For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலுவலகம் செல்லும்போது ஈஸியாக மேக்கப் செய்யனுமா? இப்படி ட்ரை பண்ணுங்க!!

அலுவலகம் செல்வதற்கான மேக்கப் முறைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

திருமணம் ஆகாதவரை பெண்களுக்கு மேக்கப் போடுவதற்கு நிறைய நேரம் உண்டு. திருமணமான பெண்களுக்கு அலுவலகம் புறப்படும் வரை கிச்சனில் வேலை இருந்து கொண்டு தான் இருக்கும்.

சரியாக தலை சீவி பொட்டு வைத்து கொண்டு போவதற்கும் நேரம் இருக்காது. ஆனால் அலுவலகம் செல்லும்போது குறைந்த அளவு மேக்கப் நல்லது தான்.

நம்மை இன்னும் தன்னம்பிக்கை உடையவர்களாக அது காட்டும். ஆகவே உங்கள் நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி இந்த மேக்கப்களை முயற்சித்து பாருங்கள். உங்களை நீங்களே இன்னும் அழகாக உணர்வீர்கள் !

Office make up tips to get a better look

இதுவரை மேக்கப் போடாதவர்கள் அல்லது மேக்கப் போடுவதில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் எளிதாக இருக்க கூடியது இந்த மேக்கப். திருமணம் ஆனவர் ஆகாதவர் என்று அனைவரும் அலுவலகம் செல்லும் முன் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை முயற்சித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகத்தை கழுவுங்கள்:

முகத்தை கழுவுங்கள்:

  • நன்றாக குளித்து முடித்த பின் மேக்கப் போடுவதை தொடங்க வேண்டும்.
  • சருமம் சுத்தமாக மேக்கப்பை ஏற்றுக்கொள்ளும்படி இருக்க வேண்டும்.
  • குளித்து வெகு நேரம் ஆகி இருந்தால், சிறிதளவு வெதுவெதுப்பான நீரை முகத்தில் தெளித்து கழுவலாம் அல்லது க்ளென்சரை பயன்படுத்தலாம்.
  • சூடான நீரை பயன்படுத்தி கழுவ கூடாது. இதனால் முகம் வறண்டு காணப்படலாம்.
  • BB (Beauty Balm ) கிரீம் :

    BB (Beauty Balm ) கிரீம் :

    • BB கிரீம் என்பது மாய்ஸ்ச்சரைசேர், பவுண்டஷன் மற்றும் சன்ஸ்க்ரீன் ஆகியவை சேர்ந்த ஒரு க்ரீம்.
    • முகத்தில் உள்ள சின்னச்சின்ன புள்ளிகள் மற்றும் களங்கங்கள் மறைக்கப்பட்டு முகச் சருமம் ஒரே மாதிரியாக தோன்ற இந்த க்ரீம் உதவும்.
    • உங்கள் விரல் நுனியால் முகம் , கழுத்து , காது போன்ற எல்லா இடங்களிலும் தடவவும்.
    • இந்த கையடக்க கிரீமை உங்கள் பையில் எப்போதும் வைத்திருப்பது நல்லது.
    • கன்சீலர் :

      கன்சீலர் :

      தெளிவான சருமம் உடையவர்கள் இதனை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. BB கிரீம் பயன்படுத்தியும் மறைக்கப்படாத புள்ளிகள் மற்றும் கருவளையங்களை கன்சீலர் போட்டு மறைக்கலாம். உங்கள் விரல்களை இதற்கு பயன்படுத்துவது சீரான தோற்றத்தை ஏற்படுத்தும்.

      உதட்டு சாயம்:

      உதட்டு சாயம்:

      எளிய வகை மேக்கப் என்பதால்,உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற வகையில் மென்மையான நிறங்களை தேர்ந்தெடுத்து உதட்டுச்சாயத்தை அணியலாம். பொதுவாக பிங்க் நிறம் பளிச்சென்று இருக்கும். உதடுகளுக்கு லிப் லைனர் பயன்படுத்தி லிப் கிளாஸ் தடவுங்கள். ப்ரஷ் கொண்டு உதட்டுச்சாயத்தை சரி செய்து கொள்ளுங்கள்.

      கண்களுக்கான மேக்கப்:

      கண்களுக்கான மேக்கப்:

      கண்களை எப்போதும் பிரகாசமாக வைத்திருங்கள். கண்ணுக்கு கீழ் இமையில் மை இட்டுக் கொள்ளலாம் . கருப்பு அல்லது க்ரே போன்ற பொதுவான நிறங்களை தேர்ந்தெடுங்கள்.

      கண்களின் மேல் இமையில் ஐ லைனர் அல்லது ஜெல் பென்சில் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் மஸ்காரா பயன்படுத்தலாம். வெப்ப நிலை அதிகமானால் கண்களில் இருந்து வழிந்து வர வாய்ப்புகள் உண்டு.

      மேக்கப் போடுவதற்கான சில குறிப்புகள்:

      மேக்கப் போடுவதற்கான சில குறிப்புகள்:

      எடுப்பான தோற்றம் பெற சரியான நிறங்களை தேர்ந்தெடுங்கள் நீடித்து நிலைக்கும் தன்மை உடைய ஒப்பனைகளை வாங்கி பயன்படுத்துங்கள். அலுவலகம் என்பது அடிக்கடி மேக்கப்பை சரிபார்க்கும் இடம் அல்ல.

      பயன்படுத்த சுலபமான ஒப்பனைகளை வாங்க வேண்டும். தண்ணீர் பட்டால் பாதிப்பு உண்டாக்காத வாட்டர் ப்ரூப் ஒப்பனைகள் சிறந்தது.

      விலை குறைவாக இருப்பதால் தர குறைவான பொருட்களை வாங்க வேண்டாம்.

      சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருப்பதால் மேக்கப்பிற்கு பிறகு சருமத்தில் கோடுகள் தோன்றாமல் இருக்கும். உடலையும் நீர்ச்சத்தோடு வைத்திருக்க வேண்டும்.

      எப்போதும் கையில் டிஷ்யூ பேப்பரை வைத்திருக்க வேண்டும்.

      என்ன வாசகர்களே! எளிமையான முறையில் மேக்கப் போடுவதை பற்றி தெரிந்து கொண்டீர்களா? கொஞ்சம் ட்ரை செய்து பாருங்கள். உங்கள் வீட்டு கண்ணாடியும் உங்களைப் பார்த்து கண் சிமிட்டும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Office make up tips to get a better look

Office make up tips to get a better look
Story first published: Thursday, September 14, 2017, 14:52 [IST]
Desktop Bottom Promotion