸை பொடி செய்து அவற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதத்தில் தேயுங்கள். சில நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த குறிப்பு இன்னும் வேகமாக பலனைத் தரும்.

 லிஸ்டெரின் :

லிஸ்டெரின் :

லிஸ்டெரின் வினிகர் மற்றும் நீர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பாத வெடிப்புகளில் தடவுங்கள். அல்லது இவை கலந்த நீரில் 15 நிமிடம் பாதங்களை ஊற விடுங்கள். இவை விரைவில் வெடிப்பை குணப்படுத்தும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் :

பாதம் மூழ்கும் அளவிற்கு நீரை வெதுவெதுப்பக எடுத்துக் கொண்டு அதில் ஆப்பிள் சைடர் வினிகரை 1 மூடி கலந்து பாதங்களை 10 நிமிடம் ஊற வைகக்வும். வாரம் 3 நாட்கள் செய்தால் வெடிப்பு மறையும். தவிர பாத வெடிப்பு வருவதை தடுக்கலாம்.

டெட்டால் :

டெட்டால் :

தினமும் டெட்டால் கலந்த நீரில் பாதத்தை கழுவுங்கள். இவை நக மற்றும் பாதங்களில் தங்கும் கிருமிகளை அழிக்கின்றது. பின்னர் மாய்ஸ்ரைஸர் க்ரீம் போட வேண்டும்.

கற்றாழை :

கற்றாழை :

தினமும் இரவில் கற்றாழை ஜெல்லை பாதங்களில் தடவி படுத்துக் கொள்ளுங்கள். இவை வெடிப்பைப் போக்குவதோடு, பாதத்தில் உருவாகும் சுருக்கம், கருமை, போன்றவற்றை மறையச் செய்து பஞ்சு போல் ஆக்கும்.

விட்டமின் ஈ :

விட்டமின் ஈ :

விட்டமின் ஈ கேப்ஸ்யூலில் இருக்கும் எண்ணெயை எடுத்து தினமும் வெடிப்புகளில் தடவினால் மிக விரைவில் வெடிப்பு மறையும். பாதங்களும் சுருக்கமின்றி அழகாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Home remedies to heal cracked heels faster

Simple Home remedies to heal cracked heels faster
Story first published: Friday, January 5, 2018, 11:03 [IST]