கர்ப்பமாக இருக்கும் போது பருக்கள் வந்தா எப்பிடி கையாளலாம் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்பமாக இருக்கும் போது, அது பெண்களுக்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திடும். வாழ்வின் மகிழ்ச்சியான பக்கங்களை அணுகும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களால் கர்ப்பிணிகளுக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு. கர்ப்பமாக இருக்கும் போது முகத்தில் தோன்றும் பருக்களை மறைக்க சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாமா? மருந்து மாத்திரைகள் சாப்பிடலாமா என்று சந்தேகம் வரும்.

செயற்கையான மருந்துகளை விட இயற்கையான பொருட்களே பருக்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பம் :

கர்ப்பம் :

ஒவ்வொருவரும் வாழ்வின் முக்கியமான பகுதியாக நினைப்பது இந்த கர்ப்ப காலத்தை தான். ஆனால் அப்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முகத்தில் பரு, கரும்புள்ளி போன்றவை ஏற்படும். பெரும்பாலும் முதல் ஆறு மாதங்களில் தான் இப்படி ஏற்படும்.

இந்த நாட்களில் தான் உடலில் அதிகப்படியான ஆன்ட்ரோஜென்ஸ் உற்பத்தியாகும். இது சருமத்தில் அதிகப்படியான எண்ணையை சுரக்கச் செய்திடும். அதோடு சருமத்தில் ஏராளமான பாக்டீரியாக்கள் உருவாவதற்கும் காரணமாகிடும்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகரை காட்டனில் நனைத்து முகத்தை துடைக்கலாம் இவை உங்கள் முகத்தில் டோனராக செயல்படும். எரிச்சல் ஏற்ப்பட்டால் ஆப்பிள் சிடர் வினிகருடன் தண்ணீர் கலந்து முகத்தில் தேய்க்கலாம்.

தேன் :

தேன் :

தேன் இயற்கையாக ஆன்ட்டி செப்டிக்காக செயல்படும். பருக்கள், கரும்புள்ளி , போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பரு உள்ள இடத்தில் அல்லது சருமத்தில் எங்கேனும் அலர்ஜி அரிப்பு போன்று ஏற்ப்பட்டால் அந்த இடத்தில் தேனை தடவிக் கொள்ளுங்கள் அரைமணி நேரம் கழித்து கழுவி விடலாம்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

சரும வறட்சியை போக்குவதில் மிக முக்கிய இடம் வகிப்பது தேங்காய் எண்ணெய் தான் அத்துடன் இதிலிருக்கும் ஆன்ட்டி ஃபங்கல் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் துகள்கள் சருமத்தை பாதுகாக்க உதவிடுகிறது.

மஞ்சள் :

மஞ்சள் :

தழும்புகளை போக்கும் மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாகவும் இருக்கிறது. மஞ்சளுடன் தண்ணீர் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தேய்த்து அது காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.

ஆலிவ் வேரா :

ஆலிவ் வேரா :

சருமத்திற்கு மிகவும் உகந்தது இது. இது சருமத்திற்கு குளிர்ச்சியைத் தரும். பருக்கள் உள்ள இடத்தில் இதனை அப்ளை செய்துகொள்ளுங்கள். கழுவ வேண்டும் என்று அவசியமில்லை ஜெல்லை சருமம் உறிஞ்சிக் கொள்ளும் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pimples during pregnancy

How to treat pimples during pregnancy
Story first published: Tuesday, August 1, 2017, 10:56 [IST]
Subscribe Newsletter