முகத்தில் இருக்கும் மருக்களை போக்க அற்புதமான உபயோகக் குறிப்புகள்!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

மருக்கள் பொதுவாக வைரல் தொற்றால் உருவாகுகிறது. இந்த கொப்புளம் போன்று இருக்கும் மருக்கள் உங்கள் உடம்பின் எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் வரலாம்.

இந்த மருக்களின் வெளி தோற்றத்தை பார்க்கும் போது அது உங்கள் அழகை கெடுக்கும் விதத்தில் இருப்பதாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இதை பாதுகாப்பாக நீக்குவதும் முக்கியமானது. அதற்கு சில இயற்கை முறைகள் உள்ளன. இந்த இயற்கை பொருட்களில் உள்ள ஆன்டி பாக்டீரியல் குணங்கள் இதனை எளிதாக நீக்குகிறது.

Natural Ingredients You Can Use To Remove Warts For Good

எனவே இன்றைக்கு தமிழ் போல்டு ஸ்கை உங்கள் சருமத்தில் உள்ள மருக்களை சுத்தமாக அகற்றுவதற்கான இயற்கை முறைகளை கூற உள்ளது.

இந்த இயற்கை பொருட்கள் உங்களுக்கு பாதுகாப்பாகவும், செலவு குறைந்ததாகவும் இருப்பதோடு நல்ல பலனையும் கொடுக்கும். அதே மாதிரி இந்த இயற்கை பொருட்களை அன்றாடம் உபயோகித்து வரும் போது இந்த மாதிரியான சரும வளர்ச்சி மருக்கள் மீண்டும் வராமலும் தடுக்க முடியும்.

சரி வாங்க இப்பொழுது அந்த இயற்கை பொருட்களை பற்றி பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி

துளசி

துளசி ஒரு ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் அடங்கிய மூலிகை ஆகும். இது உங்கள் சருமத்தில் உள்ள மருக்களை எளிதாக நீக்க பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை

ஒரு கைப்பிடியளவு துளசியை எடுத்து அதை மிக்ஸியில் போட்டு பவுடர் மாதிரி அரைத்து கொள்ளவும். பிறகு இந்த பவுடருடன் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை மருக்கள் உள்ள இடத்தில் பூசவும். பிறகு 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். இதை தினமும் பயன்படுத்தி வந்தால் மருக்களின் மீதான பலனில் நல்ல மாற்றத்தை காணலாம்.

 பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடர்

பேக்கிங் பவுடர் ஒரு ஆன்டி பாக்டீரியல் பொருட்களை உள்ளடக்கிய பொருளாகும். இந்த பவுடர் மருக்களை நீக்குவதோடு மீண்டும் மருக்கள் வராமல் காக்கவும் செய்கிறது.

பயன்படுத்தும் முறை

கொஞ்சம் பேக்கிங் பவுடர் மற்றும் 1 டீ ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை மருக்கள் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கூடிய விரைவில் மருக்கள் காணாமல் போய் விடும்.

டீ ட்ரி ஆயில்

டீ ட்ரி ஆயில்

உங்கள் சருமத்தில் உள்ள மருக்களை நீக்க டீ ட்ரி ஆயில் மற்றொரு சிறந்த பொருளாகும். இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்களால் மருக்களை ஏற்படுத்தும் வைரஸ்களை எதிர்த்து போராடி அதிலிருந்து காக்கிறது.

பயன்படுத்தும் முறை

2-3 சொட்டுகள் டீ ட்ரி ஆயிலுடன் 1/2 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து அந்த கலவையை மருக்களின் மீது தடவ வேண்டும். சில நிமிடங்கள் கழித்து சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

ஆரஞ்சு தோல் பொடி

ஆரஞ்சு தோல் பொடி

ஆரஞ்சு தோல் பொடியில் அதிகப்படியான விட்டமின் சி உள்ளது. இது நமது சருமத்தில் அசிங்கமாக தோன்றும் மருக்களை நீக்குகிறது.

பயன்படுத்தும் முறை

1/2 டீ ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி யுடன் 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து மருக்களின் மீது தடவ வேண்டும். அப்புறம் ஒரு பத்து நிமிடங்கள் விட்டு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள அசிடிக் தன்மை இயற்கையாகவே மருக்களை நீக்குகிறது.

பயன்படுத்தும் முறை

ஆப்பிள் சிடார் வினிகருடன் தண்ணீர் சேர்த்து அந்த கலவையை மருக்களின் மீது தடவ வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தினமும் பயன்படுத்தி வந்தால் சீக்கிரமாகவே நல்ல மாற்றத்தை காணலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் அடங்கிய பொருளாகும். இது மருக்களை தடுத்து அகற்றுகிறது.

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லை மருக்களால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் அப்படியே விட வேண்டும். பிறகு சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத்தோலில் உள்ள சத்துக்கள் மருக்களை அகற்றும் குணம் நிறைந்தததாக உள்ளன.

பயன்படுத்தும் முறை

வாழைப்பழத் தோலை மருக்கள் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். பிறகு 5-10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு ஒரு முறை என்று இதை செய்து வந்தால் மருக்களிலிருந்து விடுதலை பெறலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டில் அடங்கியுள்ள பொருட்கள் மருக்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இந்த இயற்கை பொருட்களில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் மருக்கள் வருவதை தடுக்கிறது.

பயன்படுத்தும் முறை

பூண்டு பல்களை எடுத்து நன்றாக நசுக்கி கொள்ள வேண்டும். அதனுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் மாதிரி தயாரித்து கொள்ள வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் அப்படியே வைத்து சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை என பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

என்னங்க மேற்கண்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தி எளிதாக மாசு மருவற்ற முகத்தை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Ingredients You Can Use To Remove Warts For Good

Natural Ingredients You Can Use To Remove Warts For Good
Story first published: Sunday, November 26, 2017, 9:00 [IST]